பெனசீர் பூட்டோ படுகொலை

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனசீர் பூட்டோ படுகொலை

பெனசீர் பூட்டோ படுகொலை (Assassination of Benazir Bhutto) 27 டிசம்பர் 2007 அன்று பாக்கித்தானின் ராவல்பிண்டியில் நடந்தது. பெனாசீர் பூட்டோ, இரண்டு முறை பாக்கித்தானின் பிரதமரும் (1988-1990; 1993-1996) மற்றும் அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான பாக்கித்தான் மக்கள் கட்சியின் தலைவருமான, ஜனவரி 2008 இல் நடைபெறவிருந்த தேர்தலுக்கு முன்னதாக பிரச்சாரம் செய்தார்.[1][2][3]லியாகத் நேஷனல் பாகில் நடந்த அரசியல் பேரணிக்குப் பிறகு இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, மேலும் துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே ஒரு தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றது. ராவல்பிண்டி பொது மருத்துவமனையில் 18.16 உள்ளூர் நேரப்படி (13:16 UTC ) இவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டார். இந்த குண்டுவெடிப்பில் மேலும் 23 பேர் கொல்லப்பட்டனர்.[4] இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாடு கடத்தப்பட்ட பிறகு, பூட்டோவினைக் கொல்ல இதேபோன்ற முயற்சி நடைபெற்றது. 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற கர்சாசு குண்டுவெடிப்பில் சுமார் 180 பேர் இறந்தனர்.

ஆரம்பகாலத்தில் வெளிவந்த அறிக்கைகள் இவர் துப்பாக்கிச் சூட்டினால் இறந்ததாகக் கூறப்பட்டது. [5] [6] ஆனால் பாக்கித்தானின் உள்துறை அமைச்சகம் குண்டுவெடிப்பினால் பூட்டோவின் தலையில் மண்டை எலும்பு முறிந்து இறந்ததாகக் கூறியது.[7] ஆனால் பூட்டோவின் ஆதரவாளர்கள் இந்த வாதத்தினை ஏற்கவில்லை இவர் ஏற்கனவே இரு முறை இரு முறை துப்பாக்கியால் சுடப்பட்டதில் காயமடைந்தார் எனக் கூறினர். [8] உள்துறை அமைச்சகம் அதன் முந்தைய அரிக்கையில் இருந்து பின்வாங்கியது. [9]

மே 2007 இல், பூட்டோ வெளிநாட்டு ஒப்பந்த நிறுவனங்களான பிளாக்வாட்டர் மற்றும் பிரித்தானிய நிறுவனமான ஆர்மர் குரூப்பிலிருந்து கூடுதல் பாதுகாப்பைக் கேட்டார். இந்த சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை நடத்திய விசாரணையில், "பூட்டோவின் படுகொலையை போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் தடுத்திருக்க முடியும்" எனக் கூறியது.[10]

பின்னணி

பெனாசிர் பூட்டோ, செப்டம்பர் 2004

பூட்டோ சுய-நாடுகடத்தலைத் தேர்ந்தெடுத்தார், அதே நேரத்தில் ஊழல் தொடர்பான இவரது நீதிமன்ற வழக்குகள் அயல் மற்றும் பாக்கித்தான் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தன. [11] நாடுகடத்தப்பட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு துபாய் மற்றும் லண்டனுக்கு பூட்டோ திரும்பினார் கராச்சிக்கு அக்டோபர் 18, 2007 அன்று திரும்பினார். 2008 தேசிய தேர்தல்களில் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் தொடர்பாக பெர்வேஸ் முஷாரப்பைச் சந்திக்க இவர் சென்றார் . [12] [13]

பின்னர் வீடு திரும்பும் போது கராச்சியில் நடந்த படுகொலை முயற்சியில் பூட்டோ உயிர் தப்பினார். 18 அக்டோபர் 2007 அன்று கராச்சியில் ஒரு பேரணிக்கு செல்லும் வழியில், ஜின்னா சர்வதேச விமானநிலையத்தில் இருந்து இவர் வெளியேறிய சிறிது நேரத்திலேயே இரண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.[14] அந்த விபத்தில் பூட்டோ காயமடையவில்லை, ஆனால் அந்த குண்டு வெடிப்புகள் பின்னர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என்று கண்டறியப்பட்டது. அந்தச் சம்பவத்தில் 139 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 450 பேர் காயமடைந்தனர். [15] இறந்தவர்களில் குறைந்தது 50 பேர் இவரது பாக்கித்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த பாதுகாவலர்கள் ஆவர், இவர் சாத்தியமான குண்டுவீச்சுக்காரர்களைத் தவிர்ப்பதற்காக தனது லாரியைச் சுற்றி மனிதச் சங்கிலியை உருவாக்கியுள்ளார். அதில் ஆறு காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர்.[16] பல மூத்த அதிகாரிகள் காயமடைந்தனர். சம்பவ இடத்திலிருந்து பூட்டோ காயமின்றி அழைத்துச் செல்லப்பட்டார். [17]

படுகொலை

பெனசிர் பூட்டோ ராவல்பிண்டி நகரில் பாக்கித்தான் மக்கள் கட்சி ஆதரவாளர்களின் பேரணியில் உரையாற்றினார், அப்போது பேரணியில் குண்டு வெடித்தது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கொலையாளிகள் துப்பாக்கியால் சுட்டதாக ஆரம்ப காவல்துறை அறிக்கைகள் தெரிவித்தன. [18] இவரது வாகனத்தின் அருகில் தற்கொலைத் தாக்குதல் நடந்துள்ளது.[19]

சான்றுகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை