அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி

இந்திய அரசியல் கட்சி

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தமிழ் திரைப்பட நடிகர் சரத்குமாரால் ஆகஸ்ட் 31, 2007 அன்று தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சியாகும். இக்கட்சி காமராஜர், எம்ஜிஆர், அப்துல் கலாம் ஆகியோரின் சிந்தனைகளை, கொள்கைகளை, வழிகாட்டல்களை முன்னெடுத்து செயல்படும் என்று சரத்குமார் தெரிவித்தார். கட்சி நிறுவப்பட்ட நாளிலிருந்து 12 மார்ச் 2024 வரை சரத்குமார் கட்சியின் தலைவராக இருந்தார். 12 மார்ச் 2024 அன்று, அதன் நிறுவனர் சரத்குமாரால் பாரதிய ஜனதா கட்சியில் இணைக்கப்பட்டது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
நிறுவனர்சரத்குமார்
பொதுச் செயலாளர்சரத்குமார்
தொடக்கம்ஆகஸ்ட் 31, 2007
கலைப்பு12 மார்ச்சு 2024; 40 நாட்கள் முன்னர் (2024-03-12)
இணைந்ததுபாரதிய ஜனதா கட்சி
தலைமையகம்அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி எண்.46, ராமகிருஷ்ணா தெரு, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை - 600017
கட்சிக்கொடி
இந்தியா அரசியல்

2011 தேர்தல்

சரத்குமார் தனது ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தார்.[1] பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) சேர்ந்தார். பின்னர் அவர் அதிமுகவிலிருந்து விலகி 31 ஆகத்து 2007 அன்று தனது சொந்த அரசியல் கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். இக்கட்சி 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது.[2][3] தென்காசியில் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் ஏ. நாராயணனும் வெற்றி பெற்றனர்.[4]

கட்சி கலைப்பு

12 மார்ச் 2024 அன்று, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அதன் நிறுவனர் சரத்குமாரால் பாரதிய ஜனதா கட்சியில் இணைக்கப்பட்டது. சென்னையில் நடந்த இந்த இணைப்பிற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை தலைமை தாங்கினார்.[5]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சரத்குமாரின் புதிய கட்சி உதயம் பரணிடப்பட்டது 2007-10-11 at the வந்தவழி இயந்திரம் - தமிழ் சினிமா

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை