விக்கிப்பீடியா:விசமிகளை எதிர்கொள்வது எப்படி?
- விக்கிப்பீடியாவை யாரும் தொகுக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால் கணக்குள்ள பயனர்களுக்கு மேலதிக வசதிகள் அல்லது அனுமதிகள் உண்டு. எடுத்துக்காட்டாக, அவர்களே பக்கங்களை பெயர் மாற்ற அல்லது நகர்த்த முடியும். ஆங்கில விக்கிப்பீடியாவில் கணக்குள்ள பயனர்கள்தான் கட்டுரைகளை ஆரம்பிக்க முடியும், தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரையை தொடங்க கணக்கு உருவாக்க வேண்டிய கட்டாயமில்லை.
- நிர்வாகிகளுக்கு பக்கங்களை நீக்குவது, பூட்டப்பட்ட பக்கங்களை தொகுப்பது போன்ற மேலதிக அனுமதிகள் உண்டு.
- தமிழ் விக்கிப்பீடியாவில் நிர்வாகி அணுக்கத்தை வழங்கக்கூடிய நான்கு "அதிகாரிகள்" உள்ளனர். ஆங்கில விக்கிப்பீடியாவில் மேலதிக சில கட்டமைப்புகளும் உண்டு. (இப்படி பிரிவுகள் இருந்தாலும், அனைவரும் தன்னார்வலர்களே. எவ்வளவு பொறுப்பை நீங்கள் ஏற்கின்றீர்கள், எவ்வளவு நேரத்தை தர முன்வருகின்றீர்கள், எப்படி சமூகத்தில் இயங்குகின்றீர்கள் என்பதைப் பொறுத்துதான் எந்த வித்தியாசங்களும் அமைகின்றன. மற்றப்படி அனைவரும் பயனர்களே).
- எந்த ஒரு மாற்றமும் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் பிரதிபலிக்கும். எந்த ஒரு பயனரும் அம்மாற்றங்களை கவனித்து நடவடிக்கை எடுக்க முடியும்.
- ஒவ்வொரு பயனரும் தனக்கு முக்கியமான கட்டுரைகளை தனது கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கலாம். அக்கட்டுரைகளில் எவற்றையாவது யாரேனும் மாற்றும் பொழுது அம்மாற்றங்கள் தொடர்பான தகவல்களை அந்த பயனர் மின்னஞ்சல் மூலமாகவோ, அல்லது புகுபதிகை செய்யும் பொழுதோ பெற்று நடவடிக்கை எடுக்கலாம்.
- தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகள் அவ்வப்பொழுது தமிழ் விக்கிப்பீடியாவில் நிகழும் மாற்றங்களை கவனித்த வண்ணமே இருப்பார்கள். ஆரோக்கியமற்ற மாற்றங்கள் இடம்பெறும் பொழுது அவற்றை அவர்கள் சீர்செய்ய முயல்வார்கள்.
- ஒரு சில குறிப்பிட்ட பக்கங்கள் அடிக்கடி கீழ்த்தரமான மாற்றங்களுக்கு உட்படுமானால் அப்பக்கங்களை பூட்டு போட்டு வைக்கலாம். அதாவது நிர்வாகிகளைத் தவிர பொது பயனர்கள் மாற்ற முடியாதபடி தொகுப்புப் பக்கத்தை முடக்க முடியும். மேலும், முதற் பக்கம் போன்ற முக்கிய சில பக்கங்கள் இப்படி பூட்டு போடப்பட்டவையே.
- சில பயனர்கள் வேண்டும் என்றே தொடர் விசமத்தன வேலைகளில் ஈடுபட்டால் அவர்களின் ஐபி முகவரி அல்லது பயனர் கணக்கை நிலையாகவோ குறிப்பிட்ட காலத்துக்கோ தடை செய்யலாம்.
கட்டுப்பாடுகளை படிப்படியாக தேவைக்கேற்ப உபயோகப்படுத்த முடியும். தமிழ் விக்கிப்பீடியா தமிழ் ஆர்வலர்களிடம் பரந்த ஆதரவை கொண்டிருப்பதாகவே உணர்கின்றோம். குறைகள் இருந்தால் நேரடியாக கலந்துரையாடி சரி செய்யலாம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை