புது அசிரியப் பேரரசு

புது அசிரியப் பேரரசு (Neo-Assyrian Empire) இரும்புக் காலத்தில் மெசொப்பொத்தேமியாவை மையக் கொண்டு, கிமு 911 முதல் 609 முடிய ஆட்சி செய்த,[3][4][5] பண்டைய உலகின் பெரும் பேரரசுகளில் ஒன்றாகும்.[6] இது அசிரியாவின் இறுதிப் பேரரசாகும். இப்பேரரசின் புகழ்பெற்ற பேரரசர் அசூர்பனிபால் ஆவார்.

புது அசிரியப் பேரரசு
𒆳𒀸𒋩𒆠
māt Aššur (Akkadian)[1]
கிமு 911–கிமு 609
புதிய அசிரியப் பேரரசும் அதன் விரிவாக்கப் பகுதிகளும்
புதிய அசிரியப் பேரரசும் அதன் விரிவாக்கப் பகுதிகளும்
தலைநகரம்கிமு 911ல் அஸ்கூர்
கிமு 879ல் நிம்ருத்
கிமு 706ல் துர்ஷர்ருக்கின்
கிமு 705ல் நினிவே
கிமு 612ல் ஹர்ரன்
பேசப்படும் மொழிகள்அக்காதியம்
அரமேயம்
சுமேரிய மொழி (புழக்கத்தில் மறைந்துவிட்டது)
சமயம்
அசிரிய-பாபிலோனிய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
அசிரியாவின் மன்னர் 
• கிமு 911–891
இரண்டாம் ஆதாத் நிராரி (முதல்)
• கிமு 612–609
இரண்டாம் அசூர்-உப்பல்லித் (இறுதி)
வரலாற்று சகாப்தம்இரும்புக் காலம்
• இரண்டாம் அதாத்-நிராரி
கிமு 911
• நினிவே போர்
கிமு 612
• ஹர்ரான் முற்றுகை
கிமு 609
பரப்பு
கிமு 670[2]1,400,000 km2 (540,000 sq mi)
முந்தையது
பின்னையது
[[மத்திய அசிரியப் பேரரசு]]
25வது எகிப்திய வம்சம்
[[சமாரியாவின் இசுரயேல் அரசு]]
[[ஈலாம்]]
[[மீடியாப் பேரரசு]]
[[புது பாபிலோனியப் பேரரசு]]
26வது எகிப்திய வம்சம்
தற்போதைய பகுதிகள் Iraq
 Syria
 Israel
 Turkey
 Egypt
 Sudan
 Saudi Arabia
 Jordan
 Iran
 Kuwait
 Lebanon
 Cyprus
 Palestine

பல வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப் படி, உலக வரலாற்றில் முதல் உண்மையான பேரரசாக அசிரிய மக்களின் இப்புதிய பேரரசு விளங்கியது.[7] அசிரியர்கள், முதலில் இரும்பு ஆயுதங்களுடன், போரில் தந்திரோபாயங்களுடன் போரிட்டதால், அசிரியர்களை போரில் எளிதில் வெல்ல இயலவில்லை.[7]

கிமு பத்தாம் நூற்றாண்டில் புது அசரியப் பேரரசின் மன்னர் இரண்டாம் அதாத் நிராரி காலத்தில் அசிரியா உலகின் சக்தி வாய்ந்த அரசுகளில் ஒன்றாக விளங்கியது.

புது அசிரியப் பேரரசர்கள் பண்டைய அண்மைக் கிழக்கு பகுதிகள், கிழக்கு மத்தியதரைக் கடற்பரப்புகள், அனத்தோலியா, காக்கேசியா, அராபியத் தீபகற்பம் மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா பகுதிகளை கைப்பற்றியதுடன், தங்களது பலமிக்க போட்டி அரசுகளான பாபிலோன், ஈலாம், பாரசீகம், லிடியா, உரார்த்து, சிம்மெரியர்கள், சமாரியா, யூத அரசு, சால்டியா, கானான் மற்றும் எகிப்து இராச்சியங்களைக் கைப்பற்றி ஆண்டனர்.[8][9]

பழைய அசிரிய இராச்சியத்திற்குப் (கிமு 2025–1378) பின் தோன்றிய மத்திய அசிரியப் பேரரசுக் (கிமு 1365–1050) பின் புது அசிரியப் பேரரசு பெரும் நிலப்பரப்புகளுடன் கிமு 911 முதல் கிமு 609 ஆண்டது. இப்பேரரசில் ஆட்சி மொழியாக அக்காடியன் மொழியுடன், பழைய அரமய மொழியும் இருந்தது.[10]

நினிவே போர்

கிமு 612-இல் புது அசிரியப் பேரரசிடமிருந்து நினிவே நகரத்தைக் கைப்பற்றுவதற்கு நடந்த போராகும். இப்போரின் முடிவில் மீடியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் 750 எக்டேர் பரப்பளவு கொண்ட உலகின் பெரும் நகரங்களில் ஒன்றான நினிவே நகரத்தை கைப்பற்றினர். இப்போரின் முடிவில் புது அசிரியப் பேரரசு நலிவுறத் தொடங்கியதுடன், புது பாபிலோனியப் பேரரசு எழுச்சியுறத் துவங்கியது.

கிமு 627ல் புது அசிரியப் பேரரசர் அசூர்பர்னிபாலின் இறப்பிற்குப் பின்னர், அசிரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போர்களால், பேரரசு சிதறுண்டது.

கிமு 616ல் பாரசீக மன்னர் பாபிலோன், சால்டியா மற்றும் சிதியர்களுடன் கூட்டு சேர்ந்து, புது அசிரியப் பேரரசு-எகிப்திய பேரரசுகளுடன் போரிட்டனர். ஹர்ரன் நகரத்தின் வீழ்ச்சிக்குப் பின், புது அசரியப் பேரரசு, தனது விரிவாக்கப் பகுதிகளை இழந்து, தனது இராச்சியத்தை அசிரியாவில் மட்டும் நிலைநாட்டிக் கொண்டனர்.

புது அசிரியப் பேரரசு வீழ்ச்சியுற்றாலும், அசிரியர்களில் வரலாறு தொடர்ந்தது. தற்காலத்திலும் ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் அசிரியா மக்கள் வாழ்கின்றனர்.[11]

அசிரியாவின் வீழ்ச்சிக்குப் பின்

கிமு 609ல் இறுதி அசிரியப் பேரரசரின் புது அசிரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், அசிரியப் பகுதிகளை புது பாபிலோனியப் பேரரசு, பண்டைய எகிப்து, மீடியா பேரரசும், கிமு 550ல் அகாமனிசியப் பேரரசும், பின்னர் சாசானியப் பேரரசும் கைப்பற்றி ஆண்டனர்.

புது அசிரியப் பேரரசின் முக்கிய ஆட்சியாளர்கள்

பேரரசர் திக்லாத் - மூன்றாம் பைல்செர், கிமு 745 - 727
பேரரசர் அசூர்பனிபால் கிமு 669 - 627
ஈராக்கின் துர்-சருக்கின்[15] தொல்லியல் களத்தில் கண்டெடுத்த லம்மசு சிற்பம், புது அசிரியப் பேரரசுக் காலம், கிமு 721–705, சிக்காகோ ஓரியண்டல் கழகம், சிக்காகோ பல்கலைக்கழகம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

  • Roux, Georges (1982) Ancient Iraq, (Penguin, Harmondsworth)

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை