மிருச்சகடிகம்

மிருச்சகடிகம் [1] Mṛcchakaṭika (The Little Clay Cart) (சமக்கிருதம்: मृच्छकटिका; கிபி 3 – 4ம் நூற்றாண்டில் சூத்திரகர் எனும் உஜ்ஜைன் நாட்டு மன்னரால் சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட நாடகம் ஆகும்.[2][3]

மிருச்சகடிகம்
மண்ணியல் சிறுதேர்
The Little Clay Cart
மிருச்சகடிக கதாபாத்திரமான வசந்தசேனை, (ஓவியம் ராஜா ரவி வர்மா.
கதைசூத்திரகர்
கதாப்பாதிரங்கள்
  • சாருதத்தன்
  • வசந்தசேனை
  • சம்ஸ்தானகன்
  • ஆரியகன்
  • சார்விலாகன்
  • மதனிகா
மொழிசமசுகிருதம்
கருப்பொருள்காதலும், வீரமும்
Settingபண்டைய உஜ்ஜைன் நகரம்
கிபி நான்காம் நூற்றாண்டு

சிலப்பதிகாரம் போன்ற மிருச்சகடிகம் எனும் நாடக நூலை, தமிழ் மொழியில் மண்ணியல் சிறுதேர் எனும் தலைப்பில் மு. கதிரேசச் செட்டியார் மொழிபெயர்த்துள்ளார்.[4] சங்கரதாஸ் சுவாமிகள் மிருச்சகடிகம் எனும் தமிழ் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

கதைச் சுருக்கம்

உஜ்ஜைன் நகரத்தின் பெரும் வணிகனான சாருதத்தன் மீது அரண்மனை நடனப் பெண்னும், கணிகையுமான வசந்தசேனை காதல் வயப்படுகிறாள். வசந்தசேனை மீதுள்ள காதலினால், வணிகத்தின் மீது நாட்டமின்றி, தனது விலை மதிப்பற்ற செல்வங்களை வசந்தசேனைக்கு வழங்கி, உறவாடி மகிழ்கிறான்.

அதே நேரத்தில் மன்னர் பாலகரின் வைப்பாட்டியின் தம்பியும், மைத்துனனுமான் சம்ஸ்தானகன், வசந்தசேனை மீது ஒருதலைக் காதல் கொண்டு, அவளை துரத்துகையில்,[5], வசந்தசேனை, வணிகன் சாருதத்தனின் வீட்டில் தஞ்சம் அடைகிறாள். அங்கு சாருதத்தனின் மனைவி தூதையின் வறுமை நிலைக் கண்டு, சாருதத்தனை மீண்டும் வணிகத்தில் ஈடுபடுத்தி செல்வம் சேர்க்க, தனது விலைமதிப்பற்ற நகைகளைக் கொடுத்துவிட்டுச் செல்கிறாள்.

வசந்தசேனை வீட்டில் பணிபுரியும் அடிமைப் பெண் மதனிகாவை பொருள் கொடுத்து மீட்டுச் செல்வதற்கு, அவள் காதலன் சார்விளாகன் எனும் இளைஞன், சாருதத்தன் வீட்டில் திருடிய நகைகளுடன், வசந்தசேனை வீட்டிற்கு செல்கிறான். சார்விளாகனின் கையிலிருந்த நகைகளைக் கண்ட வசந்தசேனை, அதனை வணிகன் சாருதத்தனுக்கு தான் வழங்கிய நகைகளே என்று உறுதி செய்து கொள்கிறாள். இருப்பினும் வசந்தசேனை தன் அடிமைப் பணிப் பெண்னை, அவள் காதலனான சார்விளானுடன் அனுப்பி விடுகிறாள். வசந்தசேனை, கணிகைக்குரிய தொழிலிருந்து விலகி, தன் வீட்டில் சாருதத்தனுடன் முழுவதுமாக வாழ்கிறாள்.

சாருதத்தனின் மனைவி தூதை, தனது விலைமதிப்பற்ற மாணிக்கமாலையை தன் பணிப்பெண் இராதனிகாவிடம் மூலம் வசந்தசேனையிடம் கொடுத்து, தன் கணவன் சாருதத்தனை வசந்தசேனையிடமிருந்து மீட்க முற்படுகிறாள். ஆனால் வசந்தசேனை மாணிக்கமாலையை ஏற்காமல் சாருதத்தனின் மனைவியிடமே திருப்பி அனுப்பி விடுகிறாள்.

சில ஆண்டுகள் கழித்து ஒருமுறை, சாருதத்தனுக்கும், அவன் மனைவி தூதைக்கும் பிறந்த மகன் ரோகசேனன் தெருவில் களிமண் வண்டியுடன் விளையாடுகையில், எதிர்புறம் சாருதத்தனுக்கும் வசந்தசேனைக்கும் பிறந்த மகன் தங்க நிற வண்டியுடன் விளையாடுவதை காண்கிறான். தனக்கும் விளையாடுவதற்கு அதே போன்ற தங்க நிற வண்டி வேண்டும் என தன் அன்னை தூதையிடம் அடம் பிடிக்கிறான். ரோகசேனனின் செவிலித்தாயான இராதனிகா, ரோகசேனனை சமானப்படுத்தி, வசந்தசேனையிடம் அழைத்து வந்து, இப்பிரச்சனையை தீர்வு கோரியபோது, வசந்தசேனை தனது நகைகளைக் கொடுத்து பொன்னிற வண்டி வாங்கச் சொல்கிறாள்.

வசந்தசேனை கொடுத்த நகைகளையும் மாணிக்கமாலையையும் மீண்டும் வசந்தசேனையிடமே கொடுப்பதற்காக சாருதத்தனின் மனைவி தூதை இறுதிமுயற்சி எடுத்தபோது, இருவரிடையேயான உணர்ச்சிப் பரிமாறல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இக்காட்சி சங்க இலக்கியத்தில் தலைவியின் மகனை பரத்தை, தன் மகனாக கருதி ஆரத்தழுவுவது, மிருச்சகடிகத்திலும் பேசப்பட்டுள்ளது.

வசந்தசேனையின் உண்மைக் காதலுக்கு மதிப்பளித்த தலைவியான சாருதத்தனின் மனைவி தூதை, வசந்தசேனையின் பூந்தோட்டத்தில் அமர்ந்திருக்கும் தன் கணவன் சாருதத்தனை கண்டு, வசந்தசேனையுடன் தொடர்ந்து வாழ்ந்து, அவளை மகிழ்விக்குமாறு கூறி சென்றுவிடுகிறாள்.

மறுபுறம் தன்னை ஏற்க மறுத்த வசந்தசேனையை அரசனின் மைத்துனன் சம்ஸ்தானகன் தாக்கியதில் மூர்ச்சை அடைகிறாள் வசந்தசேனை. வசந்தசேனை இறந்துவிட்டதாகக் கருதிய சமஸ்தானகன், அக்கொலைப்பழியை சாருதத்தன் மீது சுமத்தினான். எனவே சாருதத்தன் மரண தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்படுகிறான்.

இப்போராட்டத்தின் போது, வசந்தசேனை வீட்டில் அடிமைப் பெண்னாகப் பணிபுரிந்த மதனிகாவின் காதலனான சார்விளாகனின் உற்ற நண்பனும், நாடு கடத்தப்பட்ட உஜ்ஜைன் நாட்டு இளவரசன் ஆர்யகன் எனும் இடையரிளவல், நாட்டில் சமூக நீதி கோரி மக்களைத் தூண்டி போராடுகிறான், அரசனின் மைத்துனன் சம்ஸ்தானகன் தூண்டுதல் பேரில் மன்னர் ஆர்யகனை சிறையில் அடைத்து விடுகிறார்.

பின்னர் சார்விளாகனால் சிறையிலிருந்து மீட்கப்பட்ட ஆர்யகன் எனும் இடையரிளவல் தப்பிச் செல்லும் வழியில் சாருதத்தனின் வீட்டில் தலைமறைவாக இருந்தான்.

ஆர்யகன் எனும் இடையரிளவல், உஜ்ஜைன் நாட்டு கொடுங்கோல் அரசன் பாலகரை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றுகிறான். சமஸ்தானகனால் இறந்ததாக கருதப்பட்ட வசந்தசேனையை துறவியொருவரால் காப்பாற்றப்படுகிறாள். சாருதத்தனின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக கொலைக்களத்திற்கு கொண்டு செல்கையில், அங்கு வந்த வசந்தசேனை உண்மைகளை வெளிப்படுத்தியதால், மன்னரின் மைத்துனன் சமஸ்தானகனின் கபட நாடகங்கள் அம்பலப்படுத்தப்படுகிறது. இதனால் சாருதத்தன் மரண தண்டனையிலிருந்து காப்பாற்றப்படுகிறார்.

இறுதியில் சமஸ்தானகனையும், கொடுங்கோல் மன்னரையும் கொடுஞ்சிறையில் அடைக்கின்றனர்.[6]

கதை மாந்தர்கள்

  • சாருதத்தன், உஜ்ஜைன் நகர அந்தண வணிக இளைஞன்
  • தூதை, சாருதத்தனின் மனைவி
  • ரோகசேனன், சாருதத்தனின் மகன்
  • வசந்தசேனை, அரண்மனை நடன மங்கை / கணிகை
  • மதனிகா, வசந்தசேனையின் பணிப்பெண்
  • சார்விளாகன், மதனிகாவின் காதலன்
  • பாலகர், உஜ்ஜைன் நாட்டு மன்னர்.
  • சம்ஸ்தானகன் (சகரன்), மன்னரின் வைப்பாட்டியின் தம்பி (மைத்துனர்)
  • ஆர்யகன் எனும் இடையரிளவல், நாடு கடத்தப்பட்ட உஜ்ஜைன் நாட்டு இளவரசன்
  • மைத்திரேயர், சாருதத்தனின் ஏழை நண்பர்
  • வர்தமானன், சாருதத்தன் வீட்டு வேலைக்காரர்
  • இராதனிகா, சாருதத்தன் வீட்டு வேலைக்காரி

ஊடகங்களில்

  • மொழிபெயர்ப்புகள்: மிருச்சகடிகம் எனும் நாடகக் கதை, ஆங்கில மொழியில் ஆர்தர். டபிள்யூ. ரைடர் என்பவர் 1905ல் The Little Clay Cart எனும் பெயரில் மொழிபெயர்த்துள்ளார். அந்நாடகத்தை 1907ல் பெர்க்கிலியில் (Berkeley) நாடகமாக அரங்கேற்றப்பட்டுள்ளது.[7] 1924ல் நியூயார்க் நகரத்தில் நாடகமாக அரங்கேற்றப்பட்டுள்ளது.[8] 1926ல் லாஸ் ஏஞ்சல் நகரத்திலும்[9] 1953ல் பிராட்வே அரங்கிலும் இந்நாடகம் அரங்கேறியுள்ளது.[10] தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் மிருச்சகடிகம் நாடகத்தை தமிழில் நாடகமாக அரங்கேற்றியுள்ளார்.
  • மிருச்சகடிகம் சமசுகிருத நாடக நூல் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மு. கதிரேசச் செட்டியார் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
  • தவதிரு சங்கரதாஸ் சுவாமிகள், மிருச்சகடிகத்தை தமிழில் நாடகமாக அரங்கேற்றியுள்ளார்.
  • திரைப்படங்களில்:: 1931ல் ஊமைப்படமாக வசந்தசேனை எனும் பெயரில் கன்னட மொழியில் திரைப்படமாக வெளியிடப்பட்டது. 1941ல் வசந்தசேனை பேசும் படமாக கன்னட மொழி திரைப்படமாக வெளியானது. 1948ல் இந்தி மொழியில் மிருச்சகடிகம் நாடக நூலை அடிப்படையாகக் கொண்டு 1984ல் திரைப்படம் வெளியானது.
  • மிருச்சகடிக நாடக நூலைத் தழுவி 2001ல் திரைப்படம் வெளியானது. The Indian play depicted in the 2001 film Moulin Rouge!, "Spectacular Spectacular", may have been based on The Little Clay Cart.

இதனையும் காண்க

  1. முத்ரா ராக்ஷஸம்
  2. விக்கிரமோவர்சியம்
  3. அபிஞான சாகுந்தலம்
  4. மேகதூதம்
  5. குமாரசம்பவம்
  6. மாளவிகாக்கினிமித்திரம்
  7. காளிதாசன்
  8. அக்கினிமித்திரன்
  9. கல்ஹானர்
  10. சூத்திரகர்
  11. விசாகதத்தர்

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மிருச்சகடிகம்&oldid=3567651" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை