மூன்றாம் நக்காடா

மூன்றாம் நக்காடா காலம் (Naqada III) இது வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் நக்காடா பண்பாட்டின் இறுதிக் காலம் ஆகும். மூன்றாம் நக்காடா மன்னர்கள் கிமு 3,200 முதல் கிமு 3,000 வரை பண்டைய எகிப்தை ஆண்டனர்.[1] நக்காடா பண்பாட்டுக் காலத்தில், எகிப்தை ஆண்ட மூன்று மன்னர்களின் பெயர்கள் மட்பாண்டங்களிலும், நினைவுச் சின்னங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் நக்காடா காலம்
[[File:
மூன்றாம் நக்காடா (Egypt)
|264px|alt=]]
புவியியல் பகுதிபண்டைய எகிப்திய சமயம்
காலப்பகுதிதுவக்க வெண்கலக் காலம் I
காலம்ஏறத்தாழ கிமு 3,200 – கிமு 3,150
முக்கிய களங்கள்நக்காடா
முந்தியதுஇரண்டாம் நக்காடா பண்பாட்டுக் காலம்
பிந்தியதுவரலாற்றுக்கு முந்தைய எகிப்து

மூன்றாம் நக்காடா காலத்தில் மேல் எகிப்தின் நைல் நதி கரைகளில் தினீஸ், நக்காடா மற்றும் நெக்கென் போன்ற சிறிய நகர இராச்சியங்கள் தோன்றத் துவங்கியது. பண்டைய எகிப்தில் மூன்றாம் நக்காடா காலம் கிமு 3200 முதல் கிமு 3000 வரை விளங்கியது.கிமு 3200 ஆண்டின் முற்பகுதியில் மேல் எகிப்தை மன்னர் மன்னர் கா ஆட்சி செய்தார். நக்காடா இராச்சிய மன்னர் தினீஸ் மற்றும் நெக்கென் நகர இராச்சியங்களை வென்று, பின் கீழ் எகிப்தின் நைல் நதியின் வடிநிலப்பகுதிகளையும் வென்றார்.

பெரும்பாலான எகிப்தியவியல் அறிஞர்கள், மன்னர் நார்மெரை, வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் இறுதி மன்னராகவும், எகிப்தின் துவக்க அரசமரபின் முதல் மன்னராகவும் கருதுகின்றனர். இவர் முதலை மன்னருக்கு பின்னர் எகிப்தை ஆட்சி செய்தவராக கருதப்படுகிறார். [2]

நார்மெர் என்ற உச்சரிப்பைக் குறிக்கும் கெளிறு மீன் மற்றும் உளியின் பட எழுத்துகள் [3]

வண்டல் கல்லிலான நார்மெர் கற்பலகை 63 செண்டிமீட்டர் (2.07 அடி) உயரம் கொண்ட அழகிய பதக்க வடிவில் அமைந்துள்ளது. இக்கற்பலகையின் முன் பக்கம் மற்றும் பின் பக்கம் என இரண்டு பக்கங்களிலும் மன்னர் நார்மெர் உருவத்துடன் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

நார்மெர் கற்பலகையில் துவக்க கால எகிப்திய மொழி பட எழுத்து குறியீடுகள்

மன்னர் நார்மெரின் பெயரைக் குறிக்கும் வகையில், இக்கற்பலகையின் இருபுறத்தின் மேற்பகுதிகளில் கெளிறு மீன் மற்றும் உளி சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.[3] மேலும் கற்பலகையின் இருபுறத்தின் மேற்பகுதியில் வரலாற்று காலத்திற்கு முந்தைய எகிப்தியர்கள் வழிபட்ட வளைந்த கொம்புடன் கூடிய பசு தேவதையின் சிற்பம் உள்ளது.[4]

நார்மெர் கற்பலகையின் முன்பக்க காட்சி

நார்மெர் கற்பலகையின் முன்பக்கக் காட்சி

நார்மெர் கற்பலகையின் மேற்புறத்தின் இரண்டு பக்ககளிலும் பண்டைய எகிப்தியக் கடவுளான பசு தேவதையின் வளைந்த கொம்புகளுடன் கூடிய உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இரண்டு பசு தேவதைகளின் உருவங்களின் நடுவில் மன்னர் நார்மெரின் பெயரைக் குறிக்கும் வகையில், இக்கற்பலகையின் இருபுறத்தின் மேற்பகுதிகளில் கெளிறு மீன் மற்றும் உளி சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. கற்பலகையின் நடுவில் தெற்கு எகிப்திய மன்னர்கள் அணியும் நீண்ட வெள்ளை நிற மகுடமும் மற்றும் வலது கையில் ஆயுதம் தாங்கிய மன்னர் நார்மெரின் உருவம் உள்ளது. நார்மெர் மன்னரின் இடதுபுறத்தில் மண்டியிட்ட நிலையில் உள்ள ஒரு கைதியை மன்னர் அடிக்கும் நிலையில் ஒரு சிற்பம் உள்ளது. மனிதனின் தலைக்கு மேல் வடக்கு எகிப்தை பாபிரஸ் காகிதம் செய்யப்படும் 6 நாணல் மலர்களும், ஓரசு கடவுளைக் குறிக்கும் வல்லூறு பறவையின் உருவமும் உள்ளது. இதில் ஓரசு கடவுள் அம்மனிதனின் தலையை தாக்குவதாக உள்ளது.

கற்பலகையின் பின்பக்கக் காட்சி

நார்மெர் கற்பலகையின் பின்பக்கக் காட்சி

கற்பலகையின் பின்புற பாகத்தின் அடியில் காளை போன்ற உருவத்தின் அடியில் மன்னர் கீழ் எகிப்திய மன்னர்கள் அணியும் சிவப்பு நிற நீண்ட மகுடத்துடன் மன்னர் நார்மெர் கையில் பூனை மற்றும் நெல்லை சூடடிக்கும் கோலுடன் அமர்ந்திருப்பது போன்ற உருவமும் காணப்படுகிறது. [5]

பின்பக்க கற்பலகையின் நடுப்புறத்தில் சண்டையிடும் இரண்டு விலங்குகளின் நீண்ட தலைகள் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டும், அதன் தலைகளை பக்கத்திற்கு ஒருவர் நீண்ட கயிற்றால் பிணைத்துக் கொண்டு இருப்பது போன்ற உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வுருவம் கீழ் எகிப்து மற்றும் மேல் எகிப்தை மன்னர் நார்மெர் ஒன்றிணைத்ததை காட்டுகிறது. மேலும் இவ்வுருவம் பண்டைய மெசொப்பொத்தேமியாவின் உரூக் பண்பாடு காலத்திய (கிமு 4100 - 3000) நீண்ட கழுத்துகளால் பின்னப்பட்ட விலங்குகளின் வரிசைக் கல்வெட்டுகளுடன் ஒத்துப்போகிறது.[6]

கற்பலகையின் மேற்புறத்திற்கு அடியில் நீண்ட தலைமுடி உடைய ஒரு மன்னரும், மன்னருக்குப் பின்புறம் இருவரும், முன்புறம் ஐவரும் விலங்கு உருவங்கள் கொண்ட பதாகைகளுடன் ஊர்வலமாகச் செல்லும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. இக்காட்சியின் வலதுபுறத்தில் 10 நபர்கள், ஐவர் ஐவராக தரையில் பிணமாக கிடக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. இது போரில் மன்னர் நார்மெர் அடைந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் உள்ளது. இந்த பிணகளின் உருவங்களுக்கு மேல் கப்பல், வல்லூறு, குத்தீட்டி போன்ற உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வுருங்கள் மன்னர் நார்மெர் போரில் கைப்பற்றிய ஊர்களின் பெயராக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது.

கற்பலகையில் மேற்புறத்தில் எகிப்தியக் கடவுளான பசு தேவதை நீண்ட வளைந்த கொம்புகளுடன் உள்ளது. பசு தேவதைகளுக்கு நடுவில் மன்னர் நார்மெரின் முதல் வம்சத்தவர்களைக் குறிக்கும் குலக்குறிச் சின்னமான தேள் உருவம் காணப்படுகிறது.

நக்காடா பண்பாட்டுக் காலத்திய தொல்பொருட்கள்

ஆட்சியாளர்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Naqada III
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மூன்றாம்_நக்காடா&oldid=3777769" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்