மார்ட்டின் லூதர் கிங் நாள்

மார்ட்டின் லூதர் கிங் நாள் (Martin Luther King, Jr. Day) அருள்திரு முனைவர் மார்ட்டின் லூதர் கிங் இளையவரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஐக்கிய அமெரிக்காவில் கூட்டமைப்பு அரசு விடுமுறையாக கடைபிடிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் கிங்கின் பிறந்த நாளான சனவரி 15ஐ ஒட்டி வருகின்ற சனவரி மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

மார்ட்டின் லூதர் கிங் நாள்
1964இல் மார்ட்டின் லூதர் கிங்
அதிகாரப்பூர்வ பெயர்மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாள்
பிற பெயர்(கள்)எம்எல்கே டே, அருள்திரு முனைவர். மார்ட்டின் லூதர் கிங் இளையவர் நாள்
கடைபிடிப்போர்ஐக்கிய அமெரிக்கா
வகைதேசிய நாள்
நாள்சனவரியின் மூன்றாம் திங்கட்கிழமை
2024 இல் நாள்[[சனவரி Expression error: Unexpected < operator.]]

கிங் அமெரிக்க கூட்டமைப்பு மற்றும் மாநில சட்டங்களில் இனப்பாகுபாடுகளை வெற்றிகரமாக எதிர்த்த ஆப்பிரிக்க-அமெரிக்கரின் குடியுரிமை இயக்கத்தில் அகிம்சை வழியை பரப்பியவராவார். 1968ஆம் ஆண்டில் அவர் கொலைசெய்யப்பட்ட பின்னர் அவரது நினைவாக ஓர் கூட்டமைப்பு விடுமுறை கோரும் இயக்கம் ஏற்பட்டது. 1983ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ரோனால்டு ரேகன் இந்த விடுமுறையைச் சட்டமாக்கினார்[1][2] . 1986ஆம் ஆண்டு சனவரி 20 அன்று முதன்முதலாக கடைபிடிக்கப்பட்டது. துவக்கத்தில் இதனை ஐக்கிய அமெரிக்காவின் சில மாநில அரசுகள் இதே பெயரில் கடைபிடிக்க விரும்பாது மாற்றுப் பெயர்களில்[3] அல்லது பிற விடுமுறைகளுடன் இணைத்து கடைபிடித்தன. 2000ஆம் ஆண்டு முதன்முறையாக ஐக்கிய அமெரிக்காவி அனைத்து 50 மாநிலங்களிலும் அதிகாரபூர்வமாக இந்நாள் கடைபிடிக்கப்பட்டது.

ரோனால்டு ரேகன் மார்ட்டின் லூதர் கிங்கின் மனைவியுடன் இந்நாளைக் குறித்த கையொப்பமிடும் விழாவில்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை