பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர்

பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் (ஆங்கில மொழி: Falcon and Winter Soldier) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அதிரடி-சாகச அறிவியல் மீநாயகன் தொலைக்காட்சி குறுந்தொடர் ஆகும். இந்த தொடர் மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களான சாம் வில்சன் / பால்கன் மற்றும் பக்கி பார்ன்ஸ் / வின்டர் சோல்ஜர் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு டிஸ்னி+ ஓடிடி தளத்திற்காக 'மால்கம் ஸ்பெல்மேன்' என்பவர் உருவாக்கியுள்ளார்.

பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர்
வகை
உருவாக்கம்மால்கம் ஸ்பெல்மேன்
மூலம்
  • அடிப்படையில்: (பால்கன்)
    ஸ்டான் லீ
    ஜீன் கோலன்
  • அடிப்படையில்: (பக்கி பார்ன்ஸ்)
    ஜோ சைமன்
    ஜாக் கிர்பி
  • அடிப்படையில்: (வின்டர் சோல்ஜர்)
    எட் ப்ரூபக்கர்
    ஸ்டீவ் எப்டிங்
இயக்கம்கரி ஸ்கோக்லேண்ட்
நடிப்பு
  • அந்தோணி மேக்கி
  • செபாஸ்டியன் ஸ்டான்
  • டேனியல் ப்ரூல்
  • எமிலி வான்காம்ப்
  • வியாட் ரஸ்ஸல்
பிண்ணனி இசைஹென்றி ஜாக்மேன்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
பருவங்கள்1
அத்தியாயங்கள்6
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்அட்லான்டா
ஒளிப்பதிவுபி.ஜே.தில்லன்
ஓட்டம்தோராயமாக அத்தியாயம் ஒன்று 49–60 நிமிடங்கள்
ஆக்கச்செலவு$150 மில்லியன்
ஒளிபரப்பு
ஒளிபரப்பான காலம்மார்ச்சு 19, 2021 (2021-03-19) –
ஏப்ரல் 23, 2021 (2021-04-23)
Chronology
தொடர்புடைய தொடர்கள்மார்வெல் சினிமா யுனிவர்ஸ் தொலைக்காட்சி தொடர்கள்
வெளியிணைப்புகள்
தயாரிப்பு இணையதளம்

இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த தொடர் 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் நிகழ்வுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. இந்த தொடரை மார்வெல் ஸ்டுடியோ தயாரிக்க, 'மால்கம் ஸ்பெல்மேன்' தலைமையில், 'கரி ஸ்கோக்லேண்ட்' என்பவர் இயக்கியுள்ளார்.

மார்வெல் திரைப் பிரபஞ்ச திரைப்படத் தொடர்களில் நடித்த அந்தோணி மேக்கி மற்றும் 'செபாஸ்டியன் ஸ்டான்' ஆகியோர் சாம் வில்சன் மற்றும் பக்கி பார்ன்ஸ் என்ற பாத்திரங்களை மறுபரிசீலனை செய்கிறார்கள். இவர்களுடன் டேனியல் ப்ரூல், எமிலி வான்காம்ப், வியாட் ரஸ்ஸல் போன்ற நடிகர்களும் நடித்துள்ளனர். செப்டம்பர் 2018 ஆம் ஆண்டில் மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் டிஸ்னி+ க்காக பல வரையறுக்கப்பட்ட ஓடிடி தளத் தொடர்களை உருவாக்கி வருகிறது. இது மார்வெல் திரைப் பிரபஞ்ச திரைப்படங்களின் துணை கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டது. இந்தத் தொடர் மேக்கி மற்றும் ஸ்டானின் ஈடுபாட்டுடன் 2019 ஏப்ரலில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. கரி ஸ்கோக்லேண்ட் என்பவர் அடுத்த மாதம் இயக்குநராக பணியமர்த்தப்பட்டார்.

பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் மார்ச் 19 முதல் ஏப்ரல் 23, 2021ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது, மேலும் இது ஆறு அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் இரண்டாம் தொடர் ஆகும்.

கதைச் சுருக்கம்

இந்த தொடரின் கதை 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்ற திரைப்படத்தின் முடிவில் கேப்டன் அமெரிக்கா தனது கவசத்தை சாம் வில்சனிடம் ஒப்படைத்த பின்னர், சாம் வில்சன் உலகளாவிய சாகசத்தில் பக்கி பார்ன்ஸ் உடன் இணைகிறார். இது அராஜகக் குழுவான கொடி-ஸ்மாஷர்களுடன்[1] போராடும்போது சோதனைகளில் அவர்களின் திறமைகள் எப்படி வெளிக்கொண்டு வருகின்றனர் என்பது தான் கதை.[2][3]

கதை

முன்னதாக அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் கதைக்களத்தை தொடர்ந்து சாம் வில்சன் / பால்கன் கடைசியாக முந்தைய கேப்டன் அமேரிக்காவாக இருந்த ஸ்டிவ் ரோஜர்ஸால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இருந்தாலும் பால்கன் அடுத்த கேப்டன் அமேரிக்காவாக இருப்பதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் நிறைய பிரச்சனைகள் உருவாகும் என்பதால் வரலாற்று அருங்காட்சியகத்துக்கு கேப்டனின் கவசத்தை கொடுத்துவிடுகிறார்

குளிர்கால போர்வீரர் என்ற அடையாளத்துடன் ஒரு காலத்தில் ஹெட்ரா என்ற கொடிய அமைப்பினரால் மனதால் கட்டுப்படுத்தப்பட்ட சக்திகளை கொண்ட பக்கி பார்னஸ் இப்போது தனிமையாக காலத்தை கடத்தி வருகிறார். கொடியை உடைப்பவர்கள் (ப்ளாக் ஸ்மாஷர்ஸ்) என்ற தனிப்பட்ட அமைப்பை சார்ந்த மனிதர்கள் வலிமையை அதிகப்படுத்தும் மருந்தால் தங்களையும் அதிவலிமை மிக்க மனிதர்களாக மாற்றிக்கொண்டு நாசவேலைகளை செய்வதால் தடுக்க முயற்சிக்கும் சாம் வில்சன் மற்றும் பார்னெஸ் இப்போது புதிதாக கேப்டன் அமேரிக்காவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜான் வாக்கர் என்ற தேர்ந்த போர்வீரரும் அவருடைய நண்பருமான லெமார் என்ற பேட்டல் ஸ்டார் (மோதல் நட்சத்திரம்) என்ற அடையாளத்துடன் இருக்கும் இராணுவ வீரராலும் காப்பாற்றப்பட்டாலும் இந்த கொடிகளை உடைப்பவர்கள் என்ற அமைப்பினரை தடுக்க முடியவில்லை.

முன்னதாக சகோவியா என்ற நாட்டில் அவெஞ்சர்ஸ்க்கும் அல்ட்ரான் என்ற உயிருள்ள ரோபோட்டின் கட்டுப்படுத்தப்ட்ட இயந்திரமனிதர்களின் படைகளுக்கும் நடந்த பிரச்சனைகளால் உருவான போரால் குடும்பத்தை இழந்து வில்லனாக மாறிய ஜீமோ என்ற கொடிய வில்லனின் உதவியை கேட்டு அவரை சிறையில் இருந்து விடுவித்து அவருடைய உதவியுடன் மட்ரேப்பூர் என்ற சட்டங்களுக்கு அப்பாற்பட்ட பணக்கார குற்றவாளிகளின் உறைவிடமாக இருக்கும் ஒரு நகரத்துக்கு செல்கிறார்கள் அங்கே ஷேரன் கார்ட்டர் என்ற முன்னாள் உளவுத்துறையில் பணிபுரிந்த வீராங்கனையாக இருந்தவரின் உதவி கிடைக்கிறது.

அங்கே 'சக்திகளை கொடுப்பவர்' (பவர் ப்ரோக்கர்) என்ற அடையாளம் தெரியாத பணக்காரர் ஒருவரால்தான் இந்த வலிமைகளை கொடுக்கும் இரசாயனம் மறுமுறையாக உருவாக்கப்பட்டது என்றும் ஆனால் இப்போது செயல்படும் இந்த வலிமையானவர்களின் 'கொடிகளை உடைப்பவர்கள்' என்ற அமைப்பு தன்னிச்சையாக அதிகாரத்தை கைப்பற்ற நாசவேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறது என்றும் சாம் , பார்னஸ் மற்றும் ஜீமோ தெரிந்துகொண்டு கடைசியாக ஷேரன் கார்ட்டருடன் அங்கே நடந்த ஆபத்தான தாக்குதல்களை கடந்து வெளியே வருகின்றனர்.

சட்டத்துக்கு கட்டுப்பட்ட புதிய கேப்டன் அமேரிக்காவான ஜான் வாக்கர் தோல்வியுற்ற சமாதான பேச்சுவார்த்தையால் 'கொடிகளை உடைப்பவர்கள்' அமைப்பினரை முறைப்படி கைது செய்ய‌ நினைக்கும்போது மனசாட்சியற்ற அந்த குழுவினரின் தாக்குதலில் வாக்கரின் நெருங்கிய நண்பரான லெமார் எனும் பேட்டல்ஸ்டார் வீரமரணம் அடைகிறார் இதனால் கோபமுற்ற ஜான் வாக்கர் தனிப்பட்ட முறையில் தாக்கி கொடியை உடைப்பவர்கள் அமைப்பினரில் இருந்து லெமாரின் இழப்புக்கு காரணமான ஒருவரை மோசமாக கொல்லவும் இதனால் கோபமுற்ற அரசாங்க அதிகாரிகளின் அமைப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறார்.

நடந்த சம்பவங்களை யோசித்து தெளிவு பெற்ற சாம் வில்சன் சில காலம் பார்னெஸின் உதவியுடன் அவருடைய குடும்பத்தினருடன் தனிமையில் இருக்கிறார். கடைசியா கேப்டன் அமேரிக்காவின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறார். கொடிகளை உடைப்பவர்கள்' அமைப்பினரின் உலகநாடுகளின் அரசியல் தலைவர்களின் தாக்குதல் திட்டத்தை சாம், பார்னெஸ், கார்ட்டர் மற்றும் ஜான் வாக்கர் பெருமுயற்சியோடு தடுக்கின்றனர்.

கடைசியாக இந்த 'கார்ட்டர்' தான் எல்லாவற்றுக்கும் பிண்னணியாக இருந்த கொடிய பணக்காரரான 'சக்திகளை கொடுப்பவர் - பவர் ப்ரோக்கர்' என்று யாருக்கும் தெரியும் முன்பே கார்ட்டர் மற்றும் ஜீமோவால் 'கொடிகளை உடைப்பவர்கள்' அமைப்பின் அனைவரும் அழிக்கப்படுகின்றனர். 'கார்ட்டர்' உயர் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். 'சாம்' மற்றும் 'பார்னஸ்' இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். ஒரு தனியார் அமைப்பால் 'ஜான் வாக்கர்' இப்போது யு.எஸ். ஏஜண்ட் என்ற அடையாளத்துடன் தன்னிச்சையாக செயல்பட தொடங்குகிறார். கதை முடிவுக்கு வருகிறது.

நடிகர்கள்

  • அந்தோணி மேக்கி - சாம் வில்சன் / பால்கன்[4]
  • செபாஸ்டியன் ஸ்டான் - பக்கி பார்ன்ஸ் / வின்டர் சோல்ஜர்
  • டேனியல் ப்ரூல் - ஹெல்முட் ஜெமோ[5]
  • எமிலி வான்காம்ப் - ஷரோன் கார்ட்டர்
  • வியாட் ரஸ்ஸல் - ஜான் வாக்கர்

தயாரிப்பு

அக்டோபர் 2019 இல் ஜார்ஜியாவின் அட்லான்டாவில் படப்பிடிப்பு தொடங்கியது. 2020 மார்ச்சில் கோவிட்-19 பெருந்தொற்று[6] நோயால் தயாரிப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர் 2020 செப்டம்பரில் செக் குடியரசு நாட்டில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி அக்டோபர் 2020 இல் நிறைவு பெற்றது.[7]

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்