மார்வெல் ஸ்டுடியோ

மார்வெல் இசுடியோசு (Marvel Studios) இந்த நிறுவனத்தை 1993 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை எல்லோராலும் மார்வெல் பிலிம்சு என அறியப்பட்டது. இது ஒரு அமெரிக்கா நாட்டு திரைப்பட நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பர்பாங், கலிபோர்னியாவில் உள்ள த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமாக உள்ளது. இதன் தலைமையிடமாக வால்ட் டிஸ்னி நிறுவனம் உள்ளது, இதன் தலைவர் கேவின் பிகே ஆவார்.

மார்வெல் இசுடியோசு
வகைதுணை நிறுவனம்
வகைசூப்பர்ஹீரோ புனைகதை
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்அவி ஆராட் (அதிபர்)[1]´
டாய் பிஸ்
தொழில்துறைதிரைப்படம்
உற்பத்திகள்மோஷன் பிக்சர்ஸ்
தாய் நிறுவனம்த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்
துணை நிறுவனங்கள்மார்வெல் இசை
மார்வெல் திரைப்பட புரொடக்சன்ஸ்
மாவல் திரைப் பிரபஞ்சம்
[2]

மார்வெல் இசுடியோசு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் பெரும்பாலும் பெரும்தொகை திரைப்படங்கள் ஆகும். இவ் திரைப்படங்களில் பெரும்பாலான திரைப்படங்கள் தமிழில் மொழி மற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் 2008 ஆம் ஆண்டு வெளியான அயன் மேன் முதல் 2023 ஆம் வெளியான தி மார்வெல்ஸ் வரை மார்வெல் திரைப் பிரபஞ்சத்திற்காக 33 திரைப்படங்களை தயாரித்துள்ளது. அத்துடன் 2021 முதல் ஒன்பது தொலைக்காட்சித் தொடர்களும் வெளியானது. இந்த திரைப்படங்கள் அனைத்தும் ஒருவருக்கொருவர் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கின்றன. மற்றும் மார்வெல் தொலைக்காட்சி என்ற நிறுவனம் மார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளது.

தி அவேஞ்சர்ஸ் (2012), அயன் மேன் 3 (2013), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), பிளாக் பான்தர் (2018), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), கேப்டன் மார்வெல் (2019) , அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019), இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019) மற்றும் இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் (2021) ஆகிய அனைத்தும் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த 50 படங்களில் உள்ளன, மேலும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் அதிக வசூல் செய்த படம் ஆகும், இது ஜூலை 2019 முதல் மார்ச்சு 2021 வரை எல்லா காலத்திலும் அதிக வசூலித்த திரைப்படம் ஆகும்.

இந்த நிறுவனம் மார்வெல் திரைப் பிரபஞ்சம் தவிர வேறு மார்வெல் கதாபாத்திரங்கங்களான எக்ஸ்-மென் மற்றும் இசுபைடர் மேன் திரைப்படத் தொடர்களையும் தயாரித்துள்ளது. இதில் வட அமெரிக்க வசூல் வருவாயில் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயை பெற்றது. மார்வெல் ஸ்டுடியோஸ் தொலைக்காட்சித் தொடர்களையும் உருவாக்கி வருகிறது. இந்த தொடர்கள் டிஸ்னி+ இல் ஒளிபரப்பாகிறது.

வரலாறு

மார்வெல் பிலிம்சு

1993 இல் மார்வெல் என்டர்டெயின்மென்டு குழுமத்துடனான டாய்பிஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, டாய்பிஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராக இருந்த அவி ஆராட் என்பவர் மார்வெல் பிலிம்ஸ் பிரிவு மற்றும் நியூ வேர்ல்டு என்டர்டெயின்மென்டின் துணை நிறுவனமான நியூ வேர்ல்டு பேமிலி பிலிம்வொர்க்ஸ் இன்க். ஆகியவற்றின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இது நியூ வேர்ல்டு இன் முன்னாள் தாய் நிறுவனமாகவும் பின்னர் தி ஆண்ட்ரூசு குழுமத்தின் துணை நிறுவனமாகவும் இருந்தது. அத்துடன் மார்வெல் புரொடக்சன்சு 1993 இல் புதிய வேர்ல்டு அனிமேஷனாக மாறியது.

திரைப்படம்

தொலைக்காட்சி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மார்வெல்_ஸ்டுடியோ&oldid=3855278" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை