கோவிட்-19 பெருந்தொற்று

கடுஞ்சுவாசக் கோளாறு

கோவிட்-19 பெருந்தொற்று[6] என்பது கடுஞ்சுவாசக் கோளாறு கொரோனாவைரஸ் 2 (SARS‑ CoV‑ 2) என்ற தீநுண்மி காரணமாக ஏற்படும் கொரோனாவைரஸ் நோயின் (கோவிட்‑19) பெருந்தொற்றாகும்.[1] இது கொரோனாவைரஸ் பெருந்தொற்று என்றும் அறியப்படுகிறது. இந்நோயின் தொற்று முதன்முதலில் சீனாவின் வூகானில் 2019 திசம்பரில் அடையாளம் காணப்பட்டது.[7] சனவரி 30 அன்று கோவிட்-19 தொற்றை உலக அளவில் பொது சுகாதார அவசரநிலையாகவும், மார்ச் 11 அன்று ஒரு பெருந்தொற்றாகவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.[8][9] 20 ஏப்பிரல் 2024 அன்றைய நிலவரப்படி, 188 நாடுகளில், 24,77,40,899[4] பேர் பாதிக்கப்பட்டு, இவற்றுள் 50,17,139[4] பேர் உயிரிழந்துள்ளனர். இதில் {{{recovered}}}[4] பேர் மீண்டு வந்துள்ளனர்.

கோவிட்-19 பெருந்தொற்று
COVID-19 pandemic
100,000 மக்கள்தொகைக்கு உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் வரைபடம் (20 நவம்பர் 2022
வரை)

     >1000
     300–1000
     100–300
     30–100
     10–30
     0–10
     தொற்றுகள் இல்லை அல்லது தரவு இல்லை

உறுதிப்படுத்தப்பட்ட மொத்தத் தொற்றுகளின் வரைபடம்
உறுதிப்படுத்தப்பட்ட மொத்தத் தொற்றுகளின் வரைபடம் (20 நவம்பர் 2022
வரை)
  1,000,000+ உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்
  100,000–999,999 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்
  10,000–99,999 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்
  1,000–9,999 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்
  100–999 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்
  1–99 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்
  உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் இல்லை அல்லது தரவு இல்லை
உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் வரைபடம்
உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் வரைபடம் (20 நவம்பர் 2022
வரை)
  ஒரு மில்லியனுக்கு, 100+ இறப்பு உறுதிப்படுத்தப்பட்டது
  ஒரு மில்லியனுக்கு, 10–100 இறப்பு உறுதிப்படுத்தப்பட்டது
  ஒரு மில்லியனுக்கு, 1–10 இறப்பு உறுதிப்படுத்தப்பட்டது
  ஒரு மில்லியனுக்கு, 0.1–1 இறப்பு உறுதிப்படுத்தப்பட்டது
  ஒரு மில்லியனுக்கு, >0–0.1 இறப்பு உறுதிப்படுத்தப்பட்டது
  உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள் இல்லை அல்லது தரவு இல்லை
(மேலே இருந்து கடிகாரம் சுழலும் திசையில்)
  • தீவிர சிகிச்சை பிரிவில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, சிகிச்சை அளிக்கும் ஒரு செவிலியர்
  • தாய்பெய்யில் வாகனங்கள் மூலம் வைரசை அழிக்க செலுத்தப்படும் மருந்துகள்
  • ஆத்திரேலிய பல்பொருள் அங்காடியில் பீதியின் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.
  • மிலன் லினேட் வானூர்தி நிலையத்தில் சுகாதார சோதனைகள்
  • இத்தாலிய அரசாங்கத்தின் அவசர கூட்டம்
நோய்கோவிட்-19
தீநுண்மி திரிபுகடுஞ்சுவாசக் கோளாறு கொரோனாவைரஸ் 2 (SARS-CoV-2)[a]
அமைவிடம்உலகளவில்
முதல் தொற்றுஊகான், ஊபேய், சீனா[2]
நோயாளி சுழியம்ஊகான், ஊபேய், சீனா
30°37′11″N 114°15′28″E / 30.61972°N 114.25778°E / 30.61972; 114.25778
நாள்1 திசம்பர் 2019–present[3]
(4 ஆண்டு-கள், 4 மாதம்-கள் and 2 வாரம்-கள்)
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்24,77,40,899[4][5]
சிகிச்சை பெறுவோர்15,589,513
குணமடைந்த நோயாளிகள்{{{recovered}}}[4][5]
இறப்புகள்
50,17,139[4][5]
பிராந்தியங்கள்
188[5]

இந்த வைரஸ் பெரும்பாலும் மக்களிடையே நெருக்கமான தொடர்பின்போது[b] இருமல்,[c] தும்மல் மற்றும் பேசுவது ஆகியவற்றின் மூலம் உருவாகும் சிறிய நீர்த்துளிகள் வழியாகப் பரவுகிறது.[11][13] இந்த நீர்த்துளிகள் வழக்கமாக நீண்ட தூரம் காற்று வழியாக பயணிப்பதை விட தரையில் அல்லது மேற்பரப்பில் விழுகின்றன. சில நேரங்களில், தொற்றுள்ள மேற்பரப்பைத் தொட்டுவிட்டு, பின்னர் தங்களின் முகத்தைத் தொடுவதன் மூலமாகவும் மக்களுக்குத் தொற்று ஏற்படக்கூடும். .[11] அறிகுறிகள் தோன்றிய முதல் மூன்று நாட்களில் தொற்றுப் பரவல் வீரியமாக இருக்கும்,எனினும் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பும், அறிகுறிகளைக் காட்டாத மக்களிடமிருந்தும் தொற்று பரவ சாத்தியமுள்ளது.[11]

பொதுவான அறிகுறிகளில் காய்ச்சல், இருமல், சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் வாசனை உணர்வு இழப்பு ஆகியவை அடங்கும்.[10][14][15] நோய் தீவிரமடையும்போது நிமோனியா மற்றும் கடுமையான மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்படும்.[16] அறிகுறிகள் வெளிப்படும் கால இடைவெளியானது முதல் ஐந்து நாட்கள் வரை இருக்கும்; சிலநேரங்களில் இரண்டு முதல் பதினான்கு நாட்கள் வரைக்கூட இருக்கலாம்.[17][18] இத்தொற்றுநோய்க்கு அறியப்பட்ட தடுப்பூசி அல்லது குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு சிகிச்சை எதுவும் இல்லை.[10] அறிகுறி குறைப்பு சிகிச்சை மற்றும் ஆதரவு சிகிச்சை ஆகியவையே முதன்மை சிகிச்சைகளாக உள்ளன.[19]

பரிந்துரைக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளில் கை கழுவுதல், இருமும்போது ஒருவர் தம் வாயை மூடுவது, மற்றவர்களிடமிருந்து தூரத்தை பராமரித்தல், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் நபர்களைக் கண்காணித்தல் மற்றும் சுய தனிமைப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.[20] இதனால் உலகெங்கிலும் உள்ள அரசுத் தலைவர்கள் தங்கள் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள், ஊரடங்கு, பணியிட முன்னெச்சரிக்கைக் கட்டுப்பாடுகள் மற்றும் வசதிகளை மூடல் ஆகிய நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளனர். சோதனை திறனை அதிகரிக்கவும் பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்புகளை கண்டறியவும் பலர் பணியாற்றியுள்ளனர்.

இத்தொற்றுநோய் உலகளாவிய சமூக மற்றும் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளது.[21] இதனால் பெரும் பொருளாதார மந்தநிலைக்குப் பின்னர் உலகளவில் மிகப்பெரிய மந்தநிலை ஏற்பட்டுள்ளது.[22] இது விளையாட்டு, மத, அரசியல் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை ஒத்திவைக்க அல்லது ரத்து செய்ய வழிவகுத்தது. அச்சம் காரணமாக முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களை அதிக நபர்கள் வாங்கியதால் விநியோகப் பற்றாக்குறை ஏற்பட்டது.[23][24][25] ஊரடங்கால் மாசுபடுத்திகள் மற்றும் பசுமைக்குடில் வாயுக்கள் ஆகியவற்றின் வெளிப்பாடு குறைந்தது.[26][27] 177 நாடுகளில் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் நாடு முழுவதும் அல்லது உள்ளூர் அடிப்படையில் மூடப்பட்டுள்ளன. இது உலக மாணவர் தொகையில் சுமார் 98.6 விழுக்காட்டினரை பாதித்துள்ளது.[28] சமூக ஊடகங்கள் மற்றும் பொது ஊடகங்கள் ஆகியவற்றின் மூலம் வைரஸ் பற்றிய தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன.[29] சீன மக்களுக்கு எதிராகவும், சீனர்கள் அல்லது அதிக நோய்த்தொற்று விகிதங்கள் உள்ள பகுதிகளிலிருந்து வந்தவர்களாகக் கருதப்படுபவர்களுக்கும் எதிராக இனவெறி மற்றும் பாகுபாடு காட்டப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.[30][31][32]

கோவிட்-19 ஆரம்ப நிலை

சீனாவின், ஊபேய் மாகாணத்தின் தலைநகர் ஊகானில் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு வசிக்கும் சிலருக்கு, காரணம் தெரியாத நுரையீரல் அழற்சி ஏற்பட்டது. தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள், சிகிச்சைகள் யாவும் பயனளிக்கவில்லை.[33] இவ்வகை தீநுண்மி மக்களிடையே பரவியது, அத்துடன் அதன் பரவுதல் வீதம் (நோய்த்தொற்றின் வீதம்)[34] 2020 சனவரி நடுப்பகுதியில் அதிகரிப்பதாகத் தோன்றியது.[35] ஐரோப்பா, வடஅமெரிக்கா மற்றும் ஆசிய-பசிபிக் பகுதிகளில் பல நாடுகள் இத்தொற்றுகளைப் பதிவு செய்தன.[36] இத்தொற்றின் அறிகுறிகள் தோன்றுவதற்கு 2 முதல் 14 நாட்கள் வரை ஆகலாம். மேலும் இந்த நோயின் அறிகுறியில்லாதவர்களும் நோய்ப்பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என்பதற்கான தற்காலிகச் சான்றுகளும் அறிவிக்கப்பட்டன.[37][38][39] இத்தீநுண்மிக்கான அறிகுறிகள் காய்ச்சல், இருமல், தொண்டை வறட்சி, மூச்சுத் திணறல் போன்றவையும், மேலும் இறப்புகளும் ஏற்படலாம்.[38]

2020 பிப்ரவரி 15 தரவுகளின்படி, சீனாவின் அனைத்து மாகாணங்கள் உட்பட உலகளாவிய அளவில் 67,100 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டன[40] கொரோனாவைரசின் தொற்றால் முதலில் உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு 2020 சனவரி 9 அன்று பதிவானது,[41] அன்றுமுதல் 2020 பெப்ரவரி 15 வரை, 1,526 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.[40] இதனை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்; அவை கண்டறியப்படவில்லை என்று ஆய்வுகள் மதிப்பிடுகின்றன.[42] நோய்த்தொற்று ஏற்பட்டதாக உறுதிசெய்யப்பட்ட முதல் 41 பேரில், மூன்றில் இருவருக்கு ஊகான் கடலுணவுச் சந்தையுடனான நேரடித் தொடர்பு கண்டறியப்பட்டது. இச்சந்தையில் உயிருள்ள விலங்குகளும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.[3][43][44][45] சீனாவிற்கு வெளியே இத்தீநுண்மியின் முதல் பரவல் வியட்நாமில் நோயாளியின் மகனுக்குத் தொற்றியது.[46] அதே சமயம் குடும்பத்துடன் சம்பந்தப்படாத முதல் உள்ளூர் பரவல் செருமனியில் நிகழ்ந்தது, 2020 சனவரி 22 அன்று பவேரியாவிற்கு வந்திருந்த ஒரு சீன வணிகப் பார்வையாளரிடமிருந்து ஒரு செருமேனியர் இந்த நோயைப் பெற்றுக்கொண்டார்.[47] சீனாவிற்கு வெளியே முதலாவது இறப்பு பிலிப்பீன்சில் பதிவானது. 44-அகவையுடையவர் இத்தீநுண்மியால் பாதிக்கப்பட்டு 2020 பெப்ரவரி 1 இல் உயிரிழந்தார்.[48][49]

கோவிட்-19 பெருந்தொற்று[50]
இடங்கள்தொற்றுகள்இறப்புகள்
World[d]771,190,4396,961,001
European Union[e]184,086,6401,244,840
United States103,436,8291,127,152
China[f]99,315,126121,722
India44,999,328532,034
France38,997,490167,985
Germany38,437,756174,979
Brazil37,721,749704,659
South Korea34,571,87335,934
Japan33,803,57274,694
Italy26,082,645191,715
United Kingdom24,743,787229,765
Russia23,045,833400,077
Turkey17,004,677101,419
Spain13,980,340121,852
Vietnam11,623,84543,206
Australia11,613,41123,188
Argentina10,054,576130,472
Taiwan9,970,93717,672
Netherlands8,618,81522,986
Mexico7,692,369334,669
Iran7,618,727146,436
Indonesia6,813,429161,918
Poland6,523,692119,654
Colombia6,381,770142,942
Austria6,081,28722,534
Portugal5,621,01527,424
Ukraine5,520,483109,918
Greece5,405,74237,572
Chile5,288,83761,607
Malaysia5,129,13137,195
Israel4,839,88912,691
Belgium4,817,19634,339
Thailand4,757,60434,479
Canada4,716,20553,297
Czech Republic4,652,42942,851
Peru4,520,727221,704
Switzerland4,413,45214,055
Philippines4,114,68066,696
South Africa4,072,533102,595
Romania3,455,20768,341
Denmark3,417,0178,824
Hong Kong2,876,10613,466
Sweden2,717,14124,834
Singapore2,610,1081,872
Serbia2,556,02618,057
Iraq2,465,54525,375
New Zealand2,387,8583,361
Hungary2,206,31148,807
Bangladesh2,045,78929,477
Slovakia1,867,64721,167
Georgia1,855,28917,132
Jordan1,746,99714,122
Republic of Ireland1,721,1529,249
Pakistan1,580,63130,656
Kazakhstan1,502,85719,072
Norway1,489,4595,732
Finland1,486,08410,265
Slovenia1,345,3849,448
Lithuania1,330,3869,710
Bulgaria1,302,18838,414
Morocco1,276,95016,297
Croatia1,275,55918,358
Guatemala1,271,07020,235
Puerto Rico1,252,7135,938
Lebanon1,239,90410,947
Costa Rica1,238,8849,428
Bolivia1,209,08122,404
Tunisia1,153,36129,423
Cuba1,115,1038,530
Ecuador1,069,13936,043
United Arab Emirates1,067,0302,349
Panama1,047,5558,654
Uruguay1,039,2387,634
Mongolia1,011,1702,284
Nepal1,003,44412,031
Belarus994,0377,118
Latvia976,3167,384
Saudi Arabia841,4699,646
Azerbaijan833,18910,332
Paraguay735,87419,974
Palestine703,2285,708
Bahrain696,6141,536
Sri Lanka672,59016,882
Dominican Republic667,0734,384
Kuwait666,3912,570
Cyprus660,8541,364
Myanmar641,30719,494
Moldova623,68412,126
Estonia602,1872,902
Venezuela552,6955,856
Egypt516,02324,830
Qatar514,524690
Libya507,2696,437
Ethiopia501,0607,574
Réunion494,595921
Honduras474,58711,127
Armenia449,6508,751
Bosnia and Herzegovina403,18316,355
Oman399,4494,628
Luxembourg384,3781,000
Zambia349,2874,069
North Macedonia349,1049,946
Kenya343,9555,689
Albania334,0903,604
Botswana330,2842,800
Brunei311,614163
Mauritius309,8691,054
Kosovo274,0203,210
Algeria271,9286,881
Nigeria267,1463,155
Zimbabwe265,7715,718
Montenegro251,2802,654
Mozambique233,6542,249
Martinique230,3541,104
Afghanistan226,2207,950
Laos218,876671
Iceland209,142186
Guadeloupe203,2351,021
El Salvador201,8084,230
Trinidad and Tobago191,4964,390
Maldives186,694316
Uzbekistan174,1231,016
Namibia171,9984,098
Uganda171,8713,632
Ghana171,6531,462
Jamaica156,3863,607
Cambodia138,9413,056
Rwanda133,1941,468
Cameroon125,0901,974
Malta120,422882
Barbados110,059620
Angola105,9721,936
Democratic Republic of the Congo99,1811,468
French Guiana98,041413
Senegal89,0221,971
Malawi88,9862,686
Kyrgyzstan88,8891,024
Ivory Coast88,338835
Suriname82,5881,408
New Caledonia80,064314
French Polynesia78,632649
Eswatini75,0001,427
Guyana73,3881,299
Belize71,060688
Fiji69,047885
Madagascar68,3471,425
Jersey66,391161
Cabo Verde64,401415
Sudan63,9935,046
Mauritania63,772997
Bhutan62,69721
Syria57,4233,163
Burundi54,36615
Guam52,032417
Seychelles50,937172
Gabon48,992307
Andorra48,015159
Papua New Guinea46,864670
Curaçao45,883305
Aruba44,224292
Tanzania43,078846
Mayotte42,027187
Togo39,522290
Guinea38,563468
Bahamas38,084844
Isle of Man38,008116
Lesotho35,836709
Guernsey35,32667
Faroe Islands34,65828
Haiti34,344860
Mali33,157743
Cayman Islands31,47237
Saint Lucia30,145410
Benin28,036163
Somalia27,3341,361
Federated States of Micronesia26,54765
United States Virgin Islands25,389132
Republic of the Congo25,196389
San Marino24,695126
Timor-Leste23,460138
Burkina Faso22,056396
Solomon Islands21,611153
Liechtenstein21,49187
Gibraltar20,550113
Grenada19,693238
Bermuda18,860165
South Sudan18,368138
Tajikistan17,786125
Equatorial Guinea17,130183
Monaco17,02767
Tonga16,82712
Samoa16,77831
Marshall Islands16,13817
Nicaragua16,047245
Dominica15,76074
Djibouti15,690189
Central African Republic15,367113
Northern Mariana Islands14,29941
Gambia12,626372
Collectivity of Saint Martin12,32446
Vanuatu12,01914
Greenland11,97121
Yemen11,9452,159
Caribbean Netherlands11,92241
Sint Maarten11,05192
Eritrea10,189103
Saint Vincent and the Grenadines9,644124
Guinea-Bissau9,614177
Niger9,515315
Comoros9,109160
Antigua and Barbuda9,106146
American Samoa8,35934
Liberia7,930294
Sierra Leone7,766125
Chad7,698194
British Virgin Islands7,30564
Cook Islands7,1582
Turks and Caicos Islands6,63039
Saint Kitts and Nevis6,60746
Sao Tome and Principe6,59780
Palau6,2419
Saint Barthélemy5,5075
Nauru5,3931
Kiribati5,08524
Anguilla3,90412
Wallis and Futuna3,5508
Macau3,514121
Saint Pierre and Miquelon3,4262
Tuvalu2,9431
Saint Helena, Ascension and Tristan da Cunha2,166
Falkland Islands1,923
Montserrat1,4038
Niue887
Tokelau800
Vatican City260
Pitcairn Islands4
North Korea16
Turkmenistan00

இதனைக் கட்டுப்படுத்தும் முகமாக, ஊகான் உட்பட 57 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள், மற்றும் சுற்றியுள்ள ஊபேய் மாகாணத்தில் 15 நகரங்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பூட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டன, அனைத்து நகர்ப்புற பொதுப் போக்குவரத்து, தொடருந்து, வானூர்தி மற்றும் தொலைதூரப் பேருந்துகள் மூலம் வெளிப்புறப் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன.[51][52][53] பெய்ஜிங்கில் தடைசெய்யப்பட்ட நகர், பாரம்பரியக் கோயில் கண்காட்சிகள் மற்றும் பிற கொண்டாட்டக் கூட்டங்கள் உள்ளிட்ட பல சீனப் புத்தாண்டு நிகழ்வுகள் தடை செய்யப்பட்டன, சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன.[54] ஆங்காங்கும் அதன் தொற்று நோய்ப் பரவல் எச்சரிக்கை அளவை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி, அவசரநிலையை அறிவித்தது, 2020 பிப்ரவரி நடுப்பகுதி வரை அதன் பள்ளிகளை மூடிப் புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தடை செய்தது.[55][56]

ஊகான் மற்றும் ஊபேய் மாகாணத்திற்கான பயணங்களுக்கு எதிராக பல நாடுகள் எச்சரிக்கை விடுத்தன.[57]

சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட பயணிகள் குறைந்தது இரண்டு வாரங்களாவது தங்கள் உடல்நிலையை கண்காணிக்கவும், தீநுண்மியின் அறிகுறிகளைப் பற்றியும் அறிவிக்க மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.[58] கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கும் எவரும் ஒரு பாதுகாப்பு முகமூடியை அணிந்துகொண்டு மருத்துவரை நேரில் சென்று பார்வையிடுவதை விட மருத்துவரை தொலைத்தொடர்பு சாதனத்தின் உதவியால் மருத்துவ ஆலோசனையைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.[[59] சீனாவில் வானூர்தி நிலையங்கள் மற்றும் தொடருந்து நிலையங்கள் தீநுண்மியைக் காவுபவர்களை அடையாளம் காணும் முயற்சியாக மனித வெப்பநிலை சோதனைகள், சுகாதார அறிவிப்புகள் மற்றும் தகவல் கையொப்பங்களை செயல்படுத்தியுள்ளன.[60]

சீன அறிவியலாளர்கள் தீநுண்மியின் மரபணு வரிசையை விரைவாகத் தனிமைப்படுத்தித் தீர்மானித்தனர். அத்துடன் ஏனைய நாடுகள் இந்நோயைக் கண்டறிவதற்கான பிசிஆர் சோதனைகளைத் தாமாகக் கண்டறிவதற்காக சீனா தான் கண்டுபிடித்த மரபணு வரிசையை மற்ற நாடுகளுக்குக் கொடுத்தது.[61][62][63][64] 2019-nCoV தீநுண்மியின் மரபணு வரிசை 75 முதல் 80 சதவிகிதம் SARS-CoV உடன் ஒத்ததாகவும், 85 சதவிகிதத்திற்கும் அதிகமாக பல்வேறு வௌவால் கொரோனாவைரசுகளைப் போலவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.[65] ஆனாலும், இந்த வைரசு சார்சைப் போலவே ஆபத்தானதா என்பது தெளிவாக இல்லை.[61][62][63][64]

உலக சுகாதார அமைப்பு

2020 சனவரி 30 அன்று, இத்தொற்றுப் பரவலை ஒரு பொது சுகாதாரப் பன்னாட்டு அவசரநிலையாக (PHEIC) என உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்தது. இது 2009 ஆம் ஆண்டில் H1N1 தொற்றுநோய்க்குப் பின்னர் அறிவிக்கப்படுவது ஆறாவது முறையாகும்.[66][67][68][69]

2020 மார்ச் 12 அன்று, கோவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவித்து. உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனாவைரசு எதிராக அவசர மற்றும் தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து நாடுகளுக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டணியோ குட்டரெஸ் அறிவுறுத்தியுள்ளார்.[70]

நாடுகள் வாரியாக தொற்றுகள்

20 ஏப்பிரல் 2024 அன்றைய நிலவரப்படி, 188 நாடுகளில், 24,77,40,899[4] பேர் பாதிக்கப்பட்டு, இவற்றுள் 50,17,139[4] பேர் உயிரிழந்துள்ளனர். இதில் {{{recovered}}}[4] பேர் மீண்டு வந்துள்ளனர். இதில் ஐக்கிய அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தாலி

13 சூலை, 2020 நிலவரப்படி, இத்தாலியில் 243,061 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 34,954 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 194,928 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர். மார்ச் 21, அன்று மட்டும் 793 பேர் வைரசால் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பிறகு கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்ட நாடு இது. மார்ச் 19 அன்று, தொற்றுநோயால் 3,405 இறப்புகள் ஏற்பட்டதாக அறியப்பட்டபிறகு, உலகிலேயே அதிக கொரோனாவைரசு தொடர்பான இறப்புகளைக் கொண்ட நாடாக இத்தாலி இருந்தது.[71]

ஐக்கிய அமெரிக்கா

13 சூலை, 2020 நிலவரப்படி, ஐக்கிய அமெரிக்காவில் 3,366,515 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 137,191 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 988,656 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர். நாட்டின் வர்த்தக தலைநகரான நியூயார்க் நகரம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்தியா

23 மே , 2021 நிலவரப்படி, இந்தியாவில் 26,530,132 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 22,674 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 534,620 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

இலங்கை

13 சூலை, 2020 நிலவரப்படி, இலங்கையில் 2,454 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 11 பேர் உயிரிழந்துள்ளார் மற்றும் 1,980 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

பாக்கித்தான்

13 சூலை, 2020 நிலவரப்படி, பாக்கித்தானில் 248,872 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 5,197 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 156,700 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

தாய்லாந்து

13 சூலை, 2020 நிலவரப்படி, தாய்லாந்தில் 3,217 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 58 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3,088 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

ஈரான்

13 சூலை, 2020 நிலவரப்படி, ஈரானில் 257,303 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 12,829 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 219,993 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

மறைவு

கொரோனா நுண்நச்சுயிரி நோய் பற்றி முதலில் அறிவித்து சீன அரசை எச்சரித்த சீன மருத்துவர், 34 அகவை நிரம்பிய, இலீ வென்லியாங்கு (Dr. Li Wenliang) கொரோனா நுண்நச்சுயிரி பாதிப்பால் இறந்துவிட்டார்.[72]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை