நியூ கலிடோனியா

நியூ கலிடோனியா (New Caledonia, பிரெஞ்சு மொழி: Nouvelle-Calédonie)[கு 1] என்பது பிரான்சின் கடல்கடந்த மண்டலமாகும். இம்மண்டலம் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில், ஆத்திரேலியாவின் கிழக்கில் இருந்து 1,210 கிமீ தூரத்திலும், பிரான்சில் இருந்து 20,000 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.[3] மெலனீசியா துணைப்பகுதியில் அமைந்துள்ள இத்தீவுக் கூட்டத்தில் கிராண்ட் டெரே, லோயல்டீ தீவுகள், செசுட்டர்பீல்டு தீவுகள், பெலெப் தீவுக்கூட்டம், மற்றும் பல சிறிய தீவுகளும் உள்ளன.[4] செசுட்டர்பீல்டு தீவுகள் பவளக் கடலில் அமைந்துள்ளது.[5]

நியூ கலிடோனியா
பிரான்சின் கொடி
கொடி
குறிக்கோள்: "Terre de parole, terre de partage"[1]
"பேச்சின் நிலம், பங்கீட்டின் நிலம்"
நாட்டுப்பண்: Soyons unis, devenons frères[1]

சின்னம்
நியூ கலிடோனியாஅமைவிடம்
நிலைSui generis சிறப்புக் கூட்டமைப்பு
தலைநகரம்நூமியா
22°16′S 166°28′E / 22.267°S 166.467°E / -22.267; 166.467
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)பிரெஞ்சு
பிராந்திய மொழிகள்
  • நெங்கோன்
  • பாய்ச்சி
  • அஜியோ
  • திரேகு
  • சாவகம்
, மேலும் 35 உள்ளூர் மொழிகள்
மக்கள்நியூ கலிடோனியன்
சுயாட்சி France
அரசாங்கம்சார்பு மண்டலம்
• தலைவர்
இம்மானுவேல் மாக்ரோன்
• அரசுத்தலைவர்
பிலிப் கெர்மைன்
• உயர் ஆணையர்
தியெரி லட்டாஸ்டே
சட்டமன்றம்பிராந்திய காங்கிரசு
நிறுவுதல்
• பிரான்சுடன் இணைப்பு
1853
• கடல்கடந்த மண்டலம்
1946
• சிறப்பு கூட்டு
1999
பரப்பு
• மொத்தம்
18,576 km2 (7,172 sq mi)
• நிலம்
18,275 km2 (7,056 sq mi)
மக்கள் தொகை
• 2017 மதிப்பிடு
278,500 (182-வது)
• அடர்த்தி
14.5/km2 (37.6/sq mi) (200-வது)
மொ.உ.உ. (பெயரளவு)2011 மதிப்பீடு
• மொத்தம்
US$9.89 பில்.[2]
• தலைவிகிதம்
US$38,921[2]
நாணயம்CFP franc (XPF)
நேர வலயம்ஒசநே+11
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+687
ஐ.எசு.ஓ 3166 குறியீடுNC
இணையக் குறி.nc

நியூ கலிடோனியாவின் நிலப்பரப்பு 18,576 சதுரகிமீ ஆகும். மக்கள்தொகை 268,767 ஆகும் (ஆகத்து 2014 கணக்கெடுப்பு)[6] இவர்களில் நியூகலிடோனியாவின் பழங்குடியினர் கனாக்கு மக்கள் எனப்படுவோர், ஐரோப்பியக் குடியேறிகள், பொலினீசிய மக்கள் (குறிப்பாக வலிசியர்), மற்றும் தென்கிழக்காசியர், சிறிய அளவு வடக்கு ஆப்பிரிக்க வம்சாவழியினரும் அடங்குவர்.. இதன் தலைநகரம் நூமியா ஆகும்.[3]

1986 ஆம் ஆண்டு முதல் குடியேற்றங்களை இல்லாதொழிப்பதற்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் நியுகலிடோனியாவை சுயாட்சியற்ற மண்டலமாகப் பட்டியலிட்டு வருகிறது.[7] 1987 இல் இங்கு மக்கள் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதில், பெரும்பான்மையான மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர். இரண்டாவது தடவையாக 2018 நவம்பர் 4 இல் இடம்பெற்ற மக்கள் கருத்துக் கணிப்பில்[8][9] 56.9% மக்கள் பிரான்சுடன் இணைந்திருக்க விருப்பம் தெரிவித்தனர்.[10] 2020 இல் நடந்த வாக்கெடுப்பில் 53.3% மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர். இறுதியாக, 2021 நவம்பர் 12 இல் நடந்த வாக்கெடுப்பில் 96.49% மக்கள் விடுதலைக்கு எதிராகவும், 3.51% மக்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர்.[11] பழங்குடிகளான கனாக்கு மக்கள் கோவிட்-19 பெருந்தொற்றைக் காரணம் காட்டி இவ்வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர்.[12][13]

வரலாறு

நியூகலிடோனியாவில் ஆரம்பகால மனிதக் குடியேற்றங்கள் கிமு 1600 முதல் கிபி 500 (லப்பித்தா காலத்தில்) இடம்பெற்றது.[14] லப்பித்தா மக்கள் பசிபிக் பிராந்தியத்தில் மிகவும் திறமை வாய்ந்த மாலுமிகளாகவும் வேளாண்மையில் சிறந்து விளங்கியதாகவும் அறியப்படுகிறது.[15]

இரண்டு கனாக்கு வீரர்கள் ஆண்குறிக் கவசங்களுடனும் ஈட்டிகளுடனும், 1880களில்

பிரித்தானிய நாடுகாண் பயணி கப்டன் ஜேம்ஸ் குக் முதன்முறையாக நியூகலிடோனியாவை 1774 செப்டம்பர் 4 இல் தனது இரண்டாவது கடற்பயணத்தின் போது கண்ணுற்றார்.[16] இசுக்காட்லாந்தின் நினைவாக இதற்கு "புதிய கலிடோனியா" என அவர் பெயரிட்டார்.[16] கிராண்ட் டெரே தீவின் மேற்குக் கரையை 1788 இல் கொம்டே டி லப்பேரோசு என்பவர் கண்டுபிடித்தார். லோயால்ட்டி தீவுகளுக்கு வில்லியம் ராவென் என்பவர் 1793-96 இல் பயணம் செய்தார்.[17]

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நியூ_கலிடோனியா&oldid=3587350" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை