புதர்

புதா் அல்லது முட்செடி என்பது சிறியது முதல் நடுத்தர அளவுள்ள சிலவகையான தாவரங்களைக் குறிக்கும் சொல்லாகும். செடிகள் போலல்லாமல், புதர்கள் தரையில் மேலே விறைப்புத்தன்மை வாய்ந்த தண்டுகளைக் கொண்டுள்ளன. இவை பல நெருங்கிய கிளைகள், குறுகிய உயரம் ஆகியவற்றால் மரங்களிலிருந்து வேறுபடுகின்றன. பொதுவாக இவை 6 மீ (20 அடி) உயரத்துக்கு கீழ் உள்ளன.[1] பல இனத் தாவரங்கள் வளர்ந்து வரும் நிலைமையைப் பொறுத்து, புதர்கள் அல்லது மரங்களாக வளரலாம். சிறிய, உயரம் குறைந்த புதர்கள், பொதுவாக 2 மீ (6.6 அடி) உடையவை. பொதுவாக லாவெண்டர், பெரிவிங்கில் மற்றும் மிகச் சிறிய தோட்ட வகை ரோஜாக்கள் போன்றவை பெரும்பாலும் "சப்ராபுகள்" என அழைக்கப்படுகின்றன.[2]

காணப்படும் பகுதி

தரிசுநிலங்களில் புதா் மண்டிக் காணப்படும். மிதமான மழையைப் பெறும் நிலப்பகுதிகளில் பொதுவாகப் புதா்கள் காணப்படுகின்றன. அதிகமான மழைப்பொழிவைப் பெறும் பசுமை மாறாக்காடுகளிலும் உயரமான மரங்களின் கீழ் அடுக்கில் புதா்கள் அமைந்துள்ளன.

புதா்த் தாவரங்கள்

துத்தி, சுண்டைக்காய், எலந்தை, கடுக்காய், தூதுவளை, செம்பருத்தி, ஆவாரை, பெருந்தும்பை போன்ற செடிவகைத் தாவரங்களும் கோரை, நாணல், சம்பு போன்ற புல்வகைத் தாவரங்களும் புதா்த்தாவரங்களாகும்.

சிறப்பு

1)புதா் ஒரு வகையான சூழியல் வாழிடம் ஆகும்.2)மூலிகைப் போன்ற பயன்மிக்க தாவரங்கள் இயற்கையாக வளருமிடமாகும்.3)காற்று, மழையினால் ஏற்படும் மண்ணரிப்பைத் தடுக்கின்றது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=புதர்&oldid=3890549" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை