அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்

மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த 2019 சூப்பர் ஹீரோ படம்

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (ஆங்கில மொழி: Avengers: Endgame) என்பது 2019 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது மார்வெல் வரைகதை குழுவான அவென்ஜர்ஸ் என்ற குழுவை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
இயக்கம்ரூசோ சகோதரர்கள்
தயாரிப்புகேவின் பிகே[1]
மூலக்கதைஅவென்ஜர்ஸ்
ஸ்டான் லீ
ஜாக் கிர்பி
திரைக்கதைகிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி
இசைஆலன் சில்வெஸ்டரி
நடிப்பு
ஒளிப்பதிவுரெண்ட் ஓபலோச்
படத்தொகுப்பு
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 26, 2019 (2019-04-26)(அமெரிக்க ஐக்கிய நாடு)
ஓட்டம்181 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$356 மில்லியன்
மொத்த வருவாய்$2.798 பில்லியன்[3][4]

இது 2018 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இருபத்தி இரண்டாவது திரைப்படமும் ஆகும். இந்த திரைப்படம் ரூசோ சகோதரர்கள்[5] இயக்கத்தில், கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி திரைக்கதையில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ், மார்க் ருஃப்பால்லோ, கிறிஸ் ஹோம்ஸ்வோர்த், ஸ்கார்லெட் ஜோஹான்சன், டான் செடில், ஜெர்மி ரேன்நேர், பால் ருத், பிரி லார்சன், கரேன் கில்லன், டானாய் குரைரா, பிராட்லி கூப்பர், ஜோஷ் புரோலின் போன்ற பலர் நடிப்பில் வெளியானது.

இப் படம் லாஸ் ஏஞ்சல்ஸில் 22 ஏப்ரல் 2019 அன்று திரையிடப்பட்டது, மேலும் ஐக்கிய அமெரிக்காவில் 26 ஏப்ரல் அன்று வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் இயக்கம், நடிப்பு, இசை மதிப்பெண், அதிரடி காட்சிகள், காட்சி விளைவுகள் ஆகியவற்றிற்கு விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டுக்களைப் பெற்றது.

இந்த படம் உலகளவில் $2.798 பில்லியனை வசூலித்தது. இது வெறும் பதினொரு நாட்களில் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் என்ற திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்த எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த முதல் படமாக அமைந்தது. 92 வது அகாடமி விருதுகளில் சிறந்த திரை வண்ணத்திற்கான பரிந்துரை, 25 வது விமர்சகர்களின் சாய்ஸ் விருதுகளில் மூன்று பரிந்துரைகள் (இரண்டை வென்றது) மற்றும் 73 வது பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகளில் சிறப்பு சிறந்த திரை வண்ணத்திற்கான பரிந்துரை உள்ளிட்ட பல விருதுகளும் பரிந்துரைகளும் இப்படத்திற்கு கிடைத்தன.

கதைச் சுருக்கம்

அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் என்ற பாகத்தில் தானோஸ் என்ற வில்லன் அனைத்து முடிவில்லா கற்களை கைப்பற்றி, தனது சக்தியின் மூலம் உலகில் உள்ள பாதி மக்களோடு பாதி அவெஞ்சர்ஸ் குடும்பத்தையும் அழித்து விடுகின்றான், இதன் தொடர்ச்சியாக இப்படம் ஆரம்பிக்கிறது.

விண்வெளியில் உயிருக்கு போராடிக்கொன்று இருக்கும் அயன் மேனை கேப்டன் மார்வல் காப்பாற்றி பூமிக்கு அழைத்து வருகிறார். உடல்நிலை மோசமாக இருக்கும் இவருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றுகிறார்கள். தானோஸிடம் இருக்கும் முடிவில்லா கற்களை வைத்து இழந்த அனைவரையும் மீட்க நினைக்கிறார்கள். அவெஞ்சர்ஸ், இதற்கு உதவி செய்யும் தானோஸின் மகள் நெபுலா. ஒரு வழியாக தானோஸ் இருக்கும் கிரகத்தை கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், தானோஸிடம் கற்கள் இல்லாததை கண்டு விசாரிக்கும் போது, கற்களை அழித்து விட்டதாக தானோஸ் கூறுவதை கேட்டு அதிர்ச்சியடைகிறார்கள்.

இதற்கு தீர்வாக காலப்பயணத்தை மேட்கொண்டு 5 வருடம் பின்னோக்கி செல்லும் அவெஞ்சர்ஸ் குழுவினர் அந்த போராட்டத்தில் நடாஷா இறக்கின்றார். இவர்களின் காலாப்பயணத்தை அறிந்த தானோஸ் இவர்கள் வழியாக சென்று முடிவில்லா கற்களை அடைய பெரும் படையுடன் போர் தொடுக்கிண்றான். அதே தருணம் எதிர்பாராத தருணத்தில் அவேஞ்சர்ஸில் காணாமல் போனவர்கள் டாக்டர் ஸ்ரேன்ச்சின் ஊடாக மந்திர சக்தி மூலம் மிக பெரும் படையுடன் வந்து தனோஸின் படைக்கு எதிராக போராடுகின்றனர். இந்த கடைசி மகாயுத்தத்தில் முடிவில்லா கற்களை தன்கையில் பொருத்தி தானோஸை அழிக்கும் அயன் மேன் தன் உயிரை தியாகம் செய்கின்றார். இறுதி கட்டத்தில் எல்லா அவெஞ்சர்சும் ஒன்றாக சேர்ந்து டோனி ஸ்டார்க்குக்கு இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர். ஸ்டீவ் ரோஜர்ஸ் கடைசியாக காலப்பயணம் சென்று முடிவில்லா கற்களை அவைகளின் காலகட்டத்தில் வைத்துள்ளார். ஆனால் அவருடைய 1943 வது ஆண்டுக்கு காலப்பயணம் செய்து கடந்த கால வாழ்க்கையை வாழ்ந்த மனிதராக திரும்புகிறார். அவருடைய நண்பரான சாம் வில்சனிடம் கேப்டன் அமேரிக்காவின் பொறுப்புகளை கொடுக்கிறார்.

நடிகர்கள்

  • ராபர்ட் டவுனி ஜூனியர்[6] - டோனி ஸ்டார்க் / அயன் மேன்
    • அவெஞ்சர்ஸ் குழுவில் மிக பணக்கார மற்றும் மாபெரும் அறிவியல் அறிஞர். தொழிற்துறைச் சார்ந்த மகிழ்ச்சியான இளைஞராகவும் மற்றும் நுண்ணறிவுமிக்கப் பொறியலாளர். இவரின் சக்தி உலோகத்தால் ஆனா திறனுள்ள பாதுகாப்புக் கவசம்.
  • கிறிஸ் இவான்ஸ் - ஸ்டீவ் ரோஜர்ஸ் / கேப்டன் அமெரிக்கா
    • உலகப்போரில் போராடிய ஒரு இராணுவ வீரர். முதலாவது அவெஞ்சர் இவர் தான். தனது போர் குண புத்தியால் அவெஞ்சர்ஸ் குழுவை வழிநடுத்துபவன். இவரே அனைத்து அவெஞ்சர்களுக்கும் தலைவர் (கேப்டன்).
  • மார்க் ருஃப்பால்லோ[7] - வைத்தியர். ப்ரூஸ் பேனர் / ஹல்க்
    • ஒரு காம்மா கதிர் விஞ்சானி, இக் கதிர் பாதிப்பால் பச்சை நிறமுள்ள கோவப்பான அரக்கனாய் மாறும் சக்தி உடையவன். எவருக்கும் அடங்காத இவன் நடாஷா சொல்லும் அடங்குவான்.
  • கிறிஸ் ஹோம்ஸ்வோர்த்[8] - தோர்
    • இடி மின்னல்களின் கடவுள்; ஆஸ்கார்ட் அரசன்; ஓடினின் மகன் ஆவார். இவரது ஆயுதம் ஸ்டோம்பிரேக்கர் (கோடாரி) மற்றும் சுத்தியல் ஆகும். இவற்றின் மூலம் இடி மின்னலை கட்டுப்படுத்துவதால். இவரே அவெஞ்சர்ஸ்களில் சக்திவாய்ந்தவர்.
  • ஜெர்மி ரேன்நேர் - கிளின்ட் பார்டன் / ஹாக்கி
    • குழுவின் உயர் பயிற்சி பெற்ற முன்னாள் உளவாளி. இவர் கிளின்ட் பர்டனி் பெற்ற எஸ்.எச்.ஐ.இ.எல்.டி. மற்றும் அவெஞ்சர்ஸ் குழுவின் முன்னாள் உளவாளி. இந்த திரைப்படத்தில் இவருக்கு ரோனின் என்ற வரக்கதையில் வந்தவரின் காதாபாத்திரம் போன்று கொடுக்கப்பட்டுள்ளது.
  • பால் ருத் - ஸ்காட் லாங் ஆண்ட்-மேன்
    • முன்னாள் சிறு குற்றவாளி, இவரின் சக்தி உலகோதினால் கொண்ட கவசம் கொண்டு அவரை சுருக்கி அல்லது பெரிதாக்கும் வலிமை கொண்டவர்.
  • பிரி லார்சன்[11] - கரோல் டான்வர்ஸ் / கேப்டன் மார்வல்
    • முன்னாள் ஐக்கிய அமெரிக்க வான்படை போராளி, ஒரு விபத்து காரணமாக பச்சை இனத்தை சேர்த்த பெண் மூலம் அதி சக்தி கிடைக்கின்றது. இந்த சக்தி மூலம் விண்வெளியில் எந்த ஒரு கவசமும் இல்லாமல் பயணம் செய்வது, நெருப்பு கதிர் விச்சு சக்தி, பறக்கின்ற சக்தி மற்றும் மிக வலிமையானவர். இவரின் காதபத்திரத்திற்கு பிறகு தான் இந்த பூமியை காப்பற்ற துப்பாக்கிகளும் பீரங்கிகளும் போதாது அதி சக்தி வாய்ந்த மனிதர்களும் தேவை என்ற சொல்லப்படுகின்றது. இவர் தான் முதல் பெண் சூப்பர் ஹீரோ பெண் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
  • கரேன் கில்லன் - நெபுலா
    • தானோஸின் வளர்ப்பு மகள், பாதி மனிதன் பாதி இயந்திரம். காமோராவின் சகோதரி.
  • டானாய் குரைரா - ஒகோய்
    • வகாண்டா நாட்டு பெண் படையினரின் தலைவி, ப்ளாக் பேந்தரின் மெய்க்காப்பாளர்.
  • ஜான் பெவ்ரோ - ஹாப்பி
    • ஸ்டார்க் நிறுவனத்தின் முன்னாள் பாதுகாப்பு தலைவர். மற்றும் டோனியின் சாரதி மற்றும் பாதுகாவலர்.
  • பிராட்லி கூப்பர் - ராக்கெட் ரக்கூன்
    • கார்டியன்ஸ் ஆஃப் த கேலக்ஸ் திரைப்படத்தின் உறுப்பினர். இவர் ரக்கூன் என்ற மிருகத்தின் தோற்றம் உடையவன். சிறந்த பழுது திருத்தும் பொறியாலாளர். இவரின் காதாபாத்திரம் நகைசுவை சேர்ந்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
  • ஜோஷ் புரோலின் - தானோஸ்
    • ஆறு நவரத்தின கற்களை கைப்பற்றி எல்லா விண்வெளியையும் ஆட்சி செய்யவேண்டும் என்று எண்ணம் கொண்டு எல்லோரையும் அளிக்கின்ற குணம் கொண்ட கெட்டவன். நெபுலா மற்றும் காமோராவின் வளர்ப்பு தந்தை.
  • கிவ்வினெத் பேல்ட்ரோ - பெப்பர் பொட்சு
    • ஸ்டார்க்கின் மனைவி மற்றும் ஸ்டார்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி.

சிறப்பு தோற்றம் (இறுதி யுத்தத்தில் ஒன்று சேர்ந்தவர்)

தயாரிப்பு

அக்டோபர் 2014 இல் மார்வெல் நிறுவனத்தால் அவெஞ்சர்ஸ் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு பாகங்களை இயக்குநர்கள் ரூசோ சகோதரர்கள் இயக்குவார்கள் என்று ஏப்ரல் 2015 இல் மார்வெல் நிறுவனம் அறிவித்தது. முதல் பகுதிக்கு அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் என்ற பெயர் வைத்து இந்த திரைப்படத்தை 27 ஏப்ரல் 2018 ஆம் ஆண்டும் வெளியிடப்பட்டது. 2ஆம் பாகம் 26 ஏப்ரல் 2019 இல் வெளியிடப்பட்டது. 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படம் இதற்கு முன் கடந்த 10 ஆண்டுகளாக வசூலில் உலக அளவில் முதலிடத்தில் இருந்த 'அவதார்' படத்தின் வசூலை முறியடித்துள்ளது.[13]

இசை

இந்த திரைபபடத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் பிரின்ஸ் குமாரும் சேர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பாடல் ஒன்றை இசையமைத்து மற்றும் பாடியும் உள்ளார். இந்த பாடல் இந்தியாவில் வெளியாகும் திரைப்படத்தில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காணொளி வடிவ பாடல் மார்வெல் இந்தியா யூ டுயூப்ல் 4 ஏப்ரல், 2019 ஆம் ஆண்டு வெளியானது. தமிழ் பாடலுக்கு பாடலாசிரியர் விவேக் பாடல் எழுதியுள்ளார்.

இந்தி பாதிப்பு பாடலுக்கு பாடலாசிரியர் நிர்மிகா சிங் என்பவர் பாடல் எழுதி ஏப்ரல் 5, 2019ல் மற்றும் தெலுங்கு பாதிப்பு பாடலுக்கு பாடலாசிரியர் ராக்கெண்டு மவுலி வென்னலக்கந்தி என்பவர் பாடல் எழுதி ஏப்ரல் 8, 2019ல் வெளியானது.

Tracklist
#பாடல்பாடகர்நீளம்
1. "விண்வெளியின் விண்வெளியின் வீரனே..."  ஏ.ஆர்.ரஹ்மான் 2:50

தமிழில்

இந்தியாவில் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் ஒரு பாடலை உருவாக்கவுள்ளார். இப்பாடல் மூன்று மொழிகளிலும் தயாராகி ஏப்ரல் 1, 2019 ஆம் ஆண்டு வெளியானது. மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் வசனம் எழுதியமை குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் சேதுபதி அயன் மேன் கதாபாத்திரத்திற்கும், ஆண்ட்ரியா ஜெரெமையா பிளாக் விடொவ் கதாபாத்திரத்திற்கும் குரல் கொடுத்துள்ளார்கள்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை