வெப்பக் கொண்மை

பொருளின் பண்புகள்
வெப்பக் கொண்மை
அமுக்குமை
வெப்ப நீண்மை

வெப்பக் கொண்மை, வெப்பக் கொள்ளளவு அல்லது வெப்பக் கொள்திறன் (heat capacity, thermal capacity) என்பது குறித்த நிறை உள்ள பொருளுக்கு எவ்வளவு வெப்ப ஆற்றலைத் தந்தால் அப்பொருளின் வெப்பநிலை ஒரு பாகை அளவுக்கு உயரும் என்பதைக் குறிக்கும் ஓர் அடிப்படையான பண்பு. அதே வேளை தன்வெப்பக்கொள்ளளவு (specific heat capacity) அல்லது தன்வெப்பக்கொண்மை என்பது ஓரலகு நிறையுடைய பொருளின் வெப்பநிலையை ஒரு பாகை அளவுக்குஉயர்த்தத் தேவையான வெப்ப ஆற்றலின் அளவினைக் குறிக்கும். இப் பண்பு 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுகாட்லாந்து இயற்பியலாளர் யோசப் பிளாக் (1728-1799) என்பவரின் ஆய்வுகளின் வழி உணர்ந்த ஒன்று[1].

அதிக வெப்பக்கொண்மை உள்ள பொருளின் வெப்பநிலையைக் குறித்த அளவுக்கு உயர்த்த அதிக வெப்ப ஆற்றல் தேவைப்படும். 25 செல்சியசு வெப்பநிலையில் உள்ள ஒரு கிலோகிராம் எடையுள்ள நீரின்வெப்பநிலையை ஒரு பாகை கெல்வின் அளவுக்குக் கூட்டத் தேவைப்படும் வெப்ப ஆற்றல் 4.1813 கிலோஜூல் ஆகும். ஆகவே நீரின் தன்வெப்பக்கொண்மை 4.1813 கிஜூ/கிகி.கெ). ஆனால் ஒரு கிலோகிராம் எடையுள்ள தங்கத்தை (25 செல்சியசு), ஒரு பாகை கெல்வின் அளவு வெப்பநிலை உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றல் அளவு 0.1291 கிஜூ/கிகி.கெ). மட்டுமே. ஆகவே தங்கத்தின் தன்வெப்பக்கொண்மை நீரின் தன்வெப்பக்கொண்மையை விடக் குறைவு.

வெப்பக்கொண்மையை குறித்த எடையுள்ள பொருளை அடிப்படையாகக் கொண்டு அளப்பதைப் போலவே ஒரு குறிப்பிட்ட கொள்ளளவு அல்லது பருமனளவு உள்ள பொருளுக்கு என அளப்பதும் வழக்கம். இதனை நிலைகொள்ளளவு வெப்பக்கொண்மை (c v) என்பர். அதே போல ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு எடை கொண்ட அளவுக்கும் (மோல் அளவுக்கும்) அளப்பதுண்டு. இதனை மோலார் வெப்பக் கொண்மை அல்லது மோலார் வெப்பக் கொள்திறன் என்று கூறுவர். இப்படி ஒரு மோலுக்கான வெப்பக் கொண்மையை அறியும் பொழுது பெரும்பாலும் எல்லாப் பொருளும் டியூலாங்-பெட்டிட் விதி வரையறை செய்த 25 கிஜூ/(மோல். கெ) அளவுக்குள்தான் இருக்கின்றன. ஆனால் அமோனியா, கார்பன்-டை-ஆக்சைடு போன்ற ஒருசில வளிமப் பொருள்களுக்குக் கூடுதலான மோல் வெப்பக்கொண்மை உள்ளன. சில பொருள்களின் வெப்பக் கொண்மைகள் கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

பொருள்பொருளின் இயல்நிலைதன்வெப்பக்கொண்மை
cp அல்லது cm
kJ kg−1 K−1
நிலையழுத்த மோல் வெப்பக்கொண்மை
Cp,m
J mol−1 K−1
நிலைகொள்ளளவு மோல் வெப்பக்கொண்மை
Cv,m
J mol−1 K−1
கொள்ளளவு வெப்பக்கொண்மை
J cm−3 K−1
காற்றுமண்டல காற்று (கடல் மட்டம், உலர்ந்த, 0 °C)வளிமம்1.003529.0720.76430.001297
காற்று (வழக்கமான அறை நிலைகளில்A)வளிமம்1.01229.1920.85
அலுமினியம்திண்மம்0.89724.22.422
அமோனியாநீர்மம்4.70080.083.263
விலங்கு (மற்றும் மனித) இழையம்[2]கலவை 3.5-3.7*
அந்திமணிதிண்மம்0.20725.21.386
ஆர்கன்வளிமம்0.520320.786212.4717
ஆர்சனிக்திண்மம்0.32824.61.878
பெரிலியம்திண்மம்1.8216.43.367
பிசுமத்[3]திண்மம்0.12325.71.20
செம்புதிண்மம்0.38524.473.45
கார்பன் டை ஆக்சைட்டு CO2[4]வளிமம்0.839*36.9428.46
வைரம்திண்மம்0.50916.1151.782
எதனோல்நீர்மம்2.441121.925
காசலின்நீர்மம்2.222281.64
கண்ணாடி[3]திண்மம்0.84
தங்கம்திண்மம்0.129125.422.492
கருங்கல்[3]திண்மம்0.7902.17
காரீயம்திண்மம்0.7108.531.534
ஈலியம்வளிமம்5.193220.786212.4717
ஐதரசன்வளிமம்14.3028.82
ஐதரசன் சல்பைட்டு H2S[4]வளிமம்1.015*34.60
இரும்புதிண்மம்0.45025.13.537
ஈயம்திண்மம்0.12726.41.44
லித்தியம்திண்மம்3.5824.81.912
மக்னீசியம்திண்மம்1.0224.91.773
பாதரசம்திரவம்0.139527.981.888
நைதரசன்வளிமம்1.04029.1220.8
நியான்வளிமம்1.030120.786212.4717
ஒக்சிசன்வளிமம்0.91829.38
பரவின் மெழுகுதிண்மம்2.59002.325
சீலிக்கா (fused)திண்மம்0.70342.21.547
வெள்ளி[3]திண்மம்0.23324.92.44
தங்குதன்[3]திண்மம்0.13424.82.58
யுரேனியம்திண்மம்0.11627.72.216
நீர் (ஆவி)வளிமம் (100 °C)2.08037.4728.03
நீர்நீர்மம் (25 °C)4.181375.32774.534.186
நீர் (பனிக்கட்டி)[3]திண்மம் (-10 °C)2.05038.091.938
துத்த நாகம்[3]திண்மம்0.38725.22.76
All measurements are at 25 °C unless otherwise noted.
Notable minima and maxima are shown in maroon.

ஒரு பொருளில் உள்ள அணுத்தொடர்களின் அதிர்வெண் இயல்புகளைக் கொண்டு டிபை என்பவர் வெவ்வேறு வெப்பநிலைகளில் வெப்பக் கொண்மை எவ்வாறு மாறும் என்பது குறித்து டிபை விதி என்னும் ஒரு நெறிமுறையைத் தந்தார். ஐன்ஸ்டைன் இந்த டிபை விதியைவிட நெருக்கமான திருந்திய நெறிமுறை ஒன்றை வழங்கினார்.

வெப்பக்கொண்மை: டிபை விதியும் ஐன்ஸ்டைன் விதியும்

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வெப்பக்_கொண்மை&oldid=2943596" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை