மியாக்தி மாவட்டம்

மியாக்தி மாவட்டம் (Myagdi District) (நேபாளி: म्याग्दी जिल्ला), தெற்காசியாவின் நேபாள நாட்டின், கண்டகி மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் பேனி நகரம் ஆகும்.

நேபாளத்தில் மியாக்தி மாவட்டத்தின் அமைவிடம்

தவளகிரி மண்டலத்தில் உள்ள இம்மாவட்டத்தின் பரப்பளவு 2,297 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,13,641 ஆகும். [1]

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 6,400 மீட்டர் உயரம் வரை இமயமலையில் பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம், கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஐந்து காலநிலைகளில் காணப்படுகிறது. [2]

உள்ளாட்சி மன்றங்கள்

மியாக்தி மாவட்டத்தின் உள்ளாட்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்

மியாக்தி மாவட்டத்தில் 45 கிராம வளர்ச்சி மன்றங்களும், பெனி எனும் நகராட்சியும் உள்ளது.

சுற்றுலா

மியாக்தி மாவட்டத்தின் காரா கிராம வளர்ச்சி மன்றத்தில் உள்ள பூன் மலைகள் மற்றும் கோராபானி மலைகள் மலையேற்ற வீரர்களுக்கும் மற்றும் மலையேற்ற பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் பிரபலமானதாகும். [3] [4]ததோபானி வெந்நீர் ஊற்று இம்மாவட்டத்தில் உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மியாக்தி_மாவட்டம்&oldid=3567622" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை