லட்சுமண் சிவராமகிருட்டிணன்

இந்திய துடுப்பாட்டக்காரர்

லட்சுமண் சிவராமகிருஷ்ணன் (Laxman Sivaramakrishnan பிறப்பு: டிசம்பர் 31, 1965) சிவா மற்றும் எல் எஸ் எனும் பெயரல் பரவலாக அறியப்படும் இவர் மேனாள் இந்தியத் துடுப்பாட்ட வீரர் மற்றும் துடுப்பாட்ட வர்ணனையாளர் ஆவார். வலது கை சுழற் பந்துவீச்சாளரான இவர் 2000 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் முதன் முதலில் வர்ணனையாளராக அறிமுகமானர். பனனட்டுத் துடுப்பாட்ட அவையின் குழுவில் வீரர்களின் பிரதிநிதிகளில் ஒருவராகவும் பணியாற்றுகிறார்.[1] இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 120 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் அதிகபட்சமாக 25 ஓட்டங்களை எடுத்துள்ளார். பந்துவீச்சில் 26 இலக்குகளைக் கைப்பற்றியுள்ள இவர் ஐந்து இலக்குகளை மூன்று முறை கைப்பற்றினார். மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடினார்.தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[2] சூன் 1, 2023 இல் அக்கட்சியின் விளையாட்டுப் பிரிவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[3]

லட்சுமண் சிவராமகிருட்டிணன்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு31 திசம்பர் 1965 (1965-12-31) (அகவை 58)
சென்னை, இந்தியா
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நேர்ச்சுழல்
பங்குBowler
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 164)28 ஏப்ரல் 1983 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு2 சனவரி 1986 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 54)20 பெப்ரவரி 1985 எ. Pakistan
கடைசி ஒநாப17 அக்டோபர் 1987 எ. Zimbabwe
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதே.துஒ.ப.துமு.த.து
ஆட்டங்கள்91676
ஓட்டங்கள்13051,802
மட்டையாட்ட சராசரி16.252.5025.02
100கள்/50கள்0/00/05/3
அதியுயர் ஓட்டம்252*130
வீசிய பந்துகள்2,36775610,436
வீழ்த்தல்கள்2615154
பந்துவீச்சு சராசரி44.0335.8638.49
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
306
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
101
சிறந்த பந்துவீச்சு6/643/357/28
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/–7/–60
மூலம்: Cricinfo, 10 அக்டோபர் 2019

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்

1985 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து பென்சன் மற்றும் ஹெட்ஜஸ் உலக வாகையாளர் துடுப்பாட்டத் தொடரில் விளையாடினார். பெப்ரவரி 20, மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது போட்டியில் பத்து ஒவர்களை வீசி 49 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து இரண்டு இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இந்திய அணி ஆறு இலக்குகளால் வெற்றி பெற்றது.[4] 1987 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி ரிலையன்சு உலகத் துடுப்பாட்டத் தொடரில் விளையாடினார். அக்டோபர் 17 , மும்பை துடுப்பாட்ட அரங்கில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற பதினோராவது போட்டியில் ஒன்பது ஒவர்களை வீசி 36 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இந்திய அணி எட்டு இலக்குகளால் வெற்றி பெற்றது.[5]

தேர்வுத் துடுப்பாட்டம்

1983 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .மே 3, புனித ஜான் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஐந்தாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 17 ஓட்டங்களை எடுத்து மார்ஷல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீசீல் 25 ஓவர்களை வீசி 95 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசினார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இரண்டாவது ஆட்டப் பகுதியில் பந்துவீசவும் மட்டையாடவும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[6] 1996 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில்சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. சனவரி 2 , சிட்னி துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் மட்டையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. பந்துவீச்சில் 22 ஓவர்களை வ்விசி 79 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் இரண்டு ஓவர்களை மெய்டனாக வீசினார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இரண்டாவது ஆட்டப் பகுதியில் ஒன்பது ஓவர்களை வீசி 37 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[7]

சான்றுகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை