மக்வான்பூர் மாவட்டம்

மக்வான்பூர் மாவட்டம் (Makawanpur District) (நேபாளி: मकवानपुर जिल्ला), நேபாள நாட்டின் பாக்மதி மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் ஒன்றாகும். மக்வான்பூர் மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரமான ஹெடௌதா ஒரு துணைநிலை மாநகராட்சியும் ஆகும்.

நேபாளத்தில் பாக்மதி மாநிலத்தில் மக்வான்பூர் மாவட்டத்தின் அமைவிடம்

நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றான இம்மாவட்டம் நாராயணி மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பரப்பளவு 2,426 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்வான்பூர் மாவட்ட மக்கள் தொகை 4,20,477 ஆக உள்ளது. [1] இங்கு நேபாள மொழி பெரும்பான்மையாக பேசப்படுகிறது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

மக்வான்பூர் மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 3,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம், கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம் மற்றும் மிதவெப்ப வளையம் என மூன்று விதமான தட்ப வெப்ப நிலைகளில் காணப்படுகிறது. [2]

உள்ளாட்சி நிர்வாகம்

மக்வான்பூர் மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களையும், நகராட்சியையும் காட்டும் வரைபடம்

மக்வான்பூர் மாவட்டத்தில் நாற்பத்தி ஒன்று கிராமிய நகராட்சிகளும், ஹேட்டவுடா என்ற ஒரு நகர்புற நகராட்சியும் உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை