மலேசிய பாதுகாப்பு படைகள்

மலேசிய பாதுகாப்பு படைகள் ஆங்கிலம்: Malaysian Armed Forces (MAF); மலாய்: Angkatan Tentera Malaysia), மலேசியாவின் பாதுகாப்பு படைகள் ஆகும். மலேசிய பாதுகாப்பு படைகள், மூன்று தொழில்முறை சீருடை அணிந்த சேவைகளாக செயல்படுகின்றன.

மலேசிய பாதுகாப்பு படைகள்
Malaysian Armed Forces
Angkatan Tentera Malaysia
ஆயுதப்படைகளின் சின்னம்
மலேசிய இராணுவக் கொடி
நிறுவப்பட்டது1 மார்ச்சு 1933; 91 ஆண்டுகள் முன்னர் (1933-03-01)
சேவை கிளைகள் மலேசிய தரைப்படை
மலேசிய கடற்படை
மலேசிய வான்படை
தலைமைத்துவம்
தலைமைத் தளபதி மலேசிய மாமன்னர், சுல்தான் இப்ராகிம் இசுகந்தர்
பிரதமர்மலேசியா அன்வர் இப்ராகீம்
அமைச்சர்மலேசியா முகமட் காலிட் நோர்டின்
ஆட்பலம்
படைச்சேவை வயது18 வயது
இராணுவ சேவைக்கு
தயாரான நபர்கள்
15,919,573, வயது 16-49 (2023 est.)
படைச்சேவைக்கு
ஏற்றவர்
13,209,858, வயது 16-49 (2023 est.)
ஆண்டு தோறும்
படைத்துறை வயதெட்டுவோர்
541,943 (2023 est.)
பணியிலிருப்போர்113,000[1][2]
இருப்புப் பணியாளர்51,600
செலவுகள்
நிதியறிக்கைRM19.7 பில்லியன் (US$4.37 பில்லியன்)(FY2024)[3]
மொ.உ.உ இன் சதவீதம்18% (2023)

மலேசிய இராணுவத்தில் மலேசிய தரைப்படை மட்டும் ‘அரச’ என்ற பட்டத்தைப் பெறவில்லை. இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவப் படைகள் மற்றும் படைப்பிரிவுகளுக்கு ‘அரச’ பட்டம் வழங்கப்படுகிறது. மற்ற மலேசியக் கடற்படை; மலேசிய வான்படை ஆகிய இரு படைகளும் ‘அரச’ என்ற பட்டத்துடன் செயல்படுகின்றன.

வரலாறு

இவை 20-ஆம் நூற்றாண்டின் முதற்பாதிக் காலத்தில், வட்டார இராணுவங்களை முன்வைத்து, மலாயாவில் பிரித்தானியர் குடியேற்றத்தின் போது தொடங்கப்பட்டது. மலேசியாவின் இறையாண்மை மற்றும் அதன் உத்திகளை காப்பதே குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

வெளிநாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைக் காப்பது; அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பது, பொது நலன் காப்பது, இயற்கை சேதத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவது மற்றும் தேசிய முன்னேற்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வது என பல்வேறு இலக்குகளை மலேசிய பாதுகாப்பு படைகள் கொண்டுள்ளன.

அத்துடன் ஐக்கிய நாடுகள் (ஐநா) அவையின் பன்னாட்டு முயற்சிகளுக்கு ஏற்ப பன்னாட்டு வெளியுறவுத் தீர்மானங்களை அமல்படுத்தி வருகிறது.

செயல்பாடுகள்

மலேசிய எல்லைகளுக்குள் மலேசிய பாதுகாப்பு படைகளின் முக்கிய நடவடிக்கைகளில் முக்கியமானது; மலாயா கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான கிளர்ச்சியில் தொடங்கின. அது மலாயாவின் அவசரகால நிலை என்று அறியப்பட்டது.

இரண்டாம் உலகப் போரில், மலாயாவில் சப்பானியர் மேற்கொண்ட படையெடுப்பு தான் நவீன காலத்தில் மலாயா எதிர்நோக்கிய ஒரே வெளிநாட்டுத் தாக்குதல் ஆகும். அப்போது மலாயா ஓர் ஒருங்கிணைந்த அரசியல் அமைப்பாக இருக்கவில்லை. அப்போது அது மலாயா கூட்டமைப்பு என்று அழைக்கப்பட்டவில்லை.

இந்தோனேசியா - மலேசியா மோதல்

மலாயாவில் சப்பானியர் படையெடுப்பு நடத்துவதற்கு முன்னர்; நீரிணை குடியேற்றங்கள், மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் மற்றும் மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள் என மூன்று பிரிவுகளாக மலாயா இருந்தது.

அதன் பிறகு அதிபர் சுகர்ணோ தலைமையில் உருவான இந்தோனேசிய மலேசிய மோதலின் போது மலேசிய பாதுகாப்பு படைகள் பங்கெடுத்துக் கொண்டன. அதன் பின்னர் வெளிநாட்டு நடவடிக்கைகளில் முக்கியமாக ஐக்கிய நாடுகள் அவையின் கீழ் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

மேற்கோள்கள்

மேலும் படிக்க

  • Robert Karniol, 'Country Briefing: Malaysia,' ஜேன்ஸ் டிஃவன்ஸ் வீக்லி, 25 நவம்பர் 1995, பக். 25-40

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை