வெப்ப இயக்கவியலின் சுழிய விதி

வெப்ப இயக்கவியலின் சுழிய விதி (Zeroth law of thermodynamics) இரு பொருட்களின் தொடுகையின் போது அவற்றுக்கு இடையேயான வெப்பச்சமநிலை பற்றி கூறுகிறது,அதாவது இரு தொகுதிகள், மூன்றாவது தொகுதியுடன் வெப்பச்சமநிலையில் இருந்தால் அவை இரண்டும் தமக்கிடையே வெப்ப சமநிலையில் இருக்கும்.இரு தொகுதிகள் தொடுகையில் உள்ள போது வெப்பப்பரிமாற்றம் நிகழாவிடின் அவை வெப்பச் சமநிலையில் உள்ளன எனப்படும்.வெப்பநிலை எனும் கணியத்திற்கான தேவையை பூச்சிய விதி உணர்த்துகிறது. அதாவது வெப்பச்சமநிலை வெப்பநிலை எனும் கணியத்திலேயேதங்கி உள்ளது. ஒரே வெப்பநிலையில் உள்ள இரு தொகுதிகள் தமக்கிடையே வெப்பச்சமநிலையில் இருக்கும். இவ்விதி வெப்பமானியின் உருவாக்கத்திற்கு மூலமாக அமைகிறது.[1]

சமநிலைத் தொடர்பாக சுழிய விதி

ஒரு தொகுதியின் வெப்ப ஆற்றலில் நிகர மாற்றம் உணரப்படாத போது அது வெப்பச்சமநிலையில் இருக்கும் எனப்படுகிறது. A, B, மற்றும் C என்பன வெவ்வேறு வெப்பத்தொகுதிகளாக இருக்கும் போது, வெப்ப ஆற்றலின் சுழிய விதியை பின்வருமாறு வெளிப்படுத்தலாம்:[2]

"A மற்றும் C ஒவ்வொன்றும் B உடன் வெப்பச்சமநிலையில் இருக்க, A ஆனது C உடன் சமநிலையில் இருக்கும்"

மேற்கோள்கள்

மேலதிக வாசிப்பு

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை