மாயா ஹாரீஸ்

மாயா லெட்சுமி ஹாரீஸ் (Maya Harris; பிறப்பு: ஜனவரி 30, 1967) இவர் ஒரு அமெரிக்க வழக்கறிஞர், பொதுக் கொள்கை  ஆலோசகர் மற்றும் தொலைக்காட்சி விமர்சகராவார். எம்எஸ்என்பிசி குழுமத்தில் அரசியல் ஆய்வாளராகவும், 2015 இல் ஹிலாரி கிளிண்டன் ஜனாதிபதி பிராச்சாரத்தின் போது மூன்று மூத்த கொள்கை ஆலோசகர்களுள் ஒருவாராகவும் இருந்தார்.[1][2] இதற்கு முன்னர் அமெரிக்க வளர்ச்சி மையம் என்ற ஆலோசனை நிறுவனத்தில் ஆய்வாளராக இருந்துள்ளார்.[3] போர்ட் அறக்கட்டளையின் ஜனநாயக, உரிமை மற்றும் நீதியின் துணைத் தலைவராக 2008 முதல் தற்போதைய பதவிக்குச் செல்லும் வரை பணிபுரிந்தார். அதற்கு முன்னர் வட கலிபோர்னியாவிலுள்ள அமெரிக்கன் சிவில் லிபர்டீஸ் யூனியனில் செயல் இயக்குநராகப் பதவி வகித்தார்.[4][5] இதற்கும் முன்னர் சான் ஹொசெயிலுள்ள லிங்கன் சட்டப்பள்ளியில் மூத்த இணையராக இருந்துள்ளார். இவர் சமூக மையம் கொண்ட தேசிய அளவிலான கொள்கை வழிகாட்டலையும், காவல் சீர்திருத்தத் சட்ட கையேட்டையும் எழுதியுள்ளார்.

மாயா ஹாரீஸ்
தனது சகோதரி கமலாவுடன் மாயா ஹாரீஸ், சான் பிரான்சிஸ்கோ நகர் மன்றம், 2014
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஜனவரி 30, 1967
இலினொய், அமெரிக்க ஐக்கிய நாடு
அரசியல் கட்சிமக்களாட்சிக் கட்சி
துணைவர்டோனி வெஸ்ட்
பிள்ளைகள்1
முன்னாள் கல்லூரி

இளமைக்காலமும் கல்வியும்

சேம்பைன்-அர்பன, இலினொய் மாகாணத்தில் பிறந்து சான் பிரான்சிஸ்கோ கடற்கரைப் பகுதியில் வளர்ந்தார். 1960 இல் சென்னையிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சியாளரான சியாமளா கோபாலன் ஹாரீஸ்(1939-2009) என்ற தாய்க்கும்,[6] இசுட்டான்போர்டு பல்கலைக்கழக பொருளாதாரப் பேராசிரியரான ஜமைக்கன்-அமெரிக்க டொனால்ட் ஹாரீஸ் என்ற தந்தைக்கும் மகளாகப் பிறந்தார்.[7] இவரின் தாய்வழி தாத்தவான ராஜம் கோபாலன், ஒரு இந்தியத் தூதராவார்.[8] இந்து சமயம் மற்றும் திருமுழுக்கு சமய நம்பிக்கையுடன் வளர்க்கப்பட்டார்.[9] இவர் எட்டு வயதான போதே இவரின் மூத்த சகோதரி கமலா ஹாரீஸுடன் சேர்ந்து இவர்களிருந்த அடுக்குமாடி கட்டிடத்தைக் குழந்தைகள் விளையாட திறந்தவெளி முற்றமாக மாற்றினார்.[10] 1989 இல் பெர்க்லி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஸ்டான்போர்ட் சட்டப் பள்ளியில் சட்டம் படிக்கையில் கிழக்கு பாலோ அல்டோ சமூகத்தின் சட்டத் திட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளராகவும், மாணவர் குழுவின் இணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.[11]

தொழில்

சட்டம் பயின்ற பின்னர் வடக்கு கலிபோர்னியா மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் எழுத்தராக ஹாரீஸ் பணிபுரிந்தார். 1994 இல் ஜாக்சன் டஃப்ஸ் கோல் & பிளாக் நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ குழுமத்தில் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகளில் வேலை செய்ய சேர்ந்தார். 1997 இல் தேசிய பார் கூட்டமைப்பின் இளம் வழக்கறிஞர் பிரிவில் ஜூனிஸ் டப்யு. வில்லியம்ஸ் இளம் வழக்கறிஞர் என்ற விருதைப் பெற்றார். தொடர்ந்து அடுத்த ஆண்டுகளில் சான் பிரான்சிஸ்கோ நாளிதழ் வெளியிட்ட நாற்பது வயதிற்குட்பட்ட வளரும் வழக்கறிஞர்களுள் முன்னணி இருபதில் ஒருவாக தேர்வானார்.[12] சான் பிரான்சிஸ்கோ சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராகப் பணியாற்றினார். மேலும் நியூ காலேஜ் கலிபோர்னியா சட்டப்பள்ளி மற்றும் சான் ஜோஸின் லிங்கன் சட்டப் பள்ளியில் ஒப்பந்தச் சட்டம் பற்றிய வகுப்புகள் எடுத்தார்.

ஆலோசகராக

பொருளாதார மற்றும் சமூகச் சமத்துவ முன்னேற்றதிற்கான பாலிசிலிங் என்ற தேசிய ஆராய்ச்சி மற்றும் செயல் நிலையத்தில் மூத்த உதவியாளராக இருந்தார். இங்கிருந்தவாறே காவல்துறை மற்றும் மக்களிடையே மாநாடுகளை ஒருங்கிணைத்து,[13] காவல் சீர்திருத்ததிற்கு ஆலோசனை வழங்கினார்.[14] திட்டமிட்ட மாற்றம்: காவல் சீர்திருத்தத்திற்கான செயல்பாட்டாளரின் கையேடு என்ற நூலையும் வெளியிட்டார்.[15]

அமெரிக்க குடியுரிமை சுதந்திர சங்கத்தின் செயல் இயக்குநராகச் சேவையாற்றினார். ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பின் தலைவராக பல்வேறு வழக்குகள், ஊடக உறவாடல்கள், ஆதரவு திரட்டல் மற்றும் அமைப்புப் பணிகளை வழிநடத்தியும் ஒருங்கிணைத்தும் செயல்பட்டார். குற்றவியல் விசாரணையில் இனப்பாகுபாட்டை நீக்கவும், சமத்துவக் கல்விமுறையை அடையவும் இதன் செயல்திட்டங்களில் முக்கியத்துவம் வழங்கப்பட்டன."[16] வளர்ப்புக்குழந்தைக்காக சமூக மையமாக்கப்பட்ட கொள்கைகளைக் கட்டுரையாக வெளியிட்டு, பின்னர் 2006 இல் தி கவெனென்ட் வித் பிளாக் அமெரிக்கா என்ற நூலாக வெளியிட்டார்.[16]2012 இல் ஹாரீஸ் போர்ட் அறக்கட்டளையின் ஜனநாயக, உரிமை மற்றும் நீதியின் துணைத் தலைவராகப் பதவியேற்றார், குறிப்பாக சிறுவர் திருமணம் சிக்கல்களுக்குத் தீர்வுகளைக் கொண்டுவந்தார்.[10]

குடும்ப வாழ்க்கை

டோனி வெஸ்ட் என்பவர் இவரது கணவராவார். ஹாரீஸின் முன்னாள் துணைவருடன் இவருக்கு மீனா ஹாரீஸ் என்ற மகளுமுண்டு. நான்கு வயதான மகளுடன் கண்ணாம்மூச்சி விளையாடிய டோனி வெஸ்ட்டை, 1989 இல் ஸ்ட்டான்போர்ட் சட்டக் கல்லூரியில் பயிலும் போது கண்டார். பின்னர் இந்த நட்பு கல்லூரிக் காலத்திற்குப் பின்னரும் தொடர்ந்தது.[17] பெற்றோரைப் பின்பற்றி மகள் மீனா ஹாரீஸும் ஸ்ட்டான்போர்டில் பட்டம் பெற்று ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் பயின்றார்.[18]

மேற்கோள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மாயா_ஹாரீஸ்&oldid=3581504" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை