விக்கிப்பீடியா-விமர்சனங்கள்

விக்கிப்பீடியா பற்றிய விமர்சனம் (Criticism of Wikipedia) இதன் உள்ளடக்கம், இதன் நடைமுறைகள், விக்கிபீடியா சமூகத்தின் தன்மை மற்றும் நடைமுறைகள் மற்றும் எவரும் திருத்தக்கூடிய ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியமாக இதன் இயல்பு ஆகியவற்றை நோக்கி இயக்கப்படுகிறது. பயனர்கள் படைக்கும் உள்ளடக்கத்தின் உண்மை நம்பகத்தன்மை உரைநடை வாசிப்புத்திறன், கட்டுரைகளின் அமைப்பு ஆகியவை நம்பகத்தன்மையுடன் இல்லை. தலையங்க சமூகத்தில் முறையான பாலினம் குறித்த முரண்பாடுகள், மற்றும் இனம் சாதி ஆகியவை சார்ந்து கருத்துகளை பதிவு செய்தல் ஆகியன விக்கிபீடியா விமர்சகர்களின் முக்கியமான கவலைகளாகும். சமமற்ற, நடுநிலை தவறிய கருத்துருக்கள், படைப்புகள் ஆகியவற்றை ஏற்றுக்கொள்வது மற்றும் சர்ச்சைக்குரிய தலைப்புகளில் கட்டுரைகளைத் தக்கவைத்தல் ஆகியன விக்கிப்பீடியாவில் காண இயல்கிறது என்பதற்காகவும் விக்கிபீடியா விமர்சனத்திற்கு உள்ளாக வேண்டி உள்ளது. அறிமுகமில்லாதவர்களின் தொகுப்பு அனுமதிக்கும் காழ்ப்புணர்ச்சி, ஒருமித்த குழு உரையாடல், அடிக்கடி விவாதிக்க வேண்டிய சிக்கலான விதிமுறைகள் மற்றும் சில நேரங்களில் உருவாகும் சட்டம் தொடர்பான விக்கி வழக்காடல் போன்றவையும் விமர்சகர்களின் கவலைகளில் உள்ளடங்கும். இந்த காரணங்களுக்காக விக்கிபீடியாவின் முடிவை சில விமர்சகர்கள் கணித்துள்ளனர் .

உள்ளடக்கத்தின் விமர்சனம்

விக்கிபீடியாவின் நம்பகத்தன்மை பெரும்பாலும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. உண்மை, பாதி உண்மை ஆங்காங்கே காணப்படும் சில பொய்கள்" ஆகியவற்றின் கலவையே விக்கிப்பீடியா கட்டுரைகளின் உள்ளடக்கம் என தனது வாதத்தை எடுத்து வைக்கிறார் பத்திரிகையாளர் எட்வின் பிளாக். இவர் விக்கிப்பீடியா கட்டுரைகளின் உள்ளடகத்தையும் விமர்சனத்துடன் வகைப்படுத்தியுள்ளார் [1]. பயனர்கள் உருவாக்கும் கட்டுரைகளில் பயனரின் குரல் அல்லது ஆர்வமுள்ள ஒத்த குழுக்களின் குரல் ஓங்கி ஒலித்து ஆதிக்கம் செலுத்துகின்றன என்று ஆலிவர் காம் குற்றம் சாட்டுகிறார்.

அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள், பிரசுரங்கள் போன்றவை தங்களது தரவுகளுக்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. ஆனால் விக்கிப்பீடியா இத்தகைய நம்பகத்தன்மையை பயனாளிகளுக்கு அளிப்பதில்லை. இத்தன்மைேய யார் அறிவார் என்ற வினாவிைன எழுப்புவதாக விமர்சகர்களின் கருத்தாக உள்ளது."[2]. விக்கிபீடியாவின் வாசகர் தான் வாசிக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியை எழுதியவர் யார் என்பது தெரியாமல் படிப்பதும் அவர் அந்த துறைக்கு புதியவரா அல்லது புலமையும் அனுபவமும் வாய்ந்தவரா என்பதை அறிய முடியாததும், ஒரு குறை என்று 1992 ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டு வரை என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின் தலைமை பொறுப்பாசிரியராக இருந்த. இராபர்ட் மெக்கென்றி விமர்சிக்கிறார்[3].

விக்கிபீடியா மீதான உண்மையின் எடை என்ற கட்டுரையில், திமோதி மெசர்-குருசு கொடுக்கப்படும் சான்றுகளின் ஒப்பீட்டு முக்கியத்துவத்தை பற்றி விமர்சித்தார். விக்கிபீடியா சரியான மற்றும் உறுதியான குறிக்கோளை முன்வைப்பதில்லை என்று கூறுகிறார். விக்கிப்பீடியாவில் ஒரு செய்தியை பற்றிய தகவல்கள் மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்களின் பெரும்பான்மையான கருத்தை முன்வைக்கின்றன என்கிறார் [4][5]. விக்கிபீடியாவில் காணப்படும் முழுமையற்ற உள்ளடக்கத்தின் அடிப்படையில் ஒரு கட்டுரையில் உள்ள குறைபாடுகள் வாசகருக்கு ஒரு தலைப்பைப் பற்றிய தவறான கருத்துக்களைத் தரக்கூடும் என்று மெனிகா கோலன்-அகுயர் மற்றும் ரேச்சல் ஏ. பிளமிங்-மே போன்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர் [6].

2007 ஆம் ஆண்டு அறிவு என்பது அதிகமானவர்கள் செய்திகள் கொட்டுவதால் வந்து விடுமா? என்றும் ஒரு சிலரே தமது ஆளமையாலும், உரத்த குரலிடுவதாலும் முன்னிலைப் படுத்தி செய்திகளை திணிக்கிறார்கள் என்ற பொருளில் ஊடகவியலார் ஆலிவர் காம் அவர்கள் தனது ஊடகக் கட்டுரையில் தனது விமர்சனக் குரலை பதிப்பிட்டுள்ளார். இது போலவே டிம்மோதி மெஸ்ஸர்-குரூஸ், மோனிகா காலோன், ரேச்சல் ஏ. பிளமிங், ஆகியோரும் தமது பாணியில் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.

டாரியுஸ் ஜெமிலினியாக், ஆரோன் ஹாப்கர், போன்றோரும் இத்தகைய விமர்சகர்கள் பட்டியலில் இணைந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

விக்கிபீடியா என்பது எவரும் திருத்தக்கூடிய ஒரு திறந்த புத்தகமாக, கலைக்களஞ்சியமாக உள்ளது. இத்தகைய சுதந்திரத் தன்மையே, விமர்சகர்கள் விக்கிபீடியாவின் மீது விமர்சனங்களை தொடுப்பதற்கான முக்கிய காரணியாக விளங்குகிறது. உள்ளீடுகள், தரவுகளின், வடிவமைப்பு, உண்மை நம்பகத்தன்மை, மொழிநடை, வாசிப்புத்திறன்; போன்றவையும், மேற்கோள்களின் தன்மையும், கட்டுரைகளின் அமைப்பு ஆகியன இத்தகைய விக்கிபீடியா விமர்சகர்களின் நம்பிக்கையை பெறவில்லை என்பதைக் காணமுடிகிறது.

மேலும் கவலைகளில் பதற்றத்துடன் சரியான தகவல்கள் திருத்தப்பட அனுமதிக்கும் நடைமுறையும் இத்தகைய விமர்சகர்களுக்கு விவாதப் பொருளாகவும், விமர்சனப் பொருளாகவும் அமைந்துள்ளது தவிர்க்க முடியாததாகும். இது விக்கிப்பீடியாவின் பெயருக்கு கலங்கம் ஏற்பத்திவிடுமோ என்ற ஐயப்பாடும் இத்தகைய விமர்சகர்களின் கருத்தில் உள்ளது.

சில விமர்சகர்கள் விக்கிப்பீடியாவில் உள்ள தகவல்கள், நடைமுறைகள், விக்கிப்பீடியர்களின் செயல்பாடுகள், மற்றும் யார்வேண்டுமானாலும் உள்நுழைந்து தகவல்களை சரி செய்வதாக நினைத்து சிதைத்துவிடும் செயல்பாட்டையும் ஐயத்துடன் உற்று நோக்குகிறார்கள்.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை