சுமிருதி மந்தனா

இந்திய பெண் துடுப்பாட்டக்காரர்

சுமிருதி ஸ்ரீநிவாஸ் மந்தனா(Smriti Shriniwas Mandhana) ஜூலை 18,1996ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் ஆவார். இவர் இந்திய அணியின் பெண்கள் துடுப்பாட்ட அணியின் இடது கை துடுப்பாட்டக்காரர் ஆவார்.[1][2] இவரது முதல் ஒரு நாள் போட்டி 2014 ஆகஸ்ட் மாதம் இங்கிலாத்திற்கு எதிராக விளையாடினார். ஐ.சி.சி மகளிர் அணியில் இடம்பெற்ற முதல் இந்திய வீரர் ஆவார். ஜுன் 2018 இல் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் இவருக்கு சிறந்த சர்வதேச துடுப்பாட்ட வீரருக்கான பிசிசிஐ விருதினை அறிவித்தது.[3]

சுமிருதி மந்தனா

ஆரம்ப கால வாழ்க்கை

மந்தனா ஜுலை 18, 1996 இல் மும்பையில் பிறந்தார். இவரின் தாய் சுமிதா தந்தை ஸ்ரீநிவாஸ் மந்தனா ஆவர்.[4][5]  இவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது மகாராட்டிரத்தில் உள்ள சங்கிலி, மாதவநகருக்கு குடிபெயர்ந்தனர். அங்குள்ள பள்ளியில் அவர் கல்வி பயின்றார். இவரின் தந்தை மற்றும் சகோதரர் ஸ்ரவன் இருவரும் சங்கிலி மாவட்ட துடுப்பாட்ட அணிக்காக போட்டிகளில் விளையாடி  உள்ளனர். இவரின் சகோதரர் மகாராட்டிர மாநிலத் துடுப்பாட்ட அணிக்காக 19 வயதினருக்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் விளையாடியதனைப் பார்த்தது இவருக்கு ஊக்கமாய் அமைந்தது.[6] மந்தனாவின் குடும்பம் இவரின் துடுப்பாட்ட வாழ்க்கைக்கு உதவினர். அவரின் தந்தை அவரின் துடுப்பாட்ட திட்டமிடலையும் தாய் , அவரின் உணவு கட்டுப்பாடு மற்றும் ஆடைகள் போன்ற பிறவற்றையும் கவனித்து வந்தார். அவரின் சகோதரர் வலைப்பயிற்சியின் போது பந்து வீசினார்.[4][5]

உள்ளூர்ப் போட்டிகள்

2013 ஆம் ஆண்டில் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் இரட்டை நூறுகள் அடித்த பிறகு பரவலாக அறியப்பட்டார். அக்டோபரில்  2013 இல்  வதோதராவில் உள்ள அலெம்பிக் துடுப்பாட்ட,மைதானத்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான தொடரின் குஜராத் மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் மகாராட்டிர மாநிலத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். அந்தப் போட்டியில் 150 பந்துகளில் 224 ஓட்டங்கள் எடுத்தார்.[7] 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற பெண்கள் வாகையாளர் கோப்பைக்கான தொடரில் மூன்று அரை நூறுகள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இருதிப்போட்டியில் 82 பந்துகளில் 62 ஓட்டங்கள் எடுத்து இந்தியா புளூவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் வெல்வதற்கு உதவினார். 192 ஓட்டங்கள் எடுத்து அந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்..[8]

சர்வதேசப் போட்டிகள்

விருதுநகர் மாவட்டத்தின் உள்ளடங்கிய கிராமம் ஒன்றில் காணப்படும் சுமிருதி மந்தனாவின் பெயர் தாங்கிய சுவர்க் கிறுக்கல் ஒருவிதத்தில் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டின் செல்வாக்கு பெருகிவருவதை உணர்த்துகிறது

2014 ஆம் ஆண்டில் வோர்ம்ஸ்லீ பார்க்கில் நடைபெற்ற இங்கிலாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் முதன் முறையாக விளையாடினார். முதல் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 22 ஓட்டங்களும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 51 ஓட்டங்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். பின் திருஷ் காமினி யுடன் துவக்க வீரராக களம் இறங்கி 76 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்குத் தேவையான 182 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற உதவினார்.[9][10]2015-16 ஆம் ஆண்டில் இந்திய பெண்கள் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. பெல்லரிவ் ஓவலில் நடைபெற்ற அந்தத் தொடரின் இரண்டாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களை அடித்தார். 109 பந்துகளை எதிர்கொண்டு அதில் 102 ஓட்டங்களை எடுத்தார். ஆனால் அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.[11]2016 ஆம் ஆண்டில் இந்திய பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை அறிவித்த பெண்கள் துடுப்பாட்ட அணியில் இடம் பெற்ற ஒரே இந்திய வீரர் இவரே.  [12] முன்புற தசைநாரில் ஏற்பட்ட காயம் காரணமாக இவரால் 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டியிலும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற நான்கு அணிகளுக்கு இடையேயான தொடரிலும் இவரால் விளையாட இயலவில்லை. ஐந்து மாத ஓய்விற்குப் பிறகு இவர் 2017 பெண்கள் துடுப்பாட்டக் கிண்ணத் தொடரில் விளையாடினார்.[13]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சுமிருதி_மந்தனா&oldid=3919066" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை