மிகைல் மிசூசுத்தின்

மிகைல் விளாதிமீரொவிச் மிசூசுத்தின் (Mikhail Vladimirovich Mishustin, உருசியம்: Михаил Владимирович Мишустин, பிறப்பு: 3 மார்ச் 1966) உருசியப் பொருளாதார அறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 2020 சனவரி 16 இல் உருசியாவின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

மிகைல் மிசூசுத்தின்
Mikhail Mishustin
உருசியாவின் தலைமை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 சனவரி 2020
குடியரசுத் தலைவர்விளாதிமிர் பூட்டின்
முன்னையவர்திமித்ரி மெட்வெடெவ்
நடுவண் வரிகள் சேர்வைப் பணிப்பாளர்
பதவியில்
6 ஏப்ரல் 2010 – 16 சனவரி 2020
குடியரசுத் தலைவர்திமித்ரி மெட்வெடெவ்
விளாதிமிர் பூட்டின்
முன்னையவர்மிகைல் மொக்ரெத்சொவ்
பின்னவர்தனீல் இயெகோரொவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மிகைல் விளாதிமீரொவிச் மிசூசுத்தின்

3 மார்ச்சு 1966 (1966-03-03) (அகவை 58)
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
தேசியம்உருசியர்
அரசியல் கட்சிசுயேச்சை
முன்னாள் கல்லூரிஇசுத்தான்கின்

இவர் 2020 சனவரி 15 இல் உருசியப் பிரதமராக அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டினால் பரிந்துரைக்கப்பட்டார்.[1] சனவரி 16 இல் இவரது நியமனம் அரச தூமா என அழைக்கப்படும் உருசிய நாடாளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[2]

தலைமை அமைச்சர்

அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் 2020 சனவரி 15 இல் நிகழ்த்திய நாடாளுமன்ற உரையில் உருசிய அரசியலமைப்பில் பல திருத்தங்களைப் பிரேரித்தார். இதனை அடுத்து பிரதமர் திமித்ரி மெட்வெடெவ் தமது அமைச்சரவையைக் கலைப்பதாகவும், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அரசுத்தலைவரின் அதிகாரங்கள் சிலவற்றை நாடாளுமன்றத்திற்குப் பகிர்ந்தளிக்கும் பூட்டினின் பரிந்துரைகளை நிறைவேற்றும் பொருட்டு, தாம் பதவி விலகுவதாக மெட்வெடெவ் அறிவித்தார்.[3] இவரது பதவி விலகலை பூட்டின் ஏற்றுக் கொண்டார்.[4] அன்றே பூட்டின் புதிய தலைமை அமைச்சர் பதவிக்கு மிகைல் மிசூசுத்தினப் பரிந்துரைத்தார்.[1] சனவரி 16-இல், நாடாளுமன்றம் மிசூசித்தினைப் பிரதமராக ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இவருக்கு எதிராக வாக்களிக்கவில்லை.[5][6] அதே நாளில் பூட்டின் அவரை தலைமை அமைச்சராக அதிகாரபூர்வமாக நியமித்தார்.[7]

தனிப்பட்ட வாழ்க்கை

திருமணமான மிசூசுத்தினுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.[8] இவர் பனி வளைதடியாட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்.[8]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை