புகைப் பழுப்பு நிற ஆலா

பறவை இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Onychoprion|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

புகைப் பழுப்பு நிற ஆலா ( Onychoprion fuscatus ) என்பது நீள் சிறகு கடற்பறவை குடும்பத்தில் உள்ள ஒரு கடற்பறவை ஆகும். இது வெப்பமண்டலப் பெருங்கடல்களில் காணப்படும் பறவை ஆகும். இது பூமத்திய ரேகை மண்டலம் முழுவதும் உள்ள தீவுகளில் இருந்து இனப்பெருக்கம் செய்வதற்காக மட்டுமே முதன்மை நிலப்பகுதிக்குத் திரும்புகிறது.

புகைப் பழுப்பு நிற ஆலா
Onychoprion fuscatus nubilosus (or O. f. oahuensis) on Tern Island (French Frigate Shoals)
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix):Onychoprion
இனம்:
வார்ப்புரு:Taxonomy/OnychoprionO. fuscatus
இருசொற் பெயரீடு
Onychoprion fuscatus
(லின்னேயஸ், 1766)
Subspecies

2-9, see text

வேறு பெயர்கள்

Onychoprion fuscata (lapsus)
Sterna fuscata Linnaeus, 1766
Sterna fuscata fuscata Linnaeus, 1766
Sterna fuscata nubilosa
and see text

வகைபிரித்தல்

புகைப் பழுப்பு நிற ஆலா 1766 ஆம் ஆண்டில் கார்ல் லின்னேயசால் ஸ்டெர்னா ஃபுஸ்காட்டா என்ற விலங்கியல் பெயரில் விவரிக்கப்பட்டது. ஸ்டெர்னா இனம் தனியாக பிரிக்கப்படும் வரை பல ஆண்டுகள் இந்த பெயரைத் தாங்கி இருந்தது. இதன் விலங்கியல் பெயர் தற்போது ஓனிகோபிரியன் ஃபுஸ்காடஸ் என்பதாகும்.[2]

ஓனிகோபிரியன் ஃபுஸ்காடஸ் நுபிலோசஸ் (ஸ்பார்மன், 1788) – இந்தோபாசிபிக் சூட்டி டெர்ன் [3] இந்தோனேசியாவிலிருந்து அமெரிக்கா வரையிலான பறவைகளை பின்வரும் கிளையினங்களாக வகைப்படுத்தபட்டுள்ளது:

  • Onychoprion fuscatus infuscatus – சுண்டா சூட்டி டெர்ன் (லிச்சென்ஸ்டீன், 1823)சுண்டா தீவுகள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில்
  • Onychoprion fuscatus oahuensis – மத்திய பசிபிக் சூட்டி டெர்ன் (Bloxam, 1826) – போனின் தீவுகள் மைக்ரோனேசியா வழியாக தெற்கு பாலினேசியா வரை
  • Onychoprion fuscatus serrata – மெலனேசியன் சூட்டி டெர்ன் (வாக்லர், 1830)ஆஸ்திரேலியா, நியூ கினியா, நியூ கலிடோனியா
  • Onychoprion fuscatus luctuosa – Juan Fernández sooty tern (Philippi & Landbeck, 1866) – ஜுவான் பெர்னாண்டஸ் தீவுகள்
  • Onychoprion fuscatus crisalis – கிழக்கு பசிபிக் சூட்டி டெர்ன் லாரன்ஸ், 1872. [4] – கிழக்கு பசிபிக் குவாடலூப் தீவு முதல் கலபகோஸ் தீவுகள் வரை
  • Onychoprion fuscatus kermadeci – Kermadec sooty tern Mathews, 1916. [5] – கெர்மடெக் தீவுகள்
  • Onychoprion fuscatus somaliensis – சோமாலி சூட்டி டெர்ன் – மேத் தீவு ( ஏடன் வளைகுடா )

விளக்கம்

O. f. nubilosus இந்தியப் பெருங்கடலில் ரோட்ரிக்ஸ் தீவில் பறக்கிறது
லார்ட் ஹோவ் தீவில் இளம் பறவை

இது ஒரு பெரிய ஆலா ஆகும். இது சாண்ட்விச் ஆலாவின் (Thalasseus sandvicensis) அளவை ஒத்ததாக இருக்கும். இப்பறவை 33–36 cm (13–14 அங்) நீளமும், 82–94 cm (32.5–37 அங்) இறக்கை அகலமும் கொண்டது. இதன் வால் நன்கு பிளவுற்றதாக நீண்டு இருக்கும். இதன் மேல்பகுதி அடர் கருப்பு நிறத்திலும், அடிப்பகுதி வெண்மையாகவும் இருக்கும். இதன் கால்களும், அலகும் கறுப்பு நிறத்தில் இருக்கும். இதன் சராசரி ஆயுட்காலம் 32 ஆண்டுகளாகும்.[6]

இது கொர்க்-வாக் என ஒலி எழுப்பக்கூடியது.

சூழலியல்

முதிர்ந்த ஓ. எஃப். நுபிலோசஸ், "கூட்டில்" முட்டையுடன், சீஷெல்சில்.
ஓ.எஃப். நுபிலோசஸ், சீஷெல்சில் உள்ள பறவை தீவில் உள்ள இந்தப் பறவைக் கூட்டம். இதன் உச்சத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புகைப் பழுப்பு நிற ஆலாக்களின் தாயகமாக உள்ளது.

புகைப் பழுப்பு ஆலாக்கள் பாறைகள் அல்லது பவளத் தீவுகளில் கூட்டமாக இனப்பெருக்கம் செய்கின்றன.[7] இவை தரையில் குழி அல்லது துளையில் கூடுகளை அமைத்து, பொதுவாக மதிய நேரத்தில் ஒரு முட்டையை இடுகிறது.[8] "இரண்டு-முட்டைகள்" பதிவாகியிருந்தாலும், அது ஒரு கூட்டில் இருக்கும் ஒரு முட்டை மற்றொரு கூட்டிற்கு உருண்டு வந்த சேர்ந்ததாக இருக்கக்கூடும்.[9] இது கடலில் தீவுகள் பாறைகள் போன்ற சூழல்களில், பெரும்பாலும் பெரிய கூட்டமாக இருந்து மீன்களைப் பிடித்து உணவாக கொள்கிறது. மேலும் இவை இனப்பெருக்கம் செய்வதற்காக அல்லாமல் அரிதாகவே நிலத்திற்கு வரும். மேலும் இவை 3 முதல் 10 ஆண்டுகள் வரை கடலுக்கு வெளியேயும் இருக்கக் கூடும்.[10] இதன் இறகுகளில் எண்ணெய்ப் பசை இல்லாததால், இது நீரில் மிதக்க முடியாது. மேலும் இது தன் முழு நேரத்தையும் இறக்கையின் உதவியுடனே இடம்பெயர்கிறது.

இந்த பறவை வெப்பமண்டல பெருங்கடல்கள் வழியாக குளிர்காலத்தில் வலசை போகும். பெரும்பாலான ஆலாக்களுடன் ஒப்பிடும்போது இது பொதுவாக கடல் பறவையாகவே உள்ளது. இவை பொதுவாக கடுமையான புயல்களுக்குப் பிறகு மட்டுமே உள்நாட்டில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஃபீல்ட் மியூசியத்தில் ஒரு ஆண் பறவை மாதிரி உள்ளது, இது 1933 ஆகத்து 2 அன்று புயாவுக்கு மேலே கேமரூன் மலையின் சரிவுகளில் சுமார் 1,000 m (3,300 அடி) மேல் மோசமான வானிலை கினியா வளைகுடாவை தாக்கிய பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.[11] ஜூலை 2005 இல் வேல்ஸின் செம்லின் விரிகுடாவில் 11 நாட்கள் ஒரு பறவை இருந்த போதிலும், இந்த இனம் மேற்கு ஐரோப்பாவிற்கு தவறிவந்து அலைந்து திரிவதாகும்.[12] .

ஒரு விதிவிலக்காக புகைப் பழுப்பு நிற ஆலா பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளாத ஒன்றாக கருதப்படவில்லை.[1]

காட்சியகம்

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Onychoprion fuscatus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்