பாகலுங் மாவட்டம்

நேபாளத்தின் கண்டகி பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்டம்

பாகலுங் மாவட்டம் (Baglung District) (நேபாளி: बागलुङ जिल्ला ), நேபாளத்தின் கண்டகி மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் நேபாளத்தின் 75 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைநகரம் காளி கண்டகி ஆற்றின் கரையில் உள்ள பாகலுங் என்ற நகரம் ஆகும்.

நேபாள மாநில எண் 4-இல் பாகலுங் மாவட்டத்தின் அமைவிடம்

இம்மாவட்டம் 1,784 சதுர கிலோ மீட்டரும், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2,68,613 மக்கள் தொகையும் கொண்டது. [1]

கிராம வளர்ச்சிக் குழுக்களும், நகராட்சிகளும்

பாகலுங் மாவட்டத்தின் கிராம வளர்ச்சி சபைகளும், நகராட்சிகளும்

பாகலுங் மாவட்டம் 59 கிராம வளர்ச்சி சபைகளும், ஒரு நகராட்சி மன்றமும் கொண்டது. உயர்ந்த மலைப்பாங்கான பாகலாங் மாவட்டத்தில் பல மலை ஆறுகளையும், தொங்கும் பாலங்களையும் கொண்டது. இந்து சமயம் மற்றும் பௌத்த சமயங்களை மக்கள் பின்பற்றுகின்றனர். புன், தாபா, ராணா, மகர், செத்திரி, பிராமணர், நேவார் மக்கள், குரூங் மற்றும் தகாளி மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.

இம்மலை மாவட்டத்தில் மூலிகைச் செடிகள், நெல், சோளம், கோதுமை மற்றும் உருளைக் கிழங்கு அதிகம் பயிரிடப்படுகிறது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

பாகலுங் மாவட்டத்தின் கோடை கால அதிக பட்ச வெப்பம் 37.5 பாகை செல்சியஸ் ஆகவும், குளிர் கால குறைந்த பட்ச வெப்பம் -15 பாகை செல்சியஸ் ஆகவும் உள்ளது. இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 650 மீட்டர் உயரத்திலிருந்து 4,300 மீட்டர் உயரம் வரை இமயமலையில் பரவி உள்ளது.

நேபாளப் புவியியல்#தட்ப வெப்ப மண்டலங்கள்[2]உயரம்பரப்பளவு %
Upper Tropical climate300 - 1,000 மீட்டர்கள்2.8%
Subtropics1,000 - 2,000 மீட்டர்கள்37.1%
Temperate climate2,000 - 3,000 மீட்டர்கள்39.4%
மான்ட்டேன்#சப்-ஆல்பைன் மண்டலம்3,000 - 4,000 மீட்டர்கள்18.6%
மான்ட்டேன்# ஆல்பைன் புல்வெளிகள் & தூந்திரா4,000 - 5,000 மீட்டர்கள்2.1%

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாகலுங்_மாவட்டம்&oldid=3101327" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை