அகாத்னா

அகாத்னா (Hagåtña), முன்னதாக ஆங்கிலத்தில் அகான (Agana) மற்றும் எசுப்பானியத்தில் அகன்ன (Agaña) ஐக்கிய அமெரிக்க ஆட்புலமான குவாமின் தலைநகரமாகும். 18ஆம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரை, இது குவாமின் மக்கள்தொகை மிகுந்த இடமாக இருந்தது; ஆனால் தற்போது இது இரண்டாம் மிகக் குறைந்த பரப்பும் மக்கள்தொகையும் உள்ள சிற்றூராக உள்ளது. இருப்பினும் இது அரசின் ஆட்சிபீடமாக இருப்பதுடன் தீவின் முதன்மையான வணிக மாவட்டங்களில் ஒன்றாக விளங்குகின்றது.

அகாத்ன
அகான / அகன்ன
சிற்றூர்
Skyline view of modern Hagåtña as seen from Fort Apugan, which overlooks the town
சான்டா அகுயுடா கோட்டையிலிருந்து தற்கால அகாத்ன
குவாம் ஆட்புலத்தில் அகாத்ன (அகான) இருக்குமிடம்
குவாம் ஆட்புலத்தில் அகாத்ன (அகான) இருக்குமிடம்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
ஆட்புலம்குவாம்
அரசு
 • நகரத் தந்தைஜான் ஏ. குரூசு (ஆர்)
பரப்பளவு
 • மொத்தம்1 sq mi (3 km2)
மக்கள்தொகை (2010)[1]
 • மொத்தம்1,051
நேர வலயம்கமோர்ரோ நேரம் (ஒசநே+10)
சிப் குறியீடுகள்96910, 96932 (அஞ்சல் பெட்டி)
தொலைபேசி குறியீடு671

புவியியல்

அகாத்னா குவாமின் மேற்கு கடலோரத்தில் அகாத்ன ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அமெரிக்க கணக்கெடுப்பு வாரியத்தின் தரவுகளின்படி இதன் பரப்பளவு 1 சதுர மைல் (2.6 கிமீ²) ஆகும். வடக்கில் அகான விரிகுடாக் கடற்கரையும் கிழக்கில் அகான ஆறும் அதன் நஞ்செய் நிலங்களும் தெற்கில் மலைச்சிகரமும் (இதன் மேலே அகான ஐய்ட்சு என்ற சிற்றூர் உள்ளது) எல்லைகளாக உள்ளன. பல மீயுயர் அலுவலகக் கட்டிடங்கள் சிற்றூரின் மையத்தில் உள்ளன. மேற்கு புறத்திலுள்ள அனிகுவா எனப்படும் நகர்ப்புறம் வதிவிட வட்டாரமாக உள்ளது. மற்றபல சிற்றூர்களைப் போலல்லாது அகாத்னவின் மையப்பகுதி வளாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது; அங்காடிகளும் உணவகங்களும் அனைத்து வளாகங்களிலும் பரந்துள்ளன. மிகுந்த மக்கள் வாழும் மொங்மொங்-டொடோ-மைத், சினஜனா, அகான ஐய்ட்சு போன்ற சிற்றூர்கள் அகாத்னவைச் சூழ்ந்துள்ளன.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
அகாத்னா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அகாத்னா&oldid=3352960" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை