முஸ்தாங் மாவட்டம்

முஸ்தாங் மாவட்டம் (Mustang District) (நேபாளி: मुस्ताङ जिल्ला), தெற்காசியாவின் நேபாள நாட்டின், மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 4-இல் அமைந்துள்ளது. முஸ்தாங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜோம்சோம் நகரம் ஆகும்.

நேபாளத்தில் முஸ்தாங் மாவட்டத்தின் அமைவிடம்
மலைசாரலில் விளைநிலங்கள், கீழ் முஸ்தாங் மாவட்டம்
காக்பெனி கிராமம், முஸ்தாங் மாவட்டம், ஆண்டு 1999

தவளகிரி மண்டலத்தில் அமைந்த முஸ்தாங் மாவட்டத்தின் பரப்பளவு 3,573 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2011-ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி முஸ்தாங் மாவட்ட மக்கள் தொகை 13,452 ஆக உள்ளது.[1]இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடாமான ஜோம்சோம் நகரத்தில் வானூர்தி நிலையம் உள்ளது.

இமயமலையில் அமைந்த இம்மாவட்டம் வடக்கில் திபெத் மேட்டு நிலத்தைத் தொட்டுத்தொடா நிலையில் அமைந்துள்ளது.இந்துக்களின் புனித தலமான முக்திநாத் கோவில் இம்மாவட்டத்தில் உள்ளது. மேலும் அன்னபூர்ணா கொடுமுடியும் இங்கு அமைந்துள்ளது.

ஆப்பிள், மார்பா எனும் மதுபானம் இம்மாவட்டத்தில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

உள்ளாட்சி நிர்வாகம்

முஸ்தாங் மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்

இம்மாவட்டத்தில் பதினாறு கிராம வளர்ச்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

இம்மாவட்டம், இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டர் முதல் 5,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள், டிரான்ஸ் இமயமலை காலநிலை என ஐந்து நிலைகளில் காணப்படுகிறது. [2]

முஸ்தாங் மாவட்டத்தின் பனிபாலை வன தட்ப வெப்பம்
முஸ்தாங் மாவட்டத்தின் ஒரு கிராமம்
ஜோம்சோம் வானூர்தி நிலையம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=முஸ்தாங்_மாவட்டம்&oldid=3568301" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை