பர்பத் மாவட்டம்

நேபாளத்தின் காண்டகி மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டம்

பர்பத் மாவட்டம் (Parbat District) (நேபாளி: पर्वत जिल्ला ), தெற்காசியாவில் நேபாள நாட்டின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தின் மாநில எண் 4-இல் அமைந்துள்ள பதினோறு மலைப்பாங்கான மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் குஷ்மா ஆகும்.

நேபாளத்தில் பர்பத் மாவட்டத்தின் அமைவிடம்

தவலாகிரி மண்டலத்தில் இம்மாவட்டம், 494 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டத்தின் மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1,57,826 ஆகும்.நேபாளத்தின் சிறிய மாவட்டங்களின் வரிசையில் இம்மாவட்டம் நான்காம் இடம் வகிக்கிறது. இம்மாவட்டத்தில் நாற்பத்தி ஏழு கிராம வளர்ச்சி மன்றங்களும், குஷ்மா எனும் நகராட்சியும் உள்ளது.

குஷ்மா நகராட்சியில் உள்ள குப்தேஷ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியின் போது திரளான பக்தர்கள் கூடுவர்.மேலும் இங்குள்ள பத்தேஷ்வரி அம்மன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. இம்மாவட்டத்தில் பத்து மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர் மின் நிலையம் அமைக்கப்பட்டது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

இமயமலையில் அமைந்த இம்மாவட்டம், கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 4,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, என நான்கு நிலைகளில் காணப்படுகிறது. [1]

கிராம வளர்ச்சி மன்றங்கள்

பர்பத் மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்

இம்மாவட்டம் ஒரு நகராட்சி மன்றத்தையும், நாற்பத்தி ஏழு கிராம வளர்ச்சி மன்றங்களும் கொண்டுள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பர்பத்_மாவட்டம்&oldid=3219943" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை