2017 ஆகூங்க் எரிமலை வெடிப்பு

2017 ஆம் ஆண்டில்,இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் ஆகூங்க் மலையில் உள்ள  எரிமலையானது  கடுமையாக வெடித்து எரிமலைக் குழம்பைக் கக்ககத் தொடங்கியது. இதன் காரணமாக அப்பகுதியில் வாழும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.  வான்வழிப் போக்குவரத்தில் சீர்குலைவும் ஏற்பட்டது. As of 27 நவம்பர் 2017 அன்று எச்சரிக்கையின் அளவு உச்சபட்சமாகி, வெளியேற்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

2017 ஆகூங்க் எரிமலை வெடிப்பு
நவம்பர் 27 அன்று ஆகூங்க் மலை
நாள்13 ஆகத்து 2017 (2017-08-13)– present
(6 ஆண்டு-கள், 7 மாதம்-கள், 3 வாரம்-கள் and 4 நாள்-கள்) 
அமைவிடம்ஆகூங்க் மலை, பாலி, இந்தோனேசியா
புவியியல் ஆள்கூற்று8°20′35″S 115°30′25″E / 8.34306°S 115.50694°E / -8.34306; 115.50694
வகைஎரிமலை வெடிப்பு

எரிமலை கக்குதல் நிகழ்வின் கால வரிசை

எரிமலைக் குழம்பு வெளிப்படும் அளவிற்கான நிலநடுக்கங்கள் 2017 ஆகத்து 10 முதலே உற்றுநோக்கப்பட்டன.[1] மேலும், அடுத்தடுத்த வாரங்களில் இந்த நிகழ்வின் தீவிரம் அதிகரித்து வந்தது.  அக்டோபரின் பிற்பகுதியில் இதன் தீவிரம் குறைய ஆரம்பித்தது. பின்னர் மீண்டும் நவம்பரின் பிற்பகுதியில் ஒரு பெரிய நிகழ்வு தொடங்கியது.

முதல் பெரு நிகழ்வின் காலம்

செப்டம்பர்

செப்டம்பர் 2017 இல், எரிமலையைச் சுற்றியுள்ள பகுதியில் நில அதிர்வுகளும் உருட்டொலிகளும் அதிகரிக்கத் தொடங்கின. இதன் காரணமாக,  122,500 அளவிலான மக்கள் எரிமலையைச் சுற்றிய அவர்களின் வாழிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.[2] இந்தோனேசிய தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் செப்டம்பர் 24 அன்று எரிமலையைச் சுற்றிய 12 கிலோ மீட்டர் தொலைவுப் பகுதியை வெளியேற்றப் பகுதியாக அறிவித்தது.[3] எரிமலையின் வாய்ப்பகுதியில் செப்டம்பர் 13 ஆம் நாளன்று ஒரு தீப்பிழம்பு காணப்பட்டது.[1]

வெளியேற்றப்பட்டவர்கள் கிளங்கம், காரங்காசேம், பியூலிலெங் மற்றும் இதர பகுதிகளைச் சுற்றி விளையாட்டு அரங்கங்களிலும், சமுதாயக் கூடங்களிலும் தங்க வைக்கப்பட்டனர்.[4] டெம்புகு, ரென்டாங், காரங்காசேம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள கண்காணிப்பு நிலையங்களில் நடுக்கங்களின் அளவு, அதிர்வெண்கள் மற்றும் நெருங்கி வரப்போகும் பெரிய அளவிலான எரிமலை வெடிப்புகளுக்கான சாத்தியக்கூறுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன.[5]

செப்டம்பர் 25 ஆம் நாள் 844 எரிமலை வெடிப்பு நிலநடுக்கங்களும், 26 செப்டம்பரின் நன்பகலில் 300 முதல் 400 வரையிலான நிலநடுக்கங்களும் உணரப்பட்டன. நிலநடுக்க ஆய்வாளர்கள், இதே போன்று மற்றைய எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்த போது ஏற்பட்ட தீவிரம் மற்றும் அதிர்வெண்கள் குறித்து எச்சரிக்கப்பட்டனர்.[6][7]

அக்டோபர்

அக்டோபர் 2017 இன் பிற்பகுதியில் எரிமலையின் செயல் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்தது.[8] இதன் காரணமாக எச்சரிக்கையின் அளவு அக்டோபர் 29 இல் குறைக்கப்பட்டது.இரண்டாவது பெருநிகழ்வின் தொடக்கம் வரையிலும் எச்சரிக்கையின் அளவு 3 (உச்சபட்சம் 4) என்ற அளவிலேயே நீடித்தது. இந்த காலகட்டத்தில் எரிமலை வாயில் அவ்வப்போது தீப்பிழம்புகள் தோன்றியது கவனிக்கப்பட்டு வந்தன.[9][10]

இரண்டாவது பெரு நிகழ்வின் காலம்

செவ்வாய், நவம்பர் 21

நவம்பர் 21 அன்று ஒருங்கிணைந்த சர்வதேச நேரம் 09:05 இன் போது ஏற்பட்ட சிறிய அளவிலான நீராவியால் உந்தப்பட்ட வெடிப்பினால் ஏற்பட்ட சாம்பல் புகையானது கடல் மட்டத்திலிருந்து 3842 மீட்டர் உயரத்தை அடைந்தது.[11] ஆயிரக்கணக்கான மக்கள் அந்தப் பகுதியை விட்டு விரைந்து வெளியேறினர்.[12] மேலும் 29,000 தற்காலிக அகதிகள் அருகாமையில் உள்ள 270 இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.[13]

சனிக்கிழமை, நவம்பர் 25

சனிக்கிழமையன்று அதிகாலையில் மாக்மாவினால் ஏற்படும் வெடிப்பு தொடங்கியது.[14] இதன் காரணமாக ஏற்பட்ட வெடிப்பின் தீப்பிழம்பானது மலை முகட்டில் உள்ள எரிமலை வாயிலிருந்து 1.5–4 கி.மீ அளவுக்கு எழுந்ததாகவும், தெற்குப் பகுதியை நோக்கி நகர்ந்து சுற்றுப்புறம் முழுவதையும் கருஞ்சாம்பலாலான படிவால் மாசுபடுத்தியதோடு, ஆசுத்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கான விமானங்களை இரத்து செய்யவும் காரணமாக இருந்துள்ளது. ஆரஞ்சு நிற ஒளிர்வானது எரிமலை வாயைச் சுற்றிலும் இரவில் காணப்பட்டது. இது புத்தம்புது மாக்மாவானது நிலத்தை அடைந்திருக்கக்கூடும் என்பதை உறுதி செய்தது.[15][16]

ஞாயிறு, நவம்பர் 26

ஒ.ச.நே 23:37 அளவில மற்றுமொரு வெடிப்பு நிகழ்ந்தது.[14] Ngurah Rai International Airport was closed next day,[17] leaving many tourists stranded.[18] எரிமலைப் பகுதியின் சுற்றுவட்டப் பகுதியில் 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள் வாழ்ந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அந்த இடத்திலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டனர்.[19]

திங்கள், நவம்பர் 27

நவம்பர் 27 அன்று ஆகூங்க் மலையில் ஏற்பட்ட சாம்பல் பிழம்பு

ஞாயிற்றுக் கிழமையின் வெடிப்பு மற்றும் கக்குதல் ஒரு சீரான இடைவெளியில் தொடர்ந்தது.[20] மேலும் எரிமலையின் தெற்குப் பகுதியில் அமைந்த செலாட் மாவட்டத்தில் லகர்கள் வந்து சேர்ந்தனர்.[18] The Australian Government's Bureau of Meteorology reported that the top of the eruption column had reached an altitude of 9,144 m (5.7 miles).[21] தென்கிழக்கு திசையில் சாம்பல் பரவுவது தொடர்ந்தது. இந்த எரிமலை வெடிப்பின் காரணமாக வளிமண்டலத்தில் வெளியிடப்பட்ட சாம்பல் வெளிப்பாடானது எரிமலையைச் சுற்றிலும் வாழும் மக்களடர்த்தி அதிகம் உள்ள பகுதிகளில் வாழும் 56  இலட்சம் மக்களைப் பாதிக்கக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது.[20]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை