ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி

(ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி ஆப்கானித்தான் நாட்டினை முன்னிருத்தி சர்வதேச துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடும் துடுப்பாட்ட அணியாகும். துடுப்பாட்டம் 19 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆப்கானித்தானில் விளையாடப்பட்டாலும், சமீபத்திய ஆண்டுகளில் மட்டுமே அந்த அணி முக்கியத்துவம் பெற்று உள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் கூட்டமைப்பு 1995 ல் உருவாக்கப்பட்டு மற்றும் 2001 ல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,) ஒரு கூட்டு உறுப்பினராக ஆனது.[14]. 2003ல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினராகஆனது. .[15], 9 நவம்பர் 2011வரை சர்வதேச இருபது20 போட்டிகளில் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர்.[16]

ஆப்கானித்தான் தேசியத் துடுப்பாட்ட அணி
சார்புஆப்கானித்தான் துடுப்பாட்ட வாரியம்
தனிப்பட்ட தகவல்கள்
தேர்வுத் தலைவர்அசுமதுல்லா சகிதி
ஒரு-நாள் தலைவர்அசுமதுல்லா சகிதி
இ20ப தலைவர்ரஷீத் கான்[1][2]
பயிற்றுநர்ஜொனாதன் ட்ரொட்
வரலாறு
தேர்வு நிலை2017
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
ஐசிசி நிலைஇணை உறுப்பினர் (2001)
Associate Member (2013)
முழு உறுப்பினர் (2017)
ஐசிசி மண்டலம்ஆசியா
ஐசிசி தரம்தற்போது [7]Best-ever
தேர்வு11-ஆவது9-ஆவது (1 மே 2020)[3]
ஒரு-நாள்9-ஆவது8-ஆவது (9 சூலை 2023)[4][5]
இ20ப9-ஆவது7-ஆவது (5 மே 2019)[6]
தேர்வுகள்
முதல் தேர்வுஎ.  இந்தியா எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர், இந்தியா 14–18 சூன் 2018
கடைசித் தேர்வுஎ.  வங்காளதேசம் சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், மிருப்பூர்; 14–17 சூன் 2023
தேர்வுகள்விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [8]73/4
(0 சமன்கள்)
நடப்பு ஆண்டு [9]10/1 (0 சமன்கள்)
பன்னாட்டு ஒருநாள் போட்டிகள்
முதலாவது பஒநாv.  இசுக்காட்லாந்து பெனோனி; 19 ஏப்ரல் 2009
கடைசி பஒநாv.  இந்தியா அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், தில்லி; 11 அக்டோபர் 2023
பஒநா(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [10]15473/76
(1 சமன், 4 முடிவில்லை)
நடப்பு ஆண்டு [11]133/10
(0 சமன், 0 முடிவில்லை)
உலகக்கிண்ணப் போட்டிகள்3 (முதலாவது 2015 இல்)
சிறந்த பெறுபேறுகுழு நிலை (2015, 2019)
உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள்2 (முதலாவது 2009 இல்)
சிறந்த பெறுபேறுவாகையாளர் (2018)
பன்னாட்டு இருபது20கள்
முதலாவது ப20இஎ.  அயர்லாந்து பி. சரா, கொழும்பு; 1 பெப்ரவரி 2010
கடைசி ப20இஎ.  இந்தியா செச்சியாங் பல்கலைக்கழக அரங்கு, காங்சூ; 7 அக்டோபர் 2023
இ20ப(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [12]11874/42
(1 சமன், 1 முடிவில்லை)
நடப்பு ஆண்டு [13]116/4
(0 சமன், 1 முடிவில்லை)
ப20 உலகக்கிண்ணப் போட்டிகள்6 (first in 2010)
சிறந்த பெறுபேறுசூப்பர் 10 (2016)
உலக இ20 தகுதுகாண் போட்டிகள்4 (முதலாவது 2010 இல்)
சிறந்த பெறுபேறுவாகையாளர் (2010)

தேர்வு

பஒநா

இ20ப

இற்றை: 11 அக்டோபர் 2023

ஒருநாள் போட்டிகளில்

2011 கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிப் போட்டியில், ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பைக்கு முன்னேறத் தவறியது, ஆனால் நான்கு ஆண்டுகள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடும் தகுதியினைப் பெற்றது.[17] அவர்களது முதல் ஒருநாள் போட்டி ஸ்காட்லாந்திற்கு எதிராக விளையாடினர். இதற்கு முன்னர் நடந்த போட்டிகளில் அந்த அணியினை ; ஆப்கானிஸ்தான் 89 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[18]

கண்டங்களுக்கு இடையிலான துடுப்பாட்ட கோப்பையில் ஆப்கானிஸ்தான் தனது முதல் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியை ஜிம்பாப்வே லெவன் அணிக்கு எதிராக முத்தாரேவில் நான்கு நாள் போட்டியில் விளையாடியது. அந்தப் போட்டி சமன் ஆனது. இருந்தபோதிலும் அந்த போட்டியில் அப்கானித்தான் அணியின் நூர் அலி தனது இரு ஆட்டப்பகுதிகளிலும் நூறு ஓட்டங்கள் அடித்தார்., இது அவர்களின் முதல் தர அறிமுகத்தில் இந்தச் சாதனையினை செய்த நான்காவது வீரர் ஆவார். பின்னர், ஆகஸ்ட் 2009 இல், வி.ஆர்.ஏ கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அதே போட்டியில் நெதர்லாந்தை எதிரான போட்டியில் குறைந்த பட்ச ஓட்டங்களே எடுத்தனர். இருந்தபோதிலும் ஆப்கானித்தான் அணி ஓர் இலக்கில்வெற்றி பெற்றது [19]

பின்னர் ஆப்கானிஸ்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த 2009 ஏ.சி.சி இருபது -20 கோப்பையில் பங்கேற்றது. அ பிரிவில் நடைபெற்ற போட்டி சமன் ஆனது பின், குழு நிலைகளின் முடிவில் ஐந்து போட்டிகளிலும் வென்று ஆப்கானிஸ்தான் முதலிடம் பிடித்தது, அரையிறுதியில் ஆப்கானியர்கள் குவைத்தை 8 இலக்குகளில் தோற்கடித்தனர்.[20] இறுதிப் போட்டியில் அவர்கள் போட்டியினை நடத்திய ஐக்கிய அரபு எமிரேட்ஸை அணியால் 84 ஓட்டங்களில் தோற்கடிக்கப்பட்டனர்.[21]

பிப்ரவரி 1, 2010 அன்று, ஆப்கானிஸ்தான் அயர்லாந்திற்கு எதிராக முதல் இருபது -20 சர்வதேச போட்டியில் விளையாடியது,[22] அந்தப்போட்டியில் 5 இலக்குகளில் தோற்றனர்.[23] 13 பிப்ரவரி 2010 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 இலக்குகளில் வீழ்த்தியது. இதுவே ஆப்கானித்தான் அணியின் முதல் வெற்றியகும். 2010 ஐ.சி.சி உலக இருபது -20 தகுதிப் போட்டியின் இறுதி தகுதிச் சுற்ருப் போட்டியில் இவர்கள் அயர்லாந்து அணியினை தோற்கடித்தனர்.[24] ஆப்கானிஸ்தான் அணி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் ஆகிய முக்கிய அணிகள் அடங்கிய சி குழுவில் இருந்தது. இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியின் போது, தொடக்க பேட்ஸ்மேன் நூர் அலி 50 ரன்கள் எடுத்தார், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 115 ரன்கள் ஓட்டங்கள் எடுத்தனர். இருந்த போதிலும் அந்தப்போட்டியில் இந்திய அணி எட்டுஇலக்குகளால் வெற்றி பெற்றது.[25] அவர்களின் இரண்டாவது போட்டியில், அணி ஒரு கட்டத்தில் 14 ஓட்டங்களில் ஆறுஇலக்குகளைஇழந்திருந்தது. பின்னர் மிர்வாய்ஸ் அஷ்ரப் மற்றும் ஹமீத் ஹசன் ஆகியோரின் ஒத்துழைப்பால் ஆப்கானிஸ்தானில் 88 ரன்கள் ஆட்டமிழந்தது. அந்தப் போட்டியில் ஆப்கானித்தான் அணி 59 ஓட்டங்களில் தோல்வியடைந்தது.[26]

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்