ஆண் (பால்)

ஆண் விலங்கு அல்லது தாவரம்

ஆண் () (Male, ♂) என உயிரினங்களில் அல்லது உயிரினப் பகுதிகளில் விந்தணுக்களை உருவாக்கும் பால் குறிக்கப்படுகிறது. கருக்கட்டலின் போது ஒவ்வொரு விந்தணுவும் அதனைவிடப் பெரிய பெண் பாலணு அல்லது சூல் முட்டையுடன் ஒன்றிணைகிறது. ஓர் ஆணால் குறைந்தது ஓர் சூல் முட்டையாவது இல்லாமல் இனப்பெருக்கம் செய்ய முடியாது. ஆனால் சில உயிரினங்களில் பாலியல் மற்றும் பால்சாரா இனப்பெருக்கம் நிகழ்கிறது.

உரோமை ஆண் கடவுள் மார்சின் சின்னம் ஆண் பாலினத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக இக்குறி செவ்வாய்க் கோளையும் வேதியியலில் இரும்பையும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானதொரு பாலின அமைவு அமைப்பு கிடையாது. மனிதர் உட்படப் பெரும்பாலான விலங்குகளில் பாலினம் மரபணுக்கள் மூலமாகத் தீர்மானிக்கப்படுகின்றன. சிலவகை உயிரினங்களில் இவை சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பிற காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.

வெவ்வேறு மரபு வழியில் வந்த உயிரினங்களில் இரண்டு பாலினங்கள் இருப்பதற்கான தெரிவு தனிப்பட்ட முறையில் நிகழ்ந்துள்ளது. (பார்க்க குவி பரிணாமம்).[1]

இவற்றையும் காண்க

விக்கிமீடியா பொதுவகத்தில்,
males
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆண்_(பால்)&oldid=2786309" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை