வியட்நாம் வரலாறு

வியட்நாம் வரலாறு (history of Vietnam) 4000 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமை வாய்ந்ததாகும்.[1] வியட்நாமில் தொடர்ந்து தொல்லியல் ஆய்வுகள் நடக்கின்றன; 1965 க்குப் பின்னரான தொல்லியல் கண்டுபிடிப்புகள் சினாந்திரப்பசு வகை நிமிர்நிலை மாந்த இனத்தினைச் சார்ந்த இரு தொல்மாந்தரின் எச்சங்கள் கிடைத்துள்ளதைக் காட்டுகின்றன. இவை இடைநிலைப் பிளிசுட்டோசீன் காலத்தைச் சேர்ந்தவை; அதாவது, அரை மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியவை. எனவே, பண்டைய வியட்நாமுலகின் சில தொடக்கநிலை நாகரிகங்களில் ஒன்றாக அமைந்து, முதலில் வேளாண்மையை உருவாக்கிய மக்கள் வாழ்ந்த இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[2][3] சிவப்பாற்றுப் பள்ளத்தாக்கு அல்லது கணவாய் இயற்கையான புவிப்பரப்பியல், பொருளியல் அலகாக அமைந்த்தாகும். இதன் வடக்கிலும் மேற்கிலும் மலைகளும் காடுகளும் அரணாக உள்ளன; கிழ்க்கில் கடலும் தெற்கில் சிவப்பாற்றுக் கழிமுகப் படுகையும் உள்ளன. எனவே, சிவப்பாற்றின் வெள்ளப் பெருக்கைக் கட்டுபடுத்தவும் நீரியல் கட்டுமானங்களைக் கட்டியமைக்கவும் தொழில்வணிகப் பரிமாற்றத்தை ஆளவும் முற்றுகைகளைத் தடுக்கவும் ஓர் ஒருங்கிணைந்த தேவை நிலவியது. இந்நிலைமை, முதல் வியட்நாமிய விடுதலையான அரசும் ஆட்சியும் தோரயமாக கி.மு 2879 இலேயே உருவாக வழிவகுத்துள்ளது.[4][5][6] வியட்நாம் வரலாற்றில் அடுத்த பெருந்தாக்கம் விளைவித்த பகுதியான பிந்தைய வெண்கலக் காலத்தின், தோங் சோன் பண்பாடுசெழித்த நாகரிகத்தைப் பெற்றெடுத்தது.வியட்நாமின் தனித்தன்மை வாய்ந்த புவியியல் அயலவர் முற்றுகையிட அரியதாக அமைந்தது. இதனால் தான் கூங் அரசகுலத்தின் கீழமைந்த வியட்நாம் நெடுங்காலமாக தற்சார்புள்ள விடுதலையான தன்னிறைவான நாடாக விளங்கியது. மிகத் தொடக்கத்தில் வியட்நாமை முற்றுகையிட்டவர்களாக சிக்தய்களும் குவின் அரசகுலமும் விளங்கின. ஆனால், பண்டைய வியட்நாமியர்கள் முற்றுகைகள் முடிந்தவடைந்த உடனே தம் தாய்நாட்டை மீட்டெடுத்துள்ளனர்.

ஒருமுறை சீன ஆட்சிக்கு உட்பட்டதும் வியட்நாமால் தன்னாட்சிக்கு மீள இயலவில்லை; மேலும், அது அயலாட்சியில் இருந்து 1100 ஆண்டுகளுக்குத் தப்பவும் முடியவில்லை; அதுவரை வியட்நாமைப் பல சீன அரசகுலங்கள் ஆண்டனஅவையாவன: ஏன் அரசகுலம், கீழை வூ அரசகுலம், யின் அரசகுலம் (265–420), இலியூ சோங் அரசகுலம், தென்குவி அரசகுலம், இலியாங் அரசகுலம், சூயி அரசகுலம், தாங் அரசகுலம், தென் ஏன் அரசகுலம்; இதனால், வியட்நாமிய மொழியும் பண்பாடும் தேசிய அடையாளமும் இழக்கப்பட்டது. இந்த 1100 ஆண்டுகளில் சில காலங்களில் பின்வரும் அரசகுலங்களின் தன்னாட்சிகளும் ஏற்பட்டாலும் மிகக் குறுகிய ஆயுளையே அவை பெற்றிருந்தன;அவையாவன: திரியேயு அரசகுலம், திரங் உடன்பிறப்புகள் (மகலிர்), தொடக்கநிலை இலய் அரசகுலம், கூசு கணம், துவோங்தின் நிகே அரசகுலம்.

வடக்கு வியட்நாமில் சீன ஆட்சி நிலவியபோது, இன்றைய நடுவண், தென் வியட்நாம் பகுதிகளில் பல நாகரிகங்கள் செழித்திருந்தன. குறிப்பாக புனானிய, சம்பா அரசுகள் நிலவின. இந்த ஆட்சியின் நிறுவனர்களும் ஆட்சியாளர்களும் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல.என்றாலும், 10 ஆம் நூற்றாண்டு முதல், சிவப்பாற்றுக் கழிமுகப் படுகையில் எழுச்சி பெற்ற வியட்நாமியர் இந்த நாகரிகங்களை வென்றனர்.

முந்துவரலாறு

முதன்மைக்கட்டுரை:வரலாற்றுக்கு முந்தைய வியட்நாம்

முதல் மாந்தவாழ்வுச் சான்று

பழைய கற்காலம் முதல் புதிய கற்காலம் வரையில்

முதன்மைக்கட்டுரை:வியட்நாமின் பண்டைய, வரலாற்றுக்கு முந்தைய பண்பாடுகள்

தொடக்கநிலை அரசகுல ஊழி (கி.மு 2879–கி.மு 111)

முத்ன்மைக்க்ட்டுரை:தொடக்கநிலை அரசகுல ஊழி

கோங் பாங் காலம்/அரசகுலம் (கி.மு 2879–கி.மு258)

முதன்மைக்கட்டுரை:கோங் பாங் அரசகுலம்

தொடக்கநிலைக் கோங் பாங் (கி.மு 2879–கி.மு1913)

இடைநிலைக் கோங் பாங் (கி.மு 1912–கி.மு1055)

வாங்லாங்கின் நிலப்படம்,கி.மு 500.

பிந்தைய கோங் பாங் (கி.மு 1054–கி.மு258)

பண்பாட்டுப் படிமலர்ச்சி

தூசு அரசகுலம் (கி.மு257–கி.மு179)

முதன்மைக்கட்டுரை:ஆன் துவோங் வுவோங்|சோலாவோ கோட்டை

திரியேயு அரசகுலம் (கி.மு207–கி.மு111)

முதன்மைக்கட்டுரை:திரியேயு அரசகுலம்

சீன ஆயிரம் ஆண்டாட்சி (கி.மு 111 – கி,பி 939)

முதன்மைக்கட்டுரை: வியட்நாமில் சீன ஆட்சி

ஏன் அரசகுல ஆட்சி (கி.மு111 –கி.பி 40)

முதன்மைக்கட்டுரை:வியட்நாமில் முதல் சீன ஆட்சி

திரங் உடன்பிறப்புகள் (மகளிர்) (40–43)

முதன்மைக்கட்டுரை:திரங் உடன்பிறப்புகள் (மகளிர்)

ஏன் முதல் இலியங் வரையிலான சீன ஆட்சி (43–544)

முதன்மைக்கட்டுரை:வியட்நாமில் இரண்டாம் சீன ஆட்சி

தொடக்கநிலை இலய் அரசகுலம் (544–602)

முதன்மைக்கட்டுரை:தொடக்கநிலை இலய் அரசகுலம்}}

சூயி முதல் தாங் வரையிலான சீன ஆட்சி (602–905)

முத்ன்மைக்கட்டுரை:வியட்நாமில் மூன்றாம் சீன ஆட்சி

தன்னாட்சி (905–938)

முதன்மைக்கட்டுரை:கூசு கணம், துவோங்தின் நிகே, கியேயுகோங் தியேன்

பிந்தைய அரசகுல ஊழி (939–1945)


நிகோ, தின், தொடக்கநிலை இலே அரசகுலங்கள் (939–1009)

முதன்மைக்கட்டுரைகள்: நிகோ அரசகுலம், தின் அரசகுலம், தொடக்கநிலை இலே அரசகுலம்

இலய், திரான், கோ அரசகுலங்கள் (1009–1407)

முதன்மைக்கட்டுரைகள்: இலய் அரசகுலம், திரான் அரசகுலம், கோ அரசகுலம்

மிங் சீன ஆட்சி முதல் பிந்தைய இலே அரசகுலம் வரை (1407–1527)

முதன்மைக்கட்டுரைகள்: நான்காம் சீன ஆட்சி, பிந்தைய திரான் அரசகுலம், பிந்தைய இலே அரசகுலம்

மாசு, இலே அரசகுலங்கள் (1527–1788)

முதன்மைக்கட்டுரைகள்: இலே அரசகுலம், மசு அரசகுலம், வியட்நாம் தெற்கு, வடக்கு அரசகுலங்கள்

திரின், நிகுயேன் நிலக்கிழார்கள்

முதன்மைக்கட்டுரைகள்:திரின் நிலக்கிழார்கள், நிகுயேன் நிலக்கிழார்கள், திரின்–நிகுயேன் போர்.

