பொட்டாசியம் அசிட்டேட்டு

பொட்டாசியம் அசிட்டேட்டு (Potassium acetate, KCH3COO) அசிட்டிக் காடியின் பொட்டாசியம் உப்பு ஆகும்.

பொட்டாசியம் அசிட்டேட்டு
Skeletal formula of potassium acetate
பெயர்கள்
வேறு பெயர்கள்
பொட்டாசியம் உப்பு, E261
இனங்காட்டிகள்
127-08-2 Y
ChEMBLChEMBL1201058 N
ChemSpider29104 N
InChI
  • InChI=1S/C2H4O2.K/c1-2(3)4;/h1H3,(H,3,4);/q;+1/p-1 N
    Key: SCVFZCLFOSHCOH-UHFFFAOYSA-M N
  • InChI=1/C2H4O2.K/c1-2(3)4;/h1H3,(H,3,4);/q;+1/p-1
    Key: SCVFZCLFOSHCOH-REWHXWOFAA
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்31371
  • CC(=O)[O-].[K+]
பண்புகள்
C2H3KO2
வாய்ப்பாட்டு எடை98.14 g·mol−1
தோற்றம்வெண்ணிற நீரை உறிஞ்சும் படிகப் பொடி
அடர்த்தி1.8 கி/செமீ3 (20 °செ)[1]
1.57 கி/செமீ3 (25 °செ)
உருகுநிலை 292 °C (558 °F; 565 K)
கொதிநிலைமக்கி உருச்சிதையும்
216.7 கி/100 மிலி (0.1 °செ)
233.8 கி/100 மிலி (10 °செ)
268.6 கி/100 மிலி(25 °செ)
320.8 கி/100 மிலி (40 °செ)
390.7 கி/100 மிலி (96 °செ)[2]
கரைதிறன்மதுசாரத்தில் கரையும், திரவ அமோனியா
ஈதர், அசிட்டோன்-இல் கரையாது
மெத்தனால்-இல் கரைதிறன்24.24 கி/100 கி (15 °செ)
53.54 கி/100 கி (73.4 °செ)[1]
எத்தனால்-இல் கரைதிறன்16.3 கி/100 கி[1]
கந்தக டைஆக்சைடு-இல் கரைதிறன்0.06 கி/கிகி (0 °செ)[1]
காடித்தன்மை எண் (pKa)4.76
கட்டமைப்பு
படிக அமைப்புஒற்றைச்சரிவு
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation ΔfHo298
−722.6 கிலோயூல்/மோல்[1]
நியம மோலார்
எந்திரோப்பி So298
150.82 யூல்/மோல்·கெல்வின்[3]
வெப்பக் கொண்மை, C109.38 யூல்/மோல்·கெல்வின்[3]
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
3250 மிகி/கிகி (வாய்வழி, எலி)[4]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

பொட்டாசியத்தைக் கொண்டுள்ள காரமான பொட்டாசியம் ஐதராக்சைடு அல்லது பொட்டாசியம் கார்பனேட்டை அசிட்டிக் அமிலத்துடன் வினைப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது:

CH3COOH + KOH → CH3COOK + H2O

இந்த வகை வினையானது, அமில-கார வினை வகையானதாகவும் அறியப்படுகிறது.

ஒன்றரைஐதரேட்டானது நீர்க்கரைசலில் (CH3COOK·1½H2O) 41.3 °செல்சியசில் பாதியளவு ஐதரேட்டை உருவாக்கத் தொடங்குகிறது.

பயன்பாடுகள்

பனிநீக்கம்

பொட்டாசியம் அசிட்டேட்டானது பனி உருவாதலைத் தடுக்கும் காரணியாகவும் அதை நீக்கப் பயன்படும் காரணியாகவும் பயன்படுகிறது. கால்சியம் குளோரைடு அல்லது மக்னீசியம் குளோரைடு போன்ற பனிநீக்கியாகப் பயன்படும் குளோரைடு உப்புகளுக்கான பதிலியாகப் பயன்படுகிறது. இது மண்ணின்மீது மிகவும் தீவிரமற்றும், மென்மையாகவும் செயல்படுகிறது. இதன் காரணமாகவும், குறைவான அரிக்கும் தன்மையுடைய பொருளாகவும் இருப்பதால் விமான நிலைய ஓடுபாதைகளில் இது பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இது மிகுந்த செலவினத்தை ஏற்படுத்தும் பொருளாகவும் இருக்கிறது.

தீ அணைப்பான்

பொட்டாசியம் அசிட்டேட்டு எரியும் எண்ணெய் வகைகளின் மீது ஒரு ஓடு போன்ற அமைக்க இயலும் தன்மையின் காரணமாகவும் மற்றும் குளிர்விக்கும் பொருளாகவும் இருக்கும் காரணத்தால் 'கே' வகை தீயணைப்பான்களில் ஒரு முக்கிய தீயணைப்புப் பொருளாகப் பயன்படுகிறது. 

உணவு சேர்க்கைப் பொருள்

பொட்டாசியம் அசிட்டேட்டானது உணவுப்பொருட்களுடன் சேர்க்கப்படும் ஒரு சேர்க்கைப் பொருளாகவும், உணவு பதப்படுத்தியாகவும் மற்றும் அமிலத்தன்மையை ஒழுங்குபடுத்தும் பொருளாகவும் பயன்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில், இது E எண் E261 என குறிக்கப்படுகிறது;[5] இச்சேர்மமானது அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும்[6] ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்ட உணவு சேர்க்கைப் பொருளாகும்.[7] பொட்டாசியம் ஐதரசன் டைஅசிட்டேட்டு (CAS #4251-29-0 ) KH(OOCCH3)2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய சேர்மமும் இதே E எண் உடைய தொடர்புடைய உணவு சேர்க்கைப் பொருளாகும்.

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்