அம்பிகா சோனி

இந்திய அரசியல்வாதி

அம்பிகா சோனி (பிறப்பு: நவம்பர் 13, 1942) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய மத்திய அமைச்சரவையில் தகவல் மற்றும் அலைபரப்புத் துறை அமைச்சராக தற்போது பணியாற்றி வருகிறார். சுற்றுலா மற்றும் பண்பாட்டு அமைச்சராக 2006-2009 வரைப் பணியாற்றினார்.[1] இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அம்பிகா சோனி
இந்திய மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1996
தகவல் மற்றும் அலைபரப்புத்துறை அமைச்சர்
பதவியில்
22 மே 2009 - 27 அக்டோபர் 2012
முன்னையவர்பிரியா ரன்ஜன்
பின்னவர்மணீஷ் திவாரி
சுற்றுலாத்துறை அமைச்சர்
பதவியில்
29 ஜனவரி 2006 - 22 மே 2009
முன்னையவர்ரேணுகா சவுத்ரி
பின்னவர்செல்ஜா குமாரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 நவம்பர் 1942 (1942-11-13) (அகவை 81)
லாகூர், ஒருங்கிணைந்த இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்உதய் சோனி
பிள்ளைகள்ஒரு மகன்
வாழிடம்புது தில்லி
இணையத்தளம்Official website

ஆரம்ப கால வாழ்க்கையும் கல்வியும்

அம்பிகா 1942 ஆம் ஆண்டில் பிரிக்கப்படாத பஞ்சாப்பில் லாகூரில் பிறந்தார். இவரது தந்தை நகுல் சென் ஒரு இந்தியக் குடிமைப் பணி (I.C.S) அதிகாரி. இவரது தாயார் பெயர் இந்து. அம்பிகா தனது பி.ஏ பட்டப்படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்திரபிரஸ்தா கல்லூரியில் முடித்தார். பிறகு, பேங்காக்கிலுள்ள அலையன்சு ஃபிரான்சேசிலிருந்து டிப்ளோம் சுப்பீரியர் என் லாங் பிரான்சேசு பட்டமும், கியூபாவின் ஹவானா பல்கலைக்கழகத்திலிருந்து எசுப்பானிய கலை மற்றும் இலக்கியத்தில் முதுகலைப் பட்டயமும் பெற்றார்.[2]

தொழில் வாழ்க்கை

அம்பிகா இந்திய இளைஞர் காங்கிரசின் தலைவராக 1975 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் தனது அரசியல் அறிமுகத்தைத் தொடங்கினார். 1977 வரை இப்பதவி வகித்தார். 1976 ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 1988 ஆம் ஆண்டில் அனைத்து இந்திய பெண்கள் காங்கிரசின் தலைவரானார்.[3]

சர்ச்சைகள்

சேதுசமுத்திரம் சர்ச்சை தொடர்பாக, அம்பிகா சோனி தலைமையில் செயல்பட்ட பண்பாட்டு அமைச்சகம், நீதிமன்றத்தில் பதிவு செய்த ஒரு ஆவணத்தில் கடவுள் இராமரின் வரலாற்றுத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியது. இதனால் எழுந்த சர்ச்சை பற்றி அப்போதைய வணிகத்துறை மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், தான் சோனியின் இடத்தில் இருந்திருந்தால் ராஜினாமா செய்திருப்பேன் எனக் கூறினார்.[4] செப்டம்பர் 18, 2007 இல் "எனது தலைவர்கள் (பிரதம மந்திரி மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி) கூறினால் நான் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் என் பதவியை ராஜினாமா செய்வேன்” என்று சோனி கூறினார்.[5]

ஏப்ரல் 2011 இல் சோனி அளித்த பேட்டி ஒன்றில் உலக நாடுகளின் ஊடகங்களில் இந்திய ஊடகங்கள் தான் அதிக சுதந்திரத்துடன் செயல்படுகின்றன என்று கருத்து தெரிவித்தார். ஆனால் பன்னாட்டு ஊடகச் சுதந்திரக் குறியீடு தரப்பட்டியல்களில் இந்தியா மோசமான இடத்தையே பெற்றுள்ளது.[6][7][8]

குறிப்புதவிகள்

புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அம்பிகா_சோனி&oldid=3574731" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை