2022 பப்புவா நியூ கினி நிலநடுக்கம்

2022 பப்புவா நியூ கினி நிலநடுக்கம் (2022 Papua New Guinea earthquake) 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று உள்ளூர் நேரப்படி காலை 9:46 மணிக்கு பப்புவா நியூ கினியில் 7.6 அல்லது 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.[1][2][3] அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உயிரிழப்பு மற்றும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

2022 பப்புவா நியூ கினி நிலநடுக்கம்
2022 பப்புவா நியூ கினி நிலநடுக்கம் is located in பப்புவா நியூ கினி
2022 பப்புவா நியூ கினி நிலநடுக்கம்
நிலநடுக்க அளவு7.6 Mww
ஆழம்90.0 km (55.9 mi)
நிலநடுக்க மையம்6°15′22″S 146°28′08″E / 6.256°S 146.469°E / -6.256; 146.469
பாதிக்கப்பட்ட பகுதிகள்பப்புவா நியூ கினி
அதிகபட்ச செறிவுVIII (Severe)

நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கம் உந்தத்திறன் ஒப்பளவு அளவில் 7.6 ஆக இருந்தது. 90.0 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்திருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறுகிறது.[4] இதற்கிடையில், புவிவாய்ப்பு என்கிற அமைப்பு நிலநடுக்க அளவு 7.7 என்றும் 39 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்தது என்றும் அளவிட்டுள்ளது. புவியின் இடை ஆழத்தில் மேற்கு வடமேற்கு-கிழக்கு தென்கிழக்கு மோதல் அல்லது வடக்கு-வடகிழக்கு தள மூழ்கல் அல்லது கிழக்கு-மேற்கு தாக்கம் மற்றும் தெற்கு தளம் அமிழ்தல் போன்ற காரணங்கள் ஒன்றின் விளைவாகும். [5]

விளைவுகள்

நிலநடுக்கம் ஏற்பட்ட மையத்தைச் சுற்றியுள்ள 1000 கிலோமீட்டர் சுற்றளவில் பப்புவா நியூ கினியா மற்றும் இந்தோனேசியா கடற்கரை பகுதிகளில் சுனாமி அச்சுறுத்தல் செய்தியை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்டது. [6] சுனாமி அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாக பிறகு இம்மையம் அறிவித்தது. [7]

சில உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சந்தேகிக்கிறது.[8]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை