ருக்கும் மாவட்டம்

ருக்கும் மாவட்டம் (Rukum District) (நேபாளி: रुकुम जिल्ला)தெற்காசியாவின் நேபாள நாட்டின், மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்திருந்த இம்மாவட்டத்தை, 2015-இல் மேற்கு ருக்கும் மாவட்டம் மற்றும் கிழக்கு ருக்கும் மாவட்டம் என இரண்டாகப் பிரித்தனர்.

நேபாளத்தில் ருக்கும் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
ராப்தி மண்டலத்தில் ருக்கும் மாவட்டம்

புவியியல் தட்ப வெப்பம்

ருக்கும் மாவட்ட கிராமத்தில் நெல் விளையும் நிலம்

ருக்கும் மாவட்டம், ராப்தி மண்டலத்தின் வடக்கில் இமயமலையில் அமைந்துள்ளது. பேரி ஆறு மற்றும் காக்ரா ஆறு எனப்படும் கர்னாலி ஆற்றின் துணை ஆறுகள், ருக்கும் மாவட்ட வடிநிலமாக உள்ளது.மக்காச்சோளம், பார்லி, நெல், கோதுமை, உருளைக் கிழங்கு மற்றும் பழ வகைகள் இம்மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது.இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் முதல் 6,000 மீட்டர் உயரத்தில் உள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஆறு காலநிலைகளில் காணப்படுகிறது.[1]

போக்குவரத்து வசதிகள்

தாங்- சல்யன் – ருக்கும் வழியாக செல்லும் சாலை, தாங் மாவட்டத்தின் துளசிப்பூர் நகரத்தையும், ருக்கும் மாவட்டத்தின் முசிகோட் நகரத்தையும் நான்கு மணி நேரப் பயணித்தில் இணைக்கிறது. காட்மாண்டிலிருந்து ருக்கும் மாவட்டத்தின் முசிகோட்டிற்கு சாலை வழியாக பயணிக்க இருபத்தி நான்கு நேரம் பயண நேரமாக உள்ளது.ருக்கும் மாவட்டத்தில் சௌர்ஜஹரி மற்றும் சல்லே என இரண்டு சிறு வானூர்தி நிலையங்கள் உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள்

இம்மாவட்டத்தில் 47 கிராம வளர்ச்சி மன்றங்களும், சௌர்ஜஹரி எனும் ஒரு நகராட்சி மன்றமும் செயல்படுகிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ருக்கும்_மாவட்டம்&oldid=3397726" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை