1,3,5-டிரையாக்சேன்

அமில வினையூக்கிகளைப் பயன்படுத்தி பார்மால்டிகைடை முப்படியாக்கம் செய்து டிரையாக்சேனைத் தயார

1,3,5- டிரையாக்சேன் (1,3,5-Trioxane) என்பது C3H6O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டிரையாக்சேன் அல்லது டிரையாக்சின் அல்லது மூவாக்சேன் என்ற பெயர்களாலும் இதை அழைக்கலாம். குளோரோபார்ம் போன்ற வாசனையுடன் வெண்மை நிறத்தில் ஒரு திண்மமாக டிரையாக்சேன் காணப்படுகிறது. பார்மால்டிகைடின் நிலையான வளைய முப்படியாகவும் டிரையாக்சேனின் மூன்று மாற்றியன்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. டிரையாக்சேன் மூலக்கூற்று கட்டமைப்பு ஆறு உறுப்பு வளையமாக அமைந்துள்ளது. மூன்று கார்பன் அணுக்களும் மூன்று ஆக்சிசன் அணுக்களும் ஒன்று விட்டு ஒன்றாக மாறிமாறி இடம்பெற்றுள்ளன. இதனால் பார்மால்டிகைடு வளைய முப்படியாதல் மூலம் 1,3,5-டிரையாக்சேனைக் கொடுக்கிறது.

1,3,5-டிரையாக்சேன்
Trioxane molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,3,5-டிரையாக்சேன்
வேறு பெயர்கள்
எசு-டிரையாக்சேன்; 1,3,5-டிரையாக்சாவளையயெக்சேன்; டிரையாக்சி மெத்திலீன்; மெட்டாபார்மால்டிகைடு; டிரையாக்சின்
இனங்காட்டிகள்
110-88-3 Y
ChEBICHEBI:38043 Y
ChemSpider7790 Y
InChI
  • InChI=1S/C3H6O3/c1-4-2-6-3-5-1/h1-3H2 Y
    Key: BGJSXRVXTHVRSN-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C3H6O3/c1-4-2-6-3-5-1/h1-3H2
    Key: BGJSXRVXTHVRSN-UHFFFAOYAW
யேமல் -3D படிமங்கள்Image
வே.ந.வி.ப எண்YK0350000
  • O1COCOC1
UNII46BNU65YNY Y
பண்புகள்
C3H6O3
வாய்ப்பாட்டு எடை90.08 g·mol−1
தோற்றம்வெண்மையான படிகத் திண்மம்
அடர்த்தி1.17 கி/செ.மீ3 (65 °C)[1]
உருகுநிலை 62 °C (144 °F; 335 K)[1]
கொதிநிலை 115 °C (239 °F; 388 K)[1]
221 கி/லிட்டர்[1]
தீங்குகள்
R-சொற்றொடர்கள்R22
S-சொற்றொடர்கள்S24/25
தீப்பற்றும் வெப்பநிலை45 °C (113 °F)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

அமில வினையூக்கிகளைப் பயன்படுத்தி பார்மால்டிகைடை முப்படியாக்கம் செய்து டிரையாக்சேனைத் தயாரிக்கிறார்கள். அடர்த்தியான நீரிய கரைசலில் வினை நடைபெறுகிறது. விளைபொருள் கரைப்பானைக் கொண்டு பிரித்தெடுக்கப்படுகிறது. வினை வழிமுறை கீழே கொடுக்கப்படுகிறது.

பயன்கள்

பாலியாக்சிமெத்திலீன் நெகிழிகளுக்காக டிரையாக்சேன் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. மொத்தமாக உற்பத்தி செய்யப்படும் டிரையாக்சேனில் ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன் அளவு இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது [2]. பார்மால்டிகைடை வெளியீட்டுப் பயன்படுத்தும் போக்கைப் பிற பயன்பாடுகள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் இதை மர, நெசவுத் தொழிலில் ஒரு சேர்ப்பியாகப் பன்படுத்துகிறார்கள். டிரையாக்சேனை எக்சமீனுடன் இணைத்து சமையல் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்.

ஆய்வகங்களில் பார்மால்டிகைடின் நீரிலி மூலமாக டிரையாக்சேன் பயன்படுகிறது[3].

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=1,3,5-டிரையாக்சேன்&oldid=2606957" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை