லொயோலா இஞ்ஞாசி

ஸ்பானிஷ் கத்தோலிக்க பாதிரியார் மற்றும் இறையியலாளர் (1491-1556)

புனித லொயோலா இஞ்ஞாசி (பாஸ்க் மொழி:Iñigo Loiolakoa, எசுப்பானியம்: Ignacio de Loyola) (1491[1] – ஜூலை 31, 1556) என்பவர் பாஸ்க் குடும்பத்தைச் சேர்ந்த எசுப்பானியா நாட்டின் போர்வீரரும், கத்தோலிக்க குருவும், இறையியலாளரும், இயேசு சபையின் நிறுவனரும், அச்சபையின் முதல் தலைவரும் ஆவார்.[2] இவர் கத்தோலிக்க மறுமலர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்தவர். இவர் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரம் மற்றும் நிலைமுறைக்கு எதிர்ப்பின்றி கீழ்படிந்தது மட்டும் அல்லாது, தன் சபையினரையும் அவ்வாறே செயல்பட ஊக்குவித்தார்.[1][3]

லொயோலா இஞ்ஞாசி
புனித லொயோலா இஞ்ஞாசி
ஓவியர்: பீட்டர் பவுல் ரூபென்ஸ்.
பிறப்பு1491
லொயோலா, எசுப்பானியா
இறப்புஜூலை 31, 1556
உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள்
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம்
அருளாளர் பட்டம்ஜூலை 27, 1609 by ஐந்தாம் பவுல்
புனிதர் பட்டம்மார்ச் 12, 1622 by பதினைந்தாம் கிரகோரி
திருவிழாஜூலை 31
சித்தரிக்கப்படும் வகைநற்கருணை, குருக்களின் உடை, நூல், திருச்சிலுவை
பாதுகாவல்பிலிப்பீன்சு, இயேசு சபை, போர் வீரர்கள், கல்வி.

1521 இல் பாம்பலோனா போரில் இவர் பலத்த காயமடைந்து, ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் போது, அங்கே படிக்க கிடைத்த கிறுத்தவப் புனிதர்களின் வரலாற்றால் ஈர்க்கப்பட்டு அசிசியின் பிரான்சிசு போல தன் வாழ்வை கடவுளுக்கு அற்பணிக்க முடிவெடுத்தார். மார்ச் 1522இல் இவர் கன்னி மரியாளையும், குழந்தை இயேசுவையும் ஒரு காட்சியில் கண்டதாகக் கூறுவர். இக்காட்சிக்கும் பின்பு இவர் அருகில் இருந்த மன்ரேசா என்னும் இடத்தில் இருந்த குகையில் ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் தொடர்ந்து இறை வேண்டலில் ஈடுபட்டிருந்தார். இங்கேதான் இவர் தனது ஆன்ம பயிற்சிகள் என்னும் நூலினை முறைப்படுத்தினார் என்பர். செப்டம்பர் 1523இல் லொயோலா திருநாடுக்குச் சென்று அங்கேயே தங்கிவிட முடிவெடுத்தார். ஆனால் அங்கிருந்த பிரான்சிஸ்கன் சபையினரால் ஐரோப்பாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இவர் ஜூலை 1556இல் இறந்தார். இவருக்கு அருளாளர் பட்டம், திருத்தந்தை ஐந்தாம் பவுலினால் 1609இலும், புனிதர் பட்டம் திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியால் 1622இலும் வழங்கப்பட்டது. இவரை ஆன்ம தியானம் மற்றும் ஒடுக்கத்திற்கு பாதுகாவலராக திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் 1922இல் அறிவித்தார். இவரின் விழா நாள் ஜூலை 31 ஆகும்[4]

ஆதாரங்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=லொயோலா_இஞ்ஞாசி&oldid=3570347" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை