பொட்டாசியம் பெர்சல்பேட்டு

பொட்டாசியம் பெர்சல்பேட்டு (Potassium persulfate) என்பது K2S2O8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் பெராக்சி இருசல்பேட்டு என்றும் அழைக்கப்படும் இச்சேர்மம் வெண்மை நிறத் திண்மமாகவும் தண்ணீரில் நன்றாகக் கரையக்கூடியதாகவும் உள்ளது. வலிமையான ஆக்சிசனேற்றியாகச் செயல்படும் இவ்வுப்பு பலபடியாதல் வினைகளை தொடங்கி வைக்கும் சேர்மமாக விளங்குகிறது.

பொட்டாசியம் பெர்சல்பேட்டு
Potassium persulfate
Two potassium cations and one peroxydisulfate anion
Ball-and-stick model of the crystal structure
Potassium persulfate as a white powder
பெயர்கள்
வேறு பெயர்கள்
பொட்டாசியம் பெராக்சி இருசல்பேட்டு
ஆந்தியான்
பொட்டாசியம் பெர் இருசல்பேட்டு
இனங்காட்டிகள்
7727-21-1 Y
ChemSpider22821 N
EC number231-781-8
InChI
  • InChI=1S/2K.H2O8S2/c;;1-9(2,3)7-8-10(4,5)6/h;;(H,1,2,3)(H,4,5,6)/q2*+1;/p-2 N
    Key: USHAGKDGDHPEEY-UHFFFAOYSA-L N
  • InChI=1/2K.H2O8S2/c;;1-9(2,3)7-8-10(4,5)6/h;;(H,1,2,3)(H,4,5,6)/q2*+1;/p-2
    Key: USHAGKDGDHPEEY-NUQVWONBAA
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்24412
வே.ந.வி.ப எண்SE0400000
  • [O-]S(=O)(=O)OOS(=O)(=O)[O-].[K+].[K+]
UN number1492
பண்புகள்
K2S2O8
வாய்ப்பாட்டு எடை270.322 கி/மோல்
தோற்றம்வெண்மை தூள்
மணம்நெடியற்றது
அடர்த்தி2.477 கி/செ.மீ3[1]
உருகுநிலை< 100 °C (212 °F; 373 K) (சிதைவடையும்)
1.75 கி/100 மி.லி (0 °செ)
4.49 கி/100 மி.லி (20 °செ)
கரைதிறன்ஆல்ககாலில் கரையாது
ஒளிவிலகல் சுட்டெண் (nD)1.467
கட்டமைப்பு
படிக அமைப்புமுச்சரிவு
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்ICSC 1133
ஈயூ வகைப்பாடுஆக்சிசனேற்றி (O)
தீங்கானது (Xn)
எரிச்சலூட்டும் (Xi)
தீப்பற்றும் வெப்பநிலைஎளிதில் தீப்பற்றாது.
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
802 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள்பொட்டாசியம் சல்பைட்டு
பொட்டாசியம் சல்பேட்டு
பொட்டாசியம் பெராக்சியொருசல்பேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள்சோடியம் பெர்சல்பேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

கந்தக அமிலத்தில் இட்ட பொட்டாசியம் பைசல்பேட்டின் குளிர்ந்த கரைசலை அதிக மின்னடர்த்தியில் மின்னாற்பகுப்பு செய்து பொட்டாசியம் பெர்சல்பேட்டைத் தயாரிக்கலாம்[1]

2 KHSO4 → K2S2O8 + H2

பொட்டாசியம் பைசல்பேட்டுடன் (KHSO4) அதிக கரைதிறன் கொண்ட உப்பான அமோனியம் பெராக்சி இருசல்பேட்டு (NH4)2S2O8. கரைசலைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் பொட்டாசியம் பெர்சல்பேட்டைத் தயாரிக்கலாம். பொதுவாக பொட்டாசியத்தின் சல்பேட்டு உப்பை புளோரினைப் பயன்படுத்தி ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் பொட்டாசியம் பெர்சல்பேட்டைத் தயாரிப்பது உரிய வழிமுறையாகும்.

பயன்கள்

இவ்வுப்பு பல ஆல்கீன்களின் சிடைரின்-பியூட்டாடையீன் ரப்பர், பல்நாற்புளோரோ எத்திலீன் போன்ற பலபடியாக்கல் வினைகளையும் அவற்றைச் சார்ந்த பொருட்கள் தயாரிப்பதற்கான வினையையும் தொடங்கி வைக்கிறது. கரைசலாக இருக்கும்போது இவ்விரு எதிர் அயனிச் சேர்மம் பிரிகையடைந்து தனி உறுப்புகளாக மாறுகிறது:[3].

[O3SO-OSO3]2− 2 [SO4]

பீனால்களின்[4] எல்ப்சு பெர்சல்பேட்டு ஆக்சிசனேற்ற வினையில் இது ஆக்சிசனேற்றியாகச் செயல்படுவது போல கரிம வேதியியல்|கரிம வேதியியலில்]] ஆக்சிசனேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு வலுவான வெளுக்கும் முகவராக இது ஐதரசன் பெராக்சைடுடன் சேர்க்கப்பட்டு தலைமுடி சாயங்களை வெளுக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

சுற்றுச்சூழல் மாதிரிகளுக்கு குறிப்பாக நீர்க்கரைசல்களுடன் ஒரு ஆக்சிசனேற்றியாகச் செயல்பட்டு நைட்ரசன் அடங்கிய சேர்மங்களை உறுதிப்படுத்த இச்சேர்மம் உதவுகிறது.[5]

முன்னெச்சரிக்கை

வலுவான ஆக்சிசனேற்றியாக இருப்பதால் கரிமச் சேர்மங்களுடன் பொருந்தாமல் முரண்பட்டு காணப்படுகிறது.

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்