மேலும் காண்க,நிகுயேன் நிலக்கிழார்களின் தரைப்படைகள்

ஐரோப்பியர் வருகையும் தெற்கு நொக்கிய விரிவாக்கமும்

முதன்மைக்கட்டுரைகள்:வியட்நாமில் கிறித்தவம்,நாம் தியேன்.

தாய்சோன், நிகுயேன் அரசகுலங்கள் (1778–1945)

முதன்மைக் கட்டுரைகள்:தாய்சோன் அரசகுலம்,நிகுயேன் அரசகுலம்.


பிரெஞ்சு இந்தோசீனா

குடியாட்சிக் காலம் (1945 இல் இருந்து)

பொதுவுடைமை வடக்கும் முதலுடைமைத் தெற்கும் (1945–76)

1976 க்குப் பிறகான சமவுடைமைக் குடியரசு

வியட்நாமின் மாறும் பெயர்கள்

கீழே காலந்தோறும் வியட்நாமின் பெயர்மாற்றங்கள் தரப்படுகின்றன:

காலம்நாட்டின் பெயர்காலச் சட்டகம்எல்லை
கோங்பாங் அரசகுலம்சிச் குய் 赤鬼கி.மு 2879–2524குனானின் தோங்திங் ஏரியில் இருந்து tமிகத் தெற்கே உள்ள பகுதியான இன்றைய குவாங் திரி மாகாணம் வரை (இது சீனாi சார்ந்த குவாங்சி, குவாங்தோங் ஆகிய மாகாணங்களையும் உள்ளடக்கும்).
கோங்பாங் அரசகுலம்வான்லாங் 文郎கி.மு 2524–258இக்கால வடக்கு வியட்நாம்+ இக்கால தாங்கோவா, நிகேயான், காதின் ஆகிய மூன்று மாகாணங்கள். சிவப்பாற்றுக் கழிமுகப் படுகை இலாசு வியட் பண்பாட்டின் தயகம் ஆகும்.
தூசு அரசகுலம்ஆவுலாசு 甌雒கி.மு 257–207சிவப்பாற்றுக் கழிமுகப் படுகையும்அதுசார்ந்த வடக்கு, மேற்கு மலப்பகுதிகளும்.
திரியேயு அரசகுலம்நாம் வியட் 南越கி.மு 207–111இன்றைய வடக்கு, வடக்கு நடுவண் வியட்நாம் (தெற்கெல்லை கோவான்சோன் வரை விரிவுபடுத்தியது)+ குவாங்தோங், குவாங்சி பகுதிகள் .
சீன ஏன் அரசகுல ஆட்சிகியாவோ சி (யியாவோழி) 交趾கி,மு 111 – கி.பி 39இன்றைய வடக்கு, வடக்கு நடுவண் வியட்நாம் (தெற்கெல்லை மாவாறு வரை விரிவுபடுத்தியது)+ சா ஆற்றுக் கழிமுகப் படுகை, குவாங் தோங், குவாங்சி பகுதிகள்.
திரங் உடன்பிறப்புகள் (மகளிர்)இலிங்கான்/இலின் நாம் 嶺南கி.பி 40–43இன்றைய வடக்கு, வடக்கு நடுவண் வியட்நாம் (தெற்கெல்லை மாவாறு வரை விரிவுபடுத்தியது)+ சா ஆற்றுக் கழிமுகப் படுகை.
சீன ஏன் அரசகுலம் முதல் சீன கீழை வூ அரசகுலம் வரையிலான ஆட்சிகியாவோ சி 交趾கி.பி 43–229இன்றைய வடக்கு, வடக்கு நடுவண் வியட்நாம் (தெற்கெல்லை மாவாறு வரை விரிவுபடுத்தியது)+ சா ஆற்றுக் கழிமுகப் படுகை, குவாங் தோங், குவாங்சி பகுதிகள்.
கீழை வூ முதல் இலியாங் அரசகுலம் வரையிலான ஆட்சிகியாவோ சாவு (யியாவோழவு) 交州கி.பி 229–544மேலே உள்ள எல்லை
தொடக்கநிலை இலய் அரசகுலம்வான்சுவான் 萬春கி.பி 544–602மேலே உள்ள எல்லை
சீன சூயி அரசகுலம் முதல் சீன தாங் அரசகுல ஆட்சி வரைகியாவோ சாவு 交趾602–679மேலே உள்ள எல்லை
சீன தாங் அரசகுல ஆட்சிஆன் நாம் 安南679–757மேலே உள்ள எல்லை
சீன தாங் அரசகுல ஆட்சிதிரான் நாம் 鎮南757–766மேலே உள்ள எல்லை
சீன தாங் அரசகுல ஆட்சிஆன் நாம் 安南766–866மேலே உள்ள எல்லை
சீன தங் அரசகுல ஆட்சி, கூசு கணத் தன்னாட்சி, துவோங் தின் நிகே, கியேயு கோங் தியேன், நிகோ அரசகுலம்தின்காய் குவான் 静海军866–967மேலே உள்ள எல்லை
தின் அரசகுலம், தொடக்கநிலை இலே அரசகுலம், இலய் அரசகுலம்தாய்சோ வியட் 大瞿越968–1054மேலே உள்ள எல்லை
இலய் அரசகுலம், திரான் அரசகுலம்தாய் வியட் 大越1054–1400தென்னெல்லை இன்றைய குயே பகுதி வரை விரிவுபடுத்தியது.
கோ அரசகுலம்தாய்நிகு 大虞1400–1407மேலே உள்ள எல்லை
சீன மிங் அரசகுல ஆட்சி, பிந்தைய திரான் அரசகுலம்கியாவோ சி 交州1407–1427மேலே உள்ள எல்லை
இலே ஆரசகுலம், மாசு அரசகுலம், திரின் நிலக்கிழார்கள்–நிகுயேன் நிலக்கிழார்கள், [[தாய்சோன் அரசகுலம், நிகுயேன் அரசகுலம்தாய்வியட்1428–1804 大越இன்றைய வியட்நாம் எல்லை வரை படிப்படியாக விரிவுபடுத்திய பகுதி.
நிகுயேன் அரசகுலம்வியட்நாம் 越南1804–1839இன்றைய வியட்நாம்+ கம்போடியா, இலாவோசில் உள்ள சில கைப்பற்றிய பகுதிகள்.
நிகுயேன் அரசகுலம்தாய்நாம் 大南1839–1887மேலே உள்ள எல்லை
நிகுயேன் அரசகுலம், பிரெஞ்சுக் காப்புக் குடியேற்றம்பிரெஞ்சு இந்தோசீனா, இதில் கொச்சின்சீனா ( தென்வியட்நாம்), ஆன்னம், நடுவண் வியட்நாம், தோங்கின் (வடக்கு வியட்நாம்) ஆகிய பகுதிகள் அடங்கும்.1887–1945இன்றைய வியட்நாம்.
குடியரசு ஊழிவியட்நாம் (பின்வரும் வேறுபாடுகளுடன் வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு, வியட்நாம் அரசு, வியட்நாம் குடியரசு, வியட்நாம் சமவுடைமைக் குடியரசு)வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு (1945–1976 வடக்கு வியட்நாமில்),
வியட்நாம் அரசு (1949–1955),
வியட்நாம் குடியரசு (1955–1975 தெற்கு வியட்நாமில்),
வியட்நாம் சமவுடைமைக் குடியரசு (1976–அண்மை வரை)
இன்றைய வியட்நாம்.

கோங்பாங் தாய்சோன் அரசகுலங்களைத் தவிர, அனைத்து வியட்நாம் அரச குலங்களும் அரசனின் குடும்பப் பெயரால் அழைக்கப்படுகின்றன’ ஆனால், சீன அரசகுலங்கள் அரசகுலத்தை நிறுவியவர் பெடரால் அழைக்கப்படுகின்றன. பெரும்பாலும் இவை நாட்டின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன.நிகுயேன் குயேவின் "தாய்சோன் அரசகுலம்" வரலாற்றாசிரியர்கள் இட்ட பெயராகும். இது நிகுயேன் ஆனின் நிகுயேன் அரசகுலத்துடன் குழப்பிக்கொள்ளாமல் இருக்க இட்ட பெயராகும்.

வியட்நாமியத் தேசிய வரலாறெழுதியல்

முதன்மைக் கட்டுரை: வரலாறெழுதியலும் தேசியமும்

மேலும் காண்க

  • வியட்நாம்|வரலாறு
  • வியட்நாமின் பொருளியல் வரலாறு
  • கிழக்காசிய வரலாறு
  • ஆசிய வரலாறு
  • தென்கிழக்காசிய வரலாறு
  • வியட்நாமிய அரசியல்
  • வியட்நாம் குடியரசுத் தலைவர்
  • வியட்நாம் முதன்மை அமைச்சர்

மேற்கோள்கள்

நூல்தொகை

மேலும் படிக்க

முதன்மைத் தகவல் வாயில்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வியட்நாம்_வரலாறு&oldid=3571695" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை