ஆடம் இரீசு

ஆடம் கை இரீசு (Adam Guy Riess, பிறப்பு: திசம்பர் 16, 1969) ஓர் அமெரிக்க வானியற்பியலாளர். இவர் ஜான்சு ஆப்கின்சு பல்கலைக்கழகத்திலும் விண்தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்திலும் பணிபுரிகிறார். இவர் மீவிண்மீன் வெடிப்புகளை அண்டவியல் ஆய்வுகட்குப் பயன்படுத்திப் பெயர்பெற்றவர். இவர் 2006 இல் வானியலுக்கான இழ்சா பரிசையும் 2011 இல் இயற்பியல் நோபல் பரிசையும் சோல் பெர்ல்மட்டர், பிறையன் சிமித் ஆகியவர்களுடன் இணைந்து விரிவுறும் அண்டம் முடுக்கம் உறுவதைக் கண்டுபிடித்ததற்காகப் பெற்றுள்ளார்.

ஆடம் இரீசு
Adam Riess
பிறப்புஆடம் கை இரீசு
திசம்பர் 16, 1969 (1969-12-16) (அகவை 54)
வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் / விண்தொலைநோக்கி அறிவியல் நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்,
ஹார்வர்டு பல்கலைக்கழகம்,
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
அறியப்படுவதுபிரபஞ்ச முடுக்கம் / கருப்பு ஆற்றல்
விருதுகள்எலென் பி. வார்னர் வானியல் பரிசு (2002)
சா வானியல் பரிசு (2006)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (2011)
ஆல்பர்ட் அய்ன்சுட்டீன் பதக்கம் (2011)
துணைவர்நான்சி ஜாய் சுக்கோண்டோர்ப் (திரு. 1998)

குடும்பம்

இரீசு மூன்று மக்களில் ஒருவராக வாசிங்டன், டி. சி.யில் பிறந்தார்.[1][2] இவர் நியூஜெர்சியில் உள்ள வாரன் நகரில் வளர்ந்தார். கப்பல் பொறியாளரான இவரது தந்தை மைக்கேல் இரீசு இங்கு பிசுட்ரோ பன்னாட்டகம் எனும் உறைபதன உணவுக் குழுமத்துக்கு உரிமையாளராக இருந்தார்.இவரது தாயாரான டோரிசு இரீசு மருத்துவ உளவியலாளராக இருந்தார்.[3] மைக்கேல் இரீசு (1931–2007) அமெரிக்காவுக்கு தன் பெற்றோருடன் 1936 இல் ஐரோப்பா (1928) எனும் கப்பலில் செருமனியில் இருந்து புலம்பெயர்ந்துள்ளார், இவர் கர்ட் ரீசு, இல்சி பொசுனான்சுக்கி எனும் நூல்களின் ஆசிரியரும் இதழியலாளரும் போர்த் தகவல்தொடர்பாளரும் ஆவார்.[4].[5] இவருக்கு இரண்டு தங்கையர் உண்டு. அவர்களில் ஒருவர் உளவியலாளரான கைல் சால்ட்சு; மற்றவர் ஓவியர் ஒல்லி ஏகர்மேன் ஆவார். இரீசு 1998 இல் நான்சி ஜாய் சுக்கோண்டோர்ப்பை மணம் புரிந்தார்.

கல்வி

இவர் வாட்சங் இல்சு வட்டார உயர்நிலைப் பள்ளியில் பயின்று 1988 இல் பள்ளிக்கல்வியை முடித்தார்.[6] இவர் 1987 இல் பெயர்பெற்ற ஜெர்சி ஆளுநர் பள்ளியில் அறிவியல் பயின்றார். பின்னர் இவர் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் பயின்று 1992 இல் பட்டம் பெற்றார். அங்கு இவர் பை டெல்டா தீட்டா குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் தன் முனைவர் பட்டத்தை ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் 1992 இல் பெற்றுள்ளார்; இதில் 20 புதிய வகை மீவிண்மீன்வெடிப்புகளின் அளவீடுகள் பொதிந்துள்ளன. மேலும் இதில் இடையில் உள்ள துசு, இயல்பான சீரின்மைகளுக்கான திருத்தம் அமைந்த Ia வகை மீவிண்மீன்வெடிப்புகளைத் துல்லியமான தொலைவு சுட்டிகளாகப் பயன்படுத்தும் புதிய முறையும் அடங்கியுள்ளது. இவரது முனைவர் ஆய்வு இராபர்ட் கிர்சுனர் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது. இது வானியலுக்கு இயல்புக்கு மாறானவகையில் வானியலுக்குப் பங்களித்ததால் 1999 ஆம் ஆண்டின் இராபர்ட் ஏ. டிரம்பிளர் விருதைப் பெற்றது.[7]

பணிகள்

இரீசு 1999 இல் விந்தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்துக்குச் செல்லும் முன் பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மில்லர் ஆய்வுநல்கையைப் பெற்றுவந்துள்ளார் இவர் ஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் உள்ள தற்போதைய பதவியை 2005 இல் பெற்றார். மேலும் இழ்சா பரிசு வானியல் விருது தேர்வுக் குழுவிலும் இவர் உள்ளார்.

இரீசு பிரையான் சுக்கிமிடுடன் இணைந்து 1998 இல் உயர்-Z விண்மீன்வெடிப்புக் குழுவுக்குத் தலைமை வகித்தார் 1a வகை மீவிண்மீன்வெடிப்புகளைக் கண்காணித்து, விரியும் அண்டம் இப்போது முடுக்கம் உறுகிறது என இக்குழு முதன்முதலில் அறிவித்தது.. இக்குழுவின் நோக்கீடுகள் அண்ட விரிவு ஒடுக்க நிலையில் உள்ளதாக்க் கருதும் இக்காலக் கோட்பாட்டு நிலைப்பாட்டுக்கு முரணாக அமைந்தது.; மாறாக புவியில் இருந்து மீவிண்மீன்வெடிப்புகளில் இருந்துவரும் ஒளியின் செம்பெயர்ச்சியை அளந்து பல பில்லியன் ஆண்டுகட்கு முந்தைய மீவிண்மீன்வெடிப்புகளும் முடுக்கமுற்று வருதலை இக்குழு கண்டுபிடித்தது.[8] இம்முடிவு மீவிண்மீன்வெடிப்பு அண்டவியல் திட்டம் வழியாக ஒருங்கே பெர்ல்மட்டராலும் கண்டுபிடிக்கப்பட்ட்து.[8] இந்த இரண்டு ஆய்வுகளின் ஒருமித்த முடிவு முடுக்கமுறும் அண்டக் கோட்பாடு பொது கருத்தேற்பு பெற வழிவகுத்தது. இதனால் புடவியின் தன்மை பற்றிய புதிய ஆய்வுகள் முடுக்கப்பட்டன. கருப்பு ஆற்ற்ல் நிலவுவதை நிறுவியது.[8] இந்த முடுக்கமுறும் அண்டக் கோட்பாட்டின் கண்டுபிடிப்பு 1998 இல் அறிவியல் இதழால் அறிவியலின் மிகப்பெரும் அருஞ்செயலாக அறிவித்த்து. மேலும் 2011 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு இரீசுக்கும் சுக்கிமிடுக்கும் பெர்ல்மட்டருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.[8]

இதுவரை மாந்தரினம் காணாத மீவிண்மீன்வெடிப்புகளைக் காண, அப்புள் தொலைநோக்கியால் உயர் ZSN தேட்ட்த் திட்ட்த்தின் தலைமை வகித்தார். இவரது குழு 10 பில்லியன் ஆண்டுகட்கு முந்தைய புடவியின் விரிவை ஆய்வு செய்த்து. இது தொடக்கநிலை ஒடுக்கமுறும் விரிவைக் கண்டுபிடித்தது. இதனால் தொலைவில் உள்ள மீவிண்மீன்வெடிப்புகள் சற்ரே பொலிவோடு நிலவுவது அறியப்பட்ட்து. இந்நிலை இப்போது நம்பும் கணிசமானமீவிண்மீன்வ்டிப்புகள் மங்குவதாக்க் கருதும் சிந்தனைக்கு முற்றுபுள்ளி வைத்த்து. மேலும் இம்முடிவு கருப்பு ஆற்றல்- கரும்பொருண்மப் புடவிப் படிமத்தை மீவிண்மீன்வெடிப்புகளின் ஆய்வால் நிறுவி உறுதிபடுத்தியது.

விருதுகள்

சோல் பெர்ல்மட்டர், பிறையன் சிமித் ஆகியோருடன் இரீசு 2006 இல் வானியலுக்கான சா பரிசைப் பெறுதல். இம்மூவரும் பின்னர் 2011 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசும் பெறுகின்றனர்.

இரீசு பசிபிச் வானியல் கழகத்தின் இராபர்ட் ஜே. டம்பிளர் விருதை 1999 இல் பெற்றுள்ளார். மேலும் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தின்போக் பரிசையும் 2001 இல் பெற்றுள்ளார். இவர் 2003 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் எலென் பி. வார்னர் பரிசையு பெற்றுள்ளார்.இரேமாண்டு பிவெர்லி சாக்ளர் பரிசை 2004 இல் தன் அண்ட முடுக்க ஆய்வுக்காகப் பெற்றார்.

இவர் 2006 இல் வானியலுக்கான ஒரு மில்லியன் டாலர் இழ்சா பரிசை சௌல் பெர்ல்மட்டர், பிரியான் பி. சுக்கிமிடு ஆகியோரோடு இணைந்து அண்ட முடுக்க ஆய்வுக்காகப் பெற்றார்.[9]

சுக்கிமிடுவும் உயர் Z குழுவின் உறுப்பினர்களும் 2007 இல் மீவிண்மீன்வெடிப்புத் திட்ட்த்தில் 500,000 டாலர் குரூபர் அண்டவியல் பரிசை விரிவுறும் அண்டம் முடுக்கமுறுவதைக் கண்டுபிடித்ததற்காகப் பெற்றனர். இவர் 2998 இல் மெக் ஆர்த்தர் அறிதிறனர் நல்கையைப் பெற்றார். இவர் 2009 இல் தேசிய அறிவியல் கல்விக்கழகத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார்.[10]

விரிவுறும் அண்டம் முடுக்கமுறுதலைக் கண்டுபிடித்ததற்காக, இவர் பெர்ல்மட்டர், சுக்கிமிடு இருவரோடு இணைந்து 2011 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.[9]

இரீசும் பிறையன் சுக்கிமிடுவும் உயர்-Z குழுவும் 2015 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் பரிசை அடிப்படை இயற்பியலுக்காற்றிய பங்களிப்புக்காகப் பெற்றனர்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆடம் இரீசு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆடம்_இரீசு&oldid=3232736" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை