பானாசூரா மலை

கேரள மலை

பானாசூரா மலை (Banasura Hill) என்பது இந்தியாவின், கேரளத்தின், வயநாடு மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள மிக உயரமான மலைகளில் ஒன்றாகும். இந்திய புராணங்களில் வரும் பாத்திரமான பானாசூரனின் பெயரால் இந்த மலைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. செம்பரா மலைமுடிக்கு அடுத்து நீலகிரிக்கும் இமயமலைக்கும் இடையில் 2,000 மீட்டர் தாண்டிய மிக உயர்ந்த சிகரங்களில் இதுவும் ஒன்றாகும்.

பானாசூரா மலை
ബാണാസുര മല
பானாசூரா மலை ബാണാസുര മല is located in கேரளம்
பானாசூரா மலை ബാണാസുര മല
பானாசூரா மலை
ബാണാസുര മല
உயர்ந்த புள்ளி
உயரம்2,073 m (6,801 அடி)[1]
ஆள்கூறு11°41′39″N 75°54′29″E / 11.69417°N 75.90806°E / 11.69417; 75.90806
புவியியல்
அமைவிடம்இந்தியா, கேரளம், வயநாடு மாவட்டம், வைத்ரி வட்டம்
மூலத் தொடர்மேற்குத் தொடர்ச்சி மலை
ஏறுதல்
எளிய வழிHike
பqனசூரா மலையின் ஒரு தோற்றம்
பானாசூரா மலை உச்சியைத் தொடும் மேகங்கள்

நிலவியல்

பானாசூரா மலை 2,073 மீட்டர்கள் (6,801 அடி) உயரம் கொண்டதாக உள்ளது. இது மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ளது. இது குற்றியாடியிலிருந்து மானந்தவாடி வரையிலான மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மானந்தவாடி  மிக அருகில் உள்ள நகரம் மற்றும் மிக அருகில் உள்ள மாநில போக்குவரத்துக் கழக பணிமனை ஆகும். அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை என்.எச் 766 ஆகும், இது கல்பற்றா வழியாக சுமார் 37 கி.மீ. தொலைவில் உள்ளது.  [ மேற்கோள் தேவை ]

மலையேற்ற வழிகள் மற்றும் பார்வையாளர் தகவல்கள்

வெள்ளமுண்டா கிராமத்தில் ஒரு திருப்பத்தை மேற்கொண்டு புலின்ஜால் வழியாக மலைமுடியை அடைய வேண்டும். புலின்ஜலில் இருந்து சுமார் 1.5 கி.மீ. தொலைவில் பனாசூரா மலை தங்கும் விடுதியை கடந்து செல்கிறீர்கள்.[2] விடுதியைத் தாண்டி சுமார் 500 மீட்டர் தொலைவில் சாகச பாதையைத் தொடங்குகிறது. வழியில் ஒரு இடிமுழக்க அருவி உள்ளது, உள்ளூர்வாசிகள் இதை "மீன்முட்டி" என்று அழைக்கிறார்கள். இந்த மலையில் மூன்று மணிநேரம் ஏறவேண்டும். அங்கிருந்து காணும் காட்சி கண்கவர் காட்சியாகும்.  பனாசூரா மலையில் மலையேற்றறம் மேற்கொள்ள மானந்தவடியில் அமைந்துள்ள வடக்கு வயநாடு வனக் கோட்ட அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். மலையின் அடிவாரத்தில் பானாசூர சாகர் அணை உள்ளது, இது இந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாகும். இந்த அணைப் பகுதியானது மலை மலையேற்றத்தைத் தொடங்கக்கூடிய மற்றொரு இடமாகும்.

தாவரங்களும், விலங்கினங்களும்

அடர்ந்த வெப்பமண்டல தாவரங்கள் வழியாக மலை உச்சியை நோக்கிச் செல்லும் கால்தடப் பாதை. இங்குள்ள தாவரங்களில் சில அரிய மருத்துவ மூலிகைகள் உள்ளன. வழியில் காணப்படும் விலங்கினங்களில் குரங்குகள், காட்டுப்பன்றிகள், மான்கள் யானைகள் ஆகியவ குறிப்பிடத்தகவை ஆகும்.

பழங்குடியினர் மற்றும் உள்ளூர் வரலாறு

பானாசூரா மலை அடிவாரத்தில் உள்ள நான்கு பழங்குடி குடியிருப்புகளானது பெரும்பாலும் குறிச்சியா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுடையன. குறிச்சியாக்கள் வீரம்மிக்க ஒரு பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர், மேலும் வில் மற்றும் அம்புகளை கையால்வதில் வல்லுநர்கள். வேளாண் பொருட்களுக்கு அதிக வரி விதித்ததற்காக கேரள வர்மா பழசி இராசா ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டபோது, ஆவர்களுக்கு எதிராக நீண்டகாலம் கொரில்லா போரை நடத்த வயநாட்டின் காடுகளில் மறைந்து இருந்தபோது, இந்த குறிச்சியா பழங்குடியினரிடம் தான் பழசி இராசா ஆதரவு கோரினார் . பழசி இராசா பிரித்தானிய படைகளை எதிர்கொள்ள இந்த பகுதியின் நிலவியல் அறிவைப் பயன்படுத்தினார். பானாசூரா மலைப் பகுதியில் உள்ள கரடுமுரடான நிலப்பகுதியும், அடர்த்தியான காடுகளும், குகைகளும், நீரோடைகளும், நீரூற்றுகளும் பழசி இராசாவுக்கு ஒரு சிறந்த மறைவிடமாக அமைந்தன .

மேலும் காண்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பானாசூரா_மலை&oldid=3925361" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்