வெப்பமண்டலச் சேய்மைப் புயல்

புயல் வகை

வெப்பமண்டலச் சேய்மைப் புரியல் (Extratropical cyclones) என்பது சிலசமயங்களில் மத்திய அட்சரேகை புயல் அல்லது புயற்க்காற்றலை என்று அறியப்படுகிறது. இது குறைந்த அழுத்த பகுதியாக உருவாகி எதிர்புயற்காற்று உருவாக்கம் அதிக அழுத்தப் பகுதிகளோடு சேர்ந்து இந்தப் பூமியின் பருவநிலையை நகர்த்திச் செல்கிறது.இந்த வெப்பமண்டலப் புயலானது மேகக் கூட்டங்களையும், மிதமான மழை அல்லது அதிதீவிர மழையை உருவாக்கும் வல்லமை கொண்டது. அதோடு பலமானக் காற்று, இடிமின்னல்மழை, பனிப்புயல் காற்று மற்றும் சூறைக்காற்று ஆகியவைகளை உருவாக்கும் ஆற்றல் கொண்டது.இந்த வகையான மத்திய அட்சரேகைப் பகுதியில் உருவாகும் குறைந்த அழுத்தப் புயல்களைக் கொண்ட பருவநிலை அமைப்புகள் வெப்பமண்டலச் சூறாவளியை காட்டிலும் மாறுபட்டிருக்கும். இது போன்ற வெப்பமண்டலப் புயல்கள் வேகமான வெப்பநிலை மாற்றங்களை உருவாக்கும் மற்றும் பறந்து விறிந்த பனிநிலைகளையும் உருவாக்கும்.[1]

ஒரு சக்திவாய்ந்த கண் போன்ற உருவமுடைய வெப்பமண்டலப் சூறாவளி வடக்குப் பசுபிக் மகாசமுத்திரம், சனவரி 2018

சொற்றொகுதி

புயல் (cyclone) என்ற சொல் பலவகையான காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளுக்கு பொதுவாக வழங்கக்கூடிய பெயர். ஆனால் மத்திய அட்சரேகையில் அதாவது பூமியில் 30 மற்றும் 60 டிகிரி அட்சரேகையில் உருவாகும் புயல்களைதான் வெப்பமண்டலச் சேய்மைப் புயல் என்று அழைக்கிறோம். பொதுவாக இந்த வகையான புயலகள் அட்சரேகைக்கு வெளியே உருவாகிறது.[1][2] வானிலை முன்னறிவிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் இது போஎற ஒரு சூறாவளியை தாழ்வழுத்தப் பகுதி அல்லது முகப்புப் புயல் அல்லது முகப்புப் தாழ்வழுத்தம் என்றும் அழைக்கிறார்கள்.

உருவாக்கம்

Approximate areas of extratropical cyclone formation worldwide
An upper level jet streak. DIV areas are regions of divergence aloft, which will lead to surface convergence and aid cyclogenesis.

வெப்பமண்டலச் சேய்மை சூறாவளி பொதுவாக பூமியின் பூமத்தியரேகையில் இருந்து 30 மற்றும் 60 டிகிரி இடைப்பட்ட அட்சரேகையில் சூறாவளித் தோற்றம் முறை அல்லது வெப்பமண்டல நிலை மாற்றும் முறையில் உருவாகிறது. தென்னரைக்கோளப் பகுதியில் வெப்பமண்டலப் சூறாவளிப் பற்றி மேற்கொண்ட ஆய்வுகளில் 30 மற்றும் 70 டிகிரி இடைப்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு 6 மணிநேர கால இடைவெளியில் சுமார் 37 புயல்கள் உருவாகுவதாக கண்டறியப்பட்டுள்ளது.[3] மேலும் தனிப்பட்ட வட அரைக்கோளப் பகுதியல் வெப்பமண்டலப் புயல்கள் குறித்த ஆய்வின் படி குளிர்காலத்தில் சுமார் 234 குறிப்பிடத்தக்க வெப்பமண்டலப் புயல்கள் உருவாகுவதாக அறியப்பட்டுள்ளது.[4]

சூறாவளித் தோற்றம்

வெப்பமண்டல சூறாவளி என்பது ஒரு நேர்மட்ட வெப்ப எல்லையில் அல்லது பனிநிலை விகிதத்தில் ஏற்படும் ஒரு குறிப்பிட்ட செங்குத்து காற்றுத் திசைவேக மாறுபாடு. இதை பாராசிளினிக் சூறாவளி என்று வகைப்படுத்தப் படுகிறது. ஆரம்பத்தில் சூறாவளித் தோற்றமாக அல்லது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வெளிப்புற மண்டலத்தில் அருகில் சாதகமான கால்ப்பகுதியில் அதிகப்படியாக மேற்பகுதியில் ஒரு வேகமான காற்றோடையாக உருவாகிறது. சாதகமான கால்ப்பகுதிகள் வழக்கமாக வலது பின்புறம் மற்றும் இடது முன் கால்பகுதி, அங்குதான விரிவுப்பகுதி ஏற்படுகிறது. விரிவடைவதால் காற்று நெடுவரிசையின் மேலிருந்து வெளியேற காரணமாகிறது. நெடுவரிசையில் நிறை குறைக்கப்படுவதால், மேற்பரப்பு மட்டத்தில் வளிமண்டல அழுத்தம் (காற்றின் எடை) குறைகிறது. குறைக்கப்பட்ட அழுத்தம் சூறாவளியை பலப்படுத்துகிறது (குறைந்த அழுத்த அமைப்பு). குறைக்கப்பட்ட அழுத்தம் காற்றை இழுத்து செயல்படுகிறது, இது குறைந்த அளவிலான காற்றழுத்தத்தில் ஒன்றிணைகிறது. குறைந்த-நிலை குவிப்பு மற்றும் மேல்-நிலை விரிவடைதல் ஆகியவை நெடுவரிசையில் மேல்நோக்கி இயக்கத்தைக் குறிக்கின்றன, இதனால் சூறாவளிகள் மேகமூட்டமாக இருக்கிறது.சூறாவளி வலுப்பெறும்போது, ​​குளிர்ந்த காற்று பூமத்திய ரேகை நோக்கிச் சென்று சூறாவளியின் பின்புறத்தைச் சுற்றி நகர்கிறது. இதற்கிடையில், அதனுடன் தொடர்புடைய சூடான காற்று மெதுவாக முன்னேறுகிறது, முன்பகுதியில் உள்ள குளிர்ந்த காற்று அமைப்பானது மிக அடர்த்தியாக உள்ளதால் காற்று இந்த அமைப்பை விட்டு வெளிவருவது கடினமாகிறது.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை