மெக்சிக்கோ நகரம்

மெக்சிகோ நகரம் (எசுப்பானியம்: Ciudad de México, எசுப்பானிய ஒலிப்பு: [sjuˈða(ð) ðe ˈmexiko]  ( கேட்க);[2]) மெக்சிகோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.[3] மெக்சிக்கோ நகரமானது மெக்சிகன் கூட்டாட்சி ஒன்றியத்தின் தலைநகராக விளங்குகிறது. இது 31 மெக்சிகன் மாநிலங்களில் எந்த ஒரு பகுதியாகவும் இல்லாமல் தன்னிச்சையான ஒரு கூட்டாட்சி அரசு அமைப்பாக உள்ளது. இதனால் மெக்சிக்கோ, கூட்டரசு மாவட்டம் எனவும் அழைக்கப்படுகின்றது. மெக்சிக்கோ நகரம் அந்நாட்டின் மிகப்பெரிய நகரமாகவும் மற்றும் அதன் மிக முக்கியமான, அரசியல், கலாச்சார, கல்வி மற்றும் நிதி மையமாக திகழ்கிறது.

மெக்சிகோ நகரம்
சியுடாட் டெ மெக்சிக்கோ
மெக்சிக்கோ நகரம்
Mexico City [1]
மேலிருந்து டோர் இலாத்தினமெரிக்கானா, மெக்சிக்கோ நகர மெட்ரோபாலிட்டன் கதீட்ரல், அனில்லோ பெரிபெரிக்கோ, உலக வர்த்தக மையம் மெக்சிக்கோ நகரம், விடுதலை தேவதை, சாப்பல்டெபெக் கோட்டை, செயின்ட் ரெஜிசு தங்குவிடுதி கோபுரம் மற்றும் டோர் மேயர், பாசியோ டெ லா ரிபார்மா மற்றும் பலேசியோ டெ பெல்லாசு ஆர்த்தெ வான்காட்சி.
மேலிருந்து டோர் இலாத்தினமெரிக்கானா, மெக்சிக்கோ நகர மெட்ரோபாலிட்டன் கதீட்ரல், அனில்லோ பெரிபெரிக்கோ, உலக வர்த்தக மையம் மெக்சிக்கோ நகரம், விடுதலை தேவதை, சாப்பல்டெபெக் கோட்டை, செயின்ட் ரெஜிசு தங்குவிடுதி கோபுரம் மற்றும் டோர் மேயர், பாசியோ டெ லா ரிபார்மா மற்றும் பலேசியோ டெ பெல்லாசு ஆர்த்தெ வான்காட்சி.
மெக்சிகோ நகரம்-இன் கொடி
கொடி
மெக்சிகோ நகரம்-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): சியுடாட் டெ லோசு பலாசியோசு (அரண்மனை நகரம்)
மெக்சிக்கோ நாட்டினுள் மெக்சிக்கோ நகரத்தின் அமைவிடம்
மெக்சிக்கோ நாட்டினுள் மெக்சிக்கோ நகரத்தின் அமைவிடம்
நாடு மெக்சிகோ
கூட்டாட்சி பிரிவுகூட்டாட்சி மாவட்டம்
தோற்றம்c.மார்ச் 18, 1325
(டெனோக்டிட்லான் என்று)
புது ஸ்பெயினின் நகரம்1524
கூட்டாட்சி மாவட்டம்1824
அரசு
 • வகைகுடியரசு
 • ஆட்சி தலைவர்மார்செலோ எப்ரார்ட் (PRD)
பரப்பளவு1
 • நகரம்1,479 km2 (571 sq mi)
ஏற்றம்2,240 m (7,349 ft)
மக்கள்தொகை (2010)
 • நகரம்8,851,080
 • அடர்த்தி5,741/km2 (14,870/sq mi)
 • பெருநகர்1,92,31,829
 • மக்கள்"டெஃபேஞோ", "சிலாங்கோ", "காபிடலீஞோ"
நேர வலயம்நடு (ஒசநே-6)
 • கோடை (பசேநே)நடு (ஒசநே-5)
இணையதளம்http://www.df.gob.mx
1 பரப்பளவில் கூட்டாட்சி மாவட்டத்தின் தென் பகுதியின் கிராமாந்திரங்களை எண்ணவில்லை

உலகின் மேற்கு அரைக்கோளத்தில் மிகப்பெரிய மாநகரமும், மக்கள்தொகை அடிப்படையில் உலகிலேயே இரண்டாம் மிகப்பெரிய மாநகரமும் ஆகும்[4][5] . முதல் இடத்தில் யப்பானின் டோக்கியோ மாநகரும் மூன்றாம் இடத்தில் இந்தியாவின் மும்பையும் உள்ளன.

வட அமெரிக்காவின் மிக முக்கியமான நிதி மையங்களில் இந்த நகரம் ஒன்றாகும். மெக்சிக்கோ பள்ளத்தாக்கின் மத்தியில் அமைந்துள்ள உயர் பீடபூமியின் 2.240 மீட்டர் (7,350 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. நகரம் 16 நிர்வாகப் பிரிவுகளாக (பரோக்களாக) பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மக்கட்தொகையானது 2009ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 8.84 மில்லியன் ஆகும்.

2011 இல் $ 411 பில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மூலம் மெக்சிக்கோ நகரம் உலகின் பணக்கார பெருநகர பகுதிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்நகரம் மெக்சிக்கோ நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21% மற்றும் பெருநகர பகுதிகளுக்கான மொத்த தேசிய உள்நாட்டு உற்பத்தியில் 34% பங்கும் வகிக்கின்றது.

மெக்சிக்கோ பெருநகரத்தின் மொத்த உள்ளக உற்பத்தி, 2011இல், அமெரிக்க$411 பில்லியனாக இருந்தது; உலகின் செல்வமிக்க பெருநகரங்களில் ஒன்றாக உள்ளது.[6] மெக்சிக்கோ நாட்டின் நிகர உற்பத்தியில் இந்த நகரம் 15.8% பங்களிக்கின்றது.[7] இந்த நகரத்தின் பொருளாதாரம், தனிநாடாக இருப்பின், இலத்தீன் அமெரிக்காவில் ஐந்தாவதாக உள்ளது; கோஸ்ட்டா ரிக்காவினுடையதைப் போல ஐந்து மடங்காகவும் பெருவின் பொருளாதாரத்திற்கு சமனாகவும் உள்ளது.[8]

இந்த நகரம் அமெரிக்காக்களின் தொன்மைவாய்ந்த நகரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. பழங்குடி மக்களால் நிறுவப்பட்ட இரு நகரங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. 1325இல் அசுடெக் காலத்தில் டெக்சுகோகோ ஏரியின் தீவொன்றில் நிறுவப்பட்டது.1521இல் இது முழுமையாக அழிக்கப்பட்டு எசுப்பானிய ஊரகத் தரத்தின்படி மீண்டும் கட்டப்பட்டது. 1524இல் மெக்சிக்கோ நகராட்சி நிறுவப்பட்டது.[9] எசுப்பானிய குடியேற்றப் பேரரசின் அரசியல், நிர்வாக, நிதிய மையமாக மெக்சிக்கோ நகரம் விளங்கியது.[10] எசுப்பானியாவிலிருந்து விடுதலை பெற்ற பின்னர் 1824ஆம் ஆண்டில் கூட்டரசு மாவட்டம் உருவாக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக அரசியல் தன்னாட்சிக்கு போராடிய பின்னர் 1997இல் கூட்டரசு மாவட்டதின் தலைவரை நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கவும் ஓரவையுள்ள சட்டப்பேரவைக்கு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் உரிமை பெற்றது. இடதுசாரிக் கட்சியான சனநாயகப் புரட்சிக் கட்சி இவ்விரண்டையும் கைப்பற்றியுள்ளது.[11] ஆண்மை ஆண்டுகளில் பல தாராளமயக் கொள்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன; கோரிக்கை அடிப்படையில் கருக்கலைப்பு, கட்டுப்பட்டளவில் வதையா இறப்பு, தவறின்றியும் மணமுறிவு, தற்பால் திருமணம் ஆகியன அனுமதிக்கப்படுகின்றன.

வரலாறு

டக்ஸ்கோ நகரம்
1628ல் மெக்சிகோ நகரம்

இசுப்பானியர்கள் மெக்சிகோ நகரை உருவாக்கும் முன்னர் இந்நிலத்தின் அஸ்டெக் அமெரிக்கப் பழங்குடியினரின் பேரரசு இருந்தது. இந்நகரம் 1521 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. உண்மையில் இந்நகரம் ஒரு ஏரியின் மீது கட்டப்பட்டதாகும்.

  • 1325 ல் அஸ்டெக்குகளால் முற்றுகையில் அழிக்கப்பட்ட டக்ஸ்கோ நகரின் ஏரியின் ஒரு தீவில் கட்டப்பட்டது.
  • 1521 ஸ்பானிஷ் நகர்ப்புறத் தரத்திற்கு ஏற்ப மீள்கட்டுமானம் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது.
  • 1524 ல், மெக்சிக்கோ நகரத்தின் டேச்னோசிடலியன் என அழைக்கப்படும் மெக்சிகோ நகராட்சி நிறுவப்பட்டது.
  • 1585 அது அதிகாரப்பூர்வமாக கியுடட் டி மெக்சிகோ (மெக்சிக்கோ நகரம்) என அழைக்கப்பட்டது. மெக்சிக்கோ நகரம், ஸ்பானிய காலனித்துவ பேரரசின் அரசியல் நிர்வாக மற்றும் நிதி மையத்தில் முக்கிய பங்கு வகித்தது.
  • 1824 ல் ஸ்பெயினிடம் இருந்து சுதந்திரம் அடைந்த பிறகு, மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • 1997 இல் நடைபெற்ற வாக்கெடுப்பின் மூலம் நேரடியாக அரச தலைமையை தேர்ந்தெடுக்கும் உரிமை வாக்களர்களுக்கு வழங்கப்பட்டது. அண்மைய ஆண்டுகளில் உள்ளூர் அரசு தாராளவாத கொள்கைகளால் கருக்கலைப்பு கருணைக்கொலை, விவாகரத்து மற்றும் ஒரே பாலின திருமணம் போன்றவை அனுமதிக்கப்பட்டது.

நிலவியல் அமைப்பு

மெக்சிக்கோ நகரம் மெக்சிக்கோ பள்ளத்தாக்கின் மத்தியில் அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கு மத்திய தெற்கு மெக்சிக்கோ உயர் பீடபூமியில் மெக்சிகன் கண்ட எரிமலை பகுதியின் மீது அமைந்துள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 2,200 மீட்டர் (7,217 அடி) உயரத்தில் உள்ளது. இந்த பள்ளத்தாக்கில் இயற்கை வடிகால்கள் ஏதும் இல்லாததால் வெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப்படக்கூடியதாகவும் உள்ளது. 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கால்வாய்கள் மற்றும் சுரங்கங்கள் வடிகால் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் நில அதிர்வுகள் இங்கு அடிக்கடி ஏற்படுகிறது. இந்த நகரம் மழைக் காலங்களில், வெள்ளம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை பிரச்சினைகளால் அதிகமாக பாதிக்கப்படுகிறது.
கூட்டரசு மாவட்ட புவியமைப்பியல் நிலப்படங்கள்
இட அமைப்பியல்நீரியல்வானிலை உருப்படிமங்கள்

காலநிலை

மெக்சிக்கோ நகரத்தில் அதன் வெப்ப மண்டல அமைவிடம் மற்றும் அதிக உயரம் காரணமாக ஒரு மிதவெப்ப மண்டல உயர்நில காலநிலை உள்ளது.சராசரி ஆண்டு வெப்பநிலை பெருநகரின் உயரத்தினை பொறுத்து 12 முதல் 16 டிகிரி செல்சியஸ்( 54-61 °F ) வரை மாறுபடுகிறது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தின் போது குறைந்தபட்ச வெப்பநிலை -2 °C இலிருந்து -5 °C( 28 முதல் 23 டிகிரி பாரன்ஹீட் ) வரை உள்ளது. மேலும் வசந்த காலம் மற்றும் கோடைகாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 32 °C இருந்து 33.9 °C வரை பதிவு செய்யப்படுகிறது.மேலும் வருடாந்திர மழை 820 மில்லி மீட்டர் ஆகும்.

அடையாள சின்னங்கள்

மெக்சிக்கோ நகரின் வரலாற்று மையம் மற்றும் தெற்குப் பெருநகரில் உள்ள சொஷிமில்கோ என்ற "மிதக்கும் தோட்டங்கள்" யுனெஸ்கோ மூலம் உலக பாரம்பரிய தளங்களாக அறிவிக்கப்பட்டது. புகழ்பெற்ற வரலாற்று மையமான புகழ்பெற்ற அடையாளங்களான ஸ்பானிஷ் சகாப்த பெருநகர கதீட்ரல் மற்றும் தேசிய அரண்மனை மற்றும் பண்டைய ஆஸ்டெக் கோவிலின் இடிபாடுகள் நகரில் மின்வடங்கள் தோண்டும் போது 1978 இல் கண்டுபிடிக்கப்பட்டது.19 ஆம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட பழமையான ஏகாதிபத்திய குடியிருப்பு கோட்டையில் அந்நாட்டு பாராளுமன்றம் உள்ளது.கூடுதலாக நகரில் பரவலாக 160 அருங்காட்சியகங்கள், 30 கச்சேரி அரங்குகள் மற்றும் 100 கலை அரங்குகளைக் கொண்டிருக்கிறது.இது நியூயார்க், லண்டன் மற்றும் டொராண்டோ போன்றவற்றிற்கு அடுத்து திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியகங்கள் கொண்ட நான்காவது நகரமாக உள்ளது.

விக்கிமேனியா ௨௦௧௫

விக்கிமேனியா ௨௦௧௫ மெக்சிகோ நகரத்தில் நடைபெற்றது.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
Historic Center of Mexico City and Xochimilco
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைCultural
ஒப்பளவுii, iii, iv, v
உசாத்துணை412
UNESCO regionகரீபிய மற்றும் லத்தின் அமெரிக்கா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1987 (11th தொடர்)

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mexico City
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மெக்சிக்கோ_நகரம்&oldid=3568410" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை