முகமது கைஃப்

இந்திய மட்டைபந்து ஆட்டக்காரர்

முகமது கைஃப் (Mohammad Kaif ) (பிறப்பு: டிசம்பர் 1, 1980) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்[1].மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் ஆகிய உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். மேலும் இவர் 1997 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1998 ஆம் ஆண்டில் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமான இவர் 2000 ஆம் ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். இவர் தற்போது வரை 186 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 10299 ஓட்டங்களையும் , 269 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 7763 ஓட்டங்களையும் ,125 ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

துடுப்பாட்டப் போட்டிகள்

முதல் தரத் துடுப்பாட்டம்

இவர் 1997 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.1998 ஆம் ஆண்டில் ராய்பூரில் நவம்பர் 1 இல் பஞ்சாப் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் சத்தீசுகர் துடுப்பாட்ட அணி சார்பாக இவர் தனது முதல் போட்டியில் விளையாடினார்.

இருபது20

2003 ஆம் ஆண்டில் இவர் இருபது20 போட்டியில் அறிமுகமானார். சூன் 14, இல் லீட்சு மைதானத்தில் டெர்பிசயர் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் யார்க்சயர் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார்.

பட்டியல் அ

1998 ஆம் ஆண்டில் இவர் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். மார்ச் 6 கொல்கத்தாவில் இல் கர்நாடகா துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டியில் இவர் சத்தீசுகர் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.

சர்வதேச போட்டிகள்

2002 ஆம் ஆண்டில் இவர் சர்வதேச துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். சனவரி 28 இல் கான்பூரில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இங்கிலாந்த்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார்.

தனிப்பட்ட வாழ்க்கை

கைஃப் 1980 டிசம்பர் 1 அன்று இந்தியாவின் உத்தரப்பிரதேச அலகாபாத்தில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தார் . கான்பூரின் கிரீன் பார்க் ஹாஸ்டலில் இருந்து தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். [2] இவரது தந்தை முகமது தரிஃப் அன்சாரி ரயில்வே துடுப்பாட்ட அணி மற்றும் உத்தரபிரதேச துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார் . [3] இவரது சகோதரர் முகமது சைஃப் மத்திய பிரதேச கிரிக்கெட் அணி மற்றும் உத்தரபிரதேச கிரிக்கெட் அணிக்காக விளையாடுகிறார் . [4]

கைஃப் 25 மார்ச் 2011 அன்று நொய்டாவைச் சேர்ந்த பத்திரிகையாளரான பூஜா யாதவை மணந்தார்.

ஆரம்ப நாட்களில்

ஜூலை 2005 நிலவரப்படி, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து துடுப்பாட்ட வீரர்களில் கைஃப் ஒருவராக இருந்தார். [5] 2009 ஆம் ஆண்டில், ஒருநாள் அணியில் சுரேஷ் ரெய்னா, பிரவீன் குமார் மற்றும் ருத்ரா பிரதாப் சிங் ஆகிய வீரர்களுடன் இந்திய அணியை உத்தரபிரதேசம் சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தியது. மத்திய மண்டலம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய இரண்டு துடுப்பாட்ட அணிக்கு இவர் தலைவராக இருந்தார். ராகுல் டிராவிட் இல்லாத நிலையில் 2005/06 சேலஞ்சர் கோப்பையில் இவர் தேசிய ஒருநாள் அணியின் தலைவராகவும் இருந்தார்.

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=முகமது_கைஃப்&oldid=2870249" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்