போர்த்துகலில் அசோரசின் அமைவிடம் (பச்சை); மற்ற ஐரோப்பிய ஒன்றிய பகுதிகள் (கருநீலம்)
போர்த்துகலில் அசோரசின் அமைவிடம் (பச்சை); மற்ற ஐரோப்பிய ஒன்றிய பகுதிகள் (கருநீலம்)
அசோரசு தீவுக்கூட்டத்தின் தீவுப் பரவல்
அசோரசு தீவுக்கூட்டத்தின் தீவுப் பரவல்
அசோரசு (UK: /əˈzɔːrz/ə-ZORZ-', US: /ˈeɪzɔːrz/AY-zorz; போர்த்துக்கேய மொழி: Açores, [ɐˈsoɾɨʃ]), அதிகாரப்பூர்வமாக அசோரசு தன்னாட்சிப் பகுதி, போர்த்துகலின் இரண்டு தன்னாட்சிப் பகுதிகளுள் ஒன்றாகும். இது ஒன்பது உயர் தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமாகும். வடக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில், போர்த்துகலுக்கு மேற்கே சுமார் 1,360 km (850 mi) தொலைவிலும், மதீராவிற்கு வடமேற்கே சுமார் 880 km (550 mi) தொலைவிலும், நியூபவுண்ட்லாந்து தீவிற்கு தென்கிழக்கே சுமார் 1,925 km (1,196 mi) தொலைவிலும், பிரேசிலுக்கு வடகிழக்கே சுமார் 6,392 km (3,972 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. பால் பண்ணை, கால்நடை மேய்த்தல், மீன் பிடித்தல் போன்றவை இங்கு வாழும் மக்களின் முக்கியத் தொழில்களாகும். சுற்றுலா சார்ந்த தொழில்களும் பெருகி வருகின்றன.