பிரித்தானிய-சயாமிய உடன்படிக்கை (1909)

ஐக்கிய இராச்சியத்திற்கும் சயாம் இராச்சியத்திற்கும் கையெழுத்திடப்பட்ட ஓர் ஒப்பந்தம்

பிரித்தானிய-சயாமிய உடன்படிக்கை (1909) அல்லது பாங்காக் ஒப்பந்தம் (1909); ஆங்கிலம்: Anglo-Siamese Treaty of 1909 அல்லது Bangkok Treaty of 1909; சயாமியம்: สนธิสัญญาอังกฤษ–สยาม พ.ศ. 2452) என்பது ஐக்கிய இராச்சியத்திற்கும் மற்றும் சயாம் இராச்சியத்திற்கும் (Kingdom of Siam) இடையே 1909 மார்ச் 10-ஆம் தேதி பாங்காக்கில் கையெழுத்திடப்பட்ட ஓர் ஒப்பந்தமாகும்.[1][2]

பிரித்தானிய - சயாமிய உடன்படிக்கை (1909)

Anglo-Siamese Treaty of (1909)
அமைப்பு
  • Transfer of Kelantan, Terengganu, Kedah and Perlis to the United Kingdom of Great Britain and Ireland.
  • Britain recognised Siamese sovereignty over Patani
கையெழுத்திட்டது10 மார்ச் 1909
இடம்பாங்காக்
நடைமுறைக்கு வந்தது9 சூலை 1909; 114 ஆண்டுகள் முன்னர் (1909-07-09)
கையெழுத்திட்டோர்
  • தேவவாங்சே வரபாக்கம்
    (Devawongse Varopakarn)
  • ஐக்கிய இராச்சியம் சர் ரால்ப் பெசட்
    Sir Ralph Paget
தரப்புகள்
மொழிஆங்கிலம்

1909 சூலை 9-ஆம் தேதி லண்டனில் ஒப்புதல்கள் பரிமாறப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின் மூலமாகப் புதிய மலேசியா-தாய்லாந்து எல்லை நிறுவப்பட்டது. இப்போதைய பட்டாணி (Pattani); நாரதிவாட் (Narathiwat); சோங்கலா (Songkhla); சத்துன் (Satun); யாலா (Yala); ஆகிய பகுதிகள் தாய்லாந்து கட்டுப்பாட்டிற்குள் நிலை நிறுத்தப் படுத்தப்பட்டன.[3]

பொது

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக கெடா மாநிலம்; ஆங்கிலம்: Syburi; சயாம்: ไทรบุรี); பெர்லிஸ் மாநிலம்; ஆங்கிலம்: Palit; சயாம்: ปะลิส); கிளாந்தான் மாநிலம்; ஆங்கிலம்: Kalantan; சயாம்: กลันตัน); திராங்கானு; மாநிலம்; ஆங்கிலம்: Trangkanu; சயாம்: ตรังกานู) எனும் மலாய் மாநிலங்களைத் தாய்லாந்து அரசாங்கம் பிரித்தானிய மலாயா அரசாங்கத்திடம் ஒப்படைத்தது.[4]

இரகசிய இராணுவ ஒப்பந்தம்

இரண்டாம் உலகப் போரின் போது, மலாயா மற்றும் தென்கிழக்காசியா நாடுகளைக் கைப்பற்றும் நோக்கத்தில், ஜப்பானியப் பேரரசு, தனது இராணுவப் படைகளைத் தாய்லாந்தின் வழியாக அனுப்புவதற்காக தாய்லாந்து கடற்கரைகளில் 1941 டிசம்பர் 8-ஆம் தேதி முற்றுகையிட்டது.

தாய்லாந்து இராணுவத்தினருக்கும் ஜப்பானிய இராணுவத்தினருக்கும்இடையே ஆறு முதல் எட்டு மணி நேரம் சண்டை நடந்தது. அதை அடுத்து தாய்லாந்து சமரசத்திற்கு வந்தது.[5]

அமெரிக்கா மீது போர்ப் பிரகடனம்

தாய்லாந்து வழியாகச் செல்வதற்கு ஜப்பானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 1941 டிசம்பர் 21-ஆம் தேதி, ஜப்பானுடன் இரகசியமாக ஓர் இராணுவ ஒப்பந்தத்தை தாய்லாந்து செய்து கொண்டது.

அதன் மூலம் பிரித்தானியா, பிரான்சு நாடுகளிடம் தாய்லாந்து இழந்த பகுதிகளை மீட்டுத் தரவும் ஜப்பான் உடன்பட்டது. இதனை அடுத்து தாய்லாந்து அரசாங்கம் அமெரிக்கா; ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் மீதும் 1942 சனவரி 25-ஆம் தேதி போர்ப் பிரகடனத்தை அறிவித்தது.[5][6]

மேற்கோள்

மேலும் காண்க

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை