பெரென்சு கிரௌசு

பெரென்சு கிரௌசு (Ferenc Krausz, பிறப்பு: 17 மே 1962) ஒரு அங்கேரிய-ஆசுத்திரிய இயற்பியலாளர் மற்றும் நோபல் பரிசு பெற்றவர். அவர் மேக்ஸ் பிளாங்க் குவாண்டம் ஒளியியல் நிறுவனத்தில் இயக்குநராகவும், ஜெர்மனியில் உள்ள மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகத்தில் சோதனை இயற்பியல் பேராசிரியராகவும் உள்ளார். இவரது ஆராய்ச்சிக் குழு முதல் அட்டோசெகண்ட் ஒளித்துடிப்பை உருவாக்கி அளந்து, அணுக்களுக்குள் எலக்ட்ரான்களின் இயக்கத்தைப் பிடிக்க அதைப் பயன்படுத்தியது, இது அட்டோஇயற்பியலின் பிறப்பைக் குறிக்கிறது. [2] 2023- ஆம் ஆண்டில், பியேர் அகோத்தினி, ஆன் லியூலியே உடன் இணைந்து, இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பெரென்சு கிரௌசு
Ferenc Krausz
பிறப்பு17 மே 1962 (1962-05-17) (அகவை 61)
மோர், அங்கேரி
துறைஆட்டோசெக்கண்டு இயற்பியல்
பணியிடங்கள்
கல்வி
  • இயோத்வோசு லொரான் பல்கலைக்கழகம் (இ.அ)
  • வியென்னா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (முது அறிவியல், முனைவர்)
ஆய்வேடுErzeugung ultrakurzer Lichtimpulse in Neodymium-Glaslasern (1991)
ஆய்வு நெறியாளர்{{{2}}} ({{{2}}}) [1]
விருதுகள்இயற்பியல் வுல்ஃப் பரிசுகள் (2022)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (2023)
இணையதளம்
mpg.de/348075/quantum-optics-krausz

கல்வி வாழ்க்கை

கிரௌசு, ஓட்வாசு லோரான்டு பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு இயற்பியலையும், அங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலையும் பயின்றார். ஆசுத்திரியாவில் உள்ள வியன்னாவின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அவர் தங்கிய பிறகு, அதே நிறுவனத்தில் பேராசிரியரானார். 2003 ஆம் ஆண்டில் இவர் கார்ச்சிங்கில் உள்ள குவாண்டம் ஒளியியலுக்கான மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தில் இயக்குநராக நியமிக்கப்பட்டார், மேலும் 2004 ஆம் ஆண்டில் முனிச்சில் உள்ள மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகத்தில் சோதனை இயற்பியலின் தலைவராக ஆனார். 2006 இல் இவர் மேம்பட்ட ஒளியனியலுக்கான முனிச் மையத்தினை (MAP) உடன் இணைந்து நிறுவி அதன் இயக்குநர்களில் ஒருவரானார்.[3]

ஆராய்ச்சி

இவரும் இவரது ஆராய்ச்சிக் குழுவினரும் ஒரு ஃபெம்டோநொடிக்கும் குறைவான ஒளித் துடிப்பை உருவாக்கி அளந்தனர். எலக்ட்ரான்களின் உள்-அணு இயக்கத்தை நிகழ் நேரத்தில் காணக்கூடியதாக மாற்ற ஆராய்ச்சியாளர்கள் இந்த அட்டோநொடி ஒளித் துடிப்புகளைப் பயன்படுத்தினர். இந்த முடிவுகள் அட்டோநொடி இயற்பியலின் தொடக்கத்தைக் குறித்தன.[4][5][6][7]

1990 களில், பெம்டோநொடி சீரொளி தொழில்நுட்பத்தை அதன் இறுதி வரம்புகளுக்கு மேலும் மேம்படுத்துவதற்கு - (மின்காந்தப் புலத்தின் ஒற்றை அலைவுகளில் தங்கள் ஆற்றலின் பெரும்பகுதியைக் கொண்டு செல்லும் ஒளித்துடிப்புகளை நோக்கிச் செலுத்த) பெரென்சு கிரௌசும் மற்றும் அவரது குழுவினரும் ஏராளமான புதுமைகளுடன் [8] ஒரு அடித்தளத்தை உருவாக்கினர் - வெவ்வேறு வண்ணக் கூறுகளை உயர்-துல்லிய கட்டுப்பாட்டுடன் ஒரு முழு எண்ம வெண்ணிற அகண்ட அலைவரிசையின் மீது தாமதத்துடன் விழச்செய்வது அத்தகைய குறுகிய ஒளித் துடிப்புகளை உருவாக்குவதற்கான ஒரு தவிர்க்க முடியாத முன்நிபந்தனையாகும். பெரெங்கு கிராவ்சு மற்றும் இராபர்ட்டு சிபோக்சு[9] ஆகியோரின் ஆகியோரின் ஒருங்கிணைப்பின் காரணமாக வெளிவரும் காலமுறையற்ற பல்லடுக்குள் (chirped mirrors) இத்தகைய கட்டுப்பாட்டைச் சாத்தியமாக்கியது. இது இன்றைய ஃபெம்டோநொடி சீரொளி அமைப்புகளில் இன்றியமையாததாகும்.

2001 ஆம் ஆண்டில், பெரெங்கு கிரௌசு அவரது குழுவினரால் ஒன்று முதல் இரண்டு அலை சுழற்சிகளைக் கொண்ட தீவிர சீரொளித் துடிப்புகள் மூலம்[10] அட்டோநொடி ஒளித் துடிப்புகளை (தீவிர புற ஊதாக் கதிரின்) உருவாக்குவது மட்டுமல்லாமல் அளவிடவும் முதன்முறையாக முடிந்தது.[11] இதன் மூலம், சிறிது காலத்திற்குப் பிறகு, அணுவகத் துகள் அளவில் எலக்ட்ரான்களின் இயக்கத்தையும் நிகழ் நேரத்தில் கண்டுபிடிக்க முடிந்தது.[12] பெம்டோநொடித் துடிப்பின் அலை வடிவத்தின் கட்டுப்பாடு பெரெங்கு கிராவ்சு மற்றும் அவரது குழுவினரால் நிரூபிக்கப்பட்டது. இதன் விளைவாக மறுஉருவாக்கம் செய்யக்கூடிய அட்டோசெகண்ட் துடிப்புகள் அட்டோநொடி அளக்கும் நுட்பத்தை இன்று சோதனை அட்டோnநாடி இயற்பியலுக்கான தொழில்நுட்ப அடிப்படையாக நிறுவ இயலச் செய்தது.[13][14] சில ஆண்டுகளாக, பெரெங்கு கிராவ்சும் அவரது சக ஊழியர்களும் இந்தக் கருவிகளைக் கொண்டு மூலக்கூறுகளில் எலக்ட்ரான்களைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்றனர்.[15] மற்றும் – முதல் முறையாக – நிகழ்நேரத்தில் எலக்ட்ரான் குடைவு,[16] மின்சுமைப் போக்குவரத்து,[17] ஒத்திசைவான EUV உமிழ்வு,[18] தாமதமான ஒளிமின்னழுத்த விளைவு,[19] இணைதிறன் எலக்ட்ரான் இயக்கம்[20][21] போன்ற ஏராளமான அடிப்படை எலக்ட்ரான் செயல்முறைகளை கவனிக்கவும், மற்றும் மின்கடத்தாப் பொருள்களின் ஒளியியல் மற்றும் மின் பண்புகளின் கட்டுப்பாடு போன்றவற்றையும் இயலச் செய்தது.[22][23] ஜோச்சிம் பர்க்டோர்ஃபர், பால் கோர்கம், தியோடர் ஏன்சு, மிசா இவானோவு, உல்ரிச்சு ஹெய்ன்ஸ்மேன், இசுடீபன் லியோன், ராபின் சாண்ட்ரா, மார்க் இசுடாக்மேன் மற்றும் மார்க்கு விராக்கிங்கு போன்ற அறிவியலாளர்களின் குழுக்களின் சர்வதேச ஒத்துழைப்புடன் இந்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

அங்கீகாரங்கள்

  • 2006 – இராயல் போட்டோகிராபிக் சொசைட்டி முன்னேற்றப் பதக்கம் மற்றும் கெளரவ பெல்லோஷிப்
  • 2013 - ஓட்டோ ஹான் பரிசு
  • 2016 - ஜெர்மன் அறிவியல் அகாடமி உறுப்பினர் லியோபோல்டினா . [24]
  • 2019 - விளாடிலன் லெட்டோகோவ் பதக்கம். [25]
  • 2022 – இயற்பியலில் உல்ஃப் பரிசு . [26]
  • 2022 – அடிப்படை அறிவியலில் BBVA அறக்கட்டளை ஃபிரான்டியர்ஸ் ஆஃப் நாலெட்ஜ் விருது . [27]
  • 2023 – இயற்பியலுக்கான நோபல் பரிசு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பெரென்சு_கிரௌசு&oldid=3852511" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை