மருடி

சரவாக் மாநிலத்தில் உள்ள நகரம்.

மருடி (மலாய் மொழி: Marudi; ஆங்கிலம்: Marudi; சீனம்: 马鲁帝) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் மிரி பிரிவு, மிரி மாவட்டத்தில் உள்ள நகரமாகும்.

மருடி நகரம்
Marudi Town
சரவாக்
மருடி நகரம் is located in மலேசியா
மருடி நகரம்
மருடி நகரம்
ஆள்கூறுகள்: 4°11′0″N 114°19′0″E / 4.18333°N 114.31667°E / 4.18333; 114.31667
நாடு Malaysia
மாநிலம் சரவாக்
பிரிவு மிரி பிரிவு
மாவட்டம்மருடி மாவட்டம்
அரசு
 • மாவட்ட அதிகாரிமார்க்கஸ் சிபோங்
Markus Sibong
பரப்பளவு
 • மொத்தம்21,634.0 km2 (8,518 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்90,100
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
மலேசிய அஞ்சல் குறியீடு9805x
மலேசியத் தொலைபேசி எண்கள்085 (landline only)
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்QM; HQ
இணையதளம்www.marudidc.org

இந்த நகரம் பாராம் ஆற்றின் (Baram River) கரையில், ஆற்றின் முகப்பில் இருந்து 100 கி.மீ. (62 மைல்) உட்பாகத்தில் உள்ளது. மிரி நிறுவப் படுவதற்கு முன்பு, மருடி நகரம், சரவாக் மாநிலத்தின் வடக்குப் பகுதியின் நிர்வாக மையமாக இருந்தது.

யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமான குனோங் முலு தேசிய பூங்காவிற்கு (Gunung Mulu National Park) நுழைவாயில் நகரமாகவும் விளங்குகிறது.

வரலாறு

சார்லஸ் ஹோஸ்

1868-ஆம் ஆண்டில் ஜேம்ஸ் புரூக்கிற்கு (James Brooke) பிறகு சார்லஸ் புரூக் (Charles Brooke) என்பவர் சரவாக்கின் புதிய ராஜாவாகப் பதவியேற்றார்.

1883 வாக்கில், புரூணையின் சுல்தான் அப்போதைய சுல்தான் அப்துல் மோமின் (Abdul Momin) என்பவர், மிரி உட்பட பாரம் பகுதியை சார்லஸ் புரூக்கிற்குக் கொடுத்து விட்டார். அந்தக் காலக் கட்டத்தில் சரவாக் மாநிலம் முழுமைக்கும் புரூணை சுல்தானகத்தின் ஆளுமையின் கீழ் இருந்தது.[1]

மருடியில் ஒரு கோட்டை

சரவாக்கின் நான்காவது பிரிவு உடனடியாக உருவாக்கப்பட்டது. அதற்கு மாமெர்தோ ஜார்ஜ் குரிட்ஸ் (Mamerto George Gueritz) என்பவர் முதல் ஆளுநராக (Resident of the Division) பதவியில் அமர்த்தப் பட்டார்.

1883-இல் மிரிக்கு கிழக்கே 43 கி.மீ. தொலைவில் உள்ள மருடியில் ஒரு கோட்டை கட்டப்பட்டது.[2] அதற்கு கிளாட் டவுன் (Claudetown) என்று பெயரிடப்பட்டது. 1884-இல், அது நான்காம் பிரிவின் நிர்வாக மையமாக மாறியது.

புதிய நிர்வாகத்திற்கு இரண்டு இளம் அதிகாரிகள்; 30 புரவிப்படை வீரர்கள்; மற்றும் ஒரு சில பூர்வீகக் காவலர்கள் உதவினார்கள்.[3]

1891-ஆம் ஆண்டில் சார்லஸ் ஹோஸ் (Charles Hose) என்பவர் பாராம் மாவட்டத்தின் (Resident of Baram District) ஆளுநர் ஆனார். மருடியில் இருந்த கோட்டை, ஹோஸ் கோட்டை (Fort Hose) என மறுபெயரிடப்பட்டது.

மருடி காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மருடி&oldid=3645002" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை