ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணி

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய துடுப்பாட்ட அணி (The United Arab Emirates national cricket team அரபு மொழி: فريق الإمارات الوطني للكريكيت‎ ) என்பது சர்வதேச துடுப்பாட்டடில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி. அவை எமிரேட்ஸ் துடுப்பாட்ட வாரியத்தால் (ஈசிபி) நிர்வகிக்கப்படுகின்றன, இது 1989 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் (ஐசிசி) துணை உறுப்பினராகவும்.[1] 2005 முதல், ஐ.சி.சியின் தலைமையகம் துபாயில் அமைந்துள்ளது.

வளர்ந்து வரும் ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) அணிகளில் ஒன்றான [2] ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2000 மற்றும் 2006 க்கு இடையில் தொடர்ச்சியாக நான்கு போட்டித் தொடர்களில் ஏ.சி.சி கோப்பையினை வென்றது, மேலும் 1996, 1998 இல் போட்டிகளில் விளையாடிய காலங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது [1] மற்றும் 2008.[3] அவர்கள் 1994 இல் ஐ.சி.சி கோபையினை வென்றனர், மேலும் அந்த ஆண்டில் முதல் ஒருநாள் போட்டிகளில் விளையாடினர், பின்னர் 1996 துடுப்பாட்ட உலகக் கிண்ணக் கோப்பையில் விளையாடினர் .[1] மேலும் 2004 மற்றும் 2008 ஆசிய கோப்பைத் துடுப்பாட்டத் தொடர்களிலும் இந்த அணுஇ விளையாடியது. 2014 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஸ்காட்லாந்திற்கு அடுத்த இடத்தைப் பிடித்தது, 2015 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்தன் மூலம் 2018 ஆம் ஆண்டு வரை ஒருநாள் போட்டிகளில் விளையாடும் தகுதியினைப் பெற்றது.[4]

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2014 ஐசிசி உலக இருபது குரூப் ஸ்டேஜ் வரை சென்றது . இந்த அணி 2019 ஐசிசி டி 20 உலகக் கோப்பை தகுதிப் போட்டிக்கு விளையாட்டு நடத்தும் நாடு என்பதாக தகுதி பெற்றுள்ளது .

வரலாறு

1994 ஐ.சி.சி வாகையாளர் கோபை

கென்யாவில் நடைபெறும் போட்டிகளுக்கான நேரத்தில் ஒரு வெற்றிகரமான தேசிய அணியை உருவாக்கும் நம்பிக்கையில், ஈ.சி.பி., இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் முதல் தர அனுபவமுள்ள பல வீரர்களை நாட்டில் வேலைவாய்ப்பு பெற அழைத்தனர், இதன்மூலம் அவர்களை ஐக்கிய அரபு அணி சார்பாக போட்டிகளில் கலந்துகொள்ல வைக்க நினைத்தனர்.[2]

சுல்தான் சரவானியின் அணியின் தலைவராக இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோப்பையை வென்றது, இதனால் 1996 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது .[2] இறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட் கென்யாவை தோற்கடித்தது,[5] இந்த தோல்வியினைப் பொறுத்துக்கொள்ள இயலாத கென்யா வீரர்களும் துடுப்பாட்ட வாரியமும் இவர்களை இறக்குமதி செய்யப்பட்ட கூலிப்படையினரின் குழு என்று வர்ணித்தனர்.[2] இந்த சர்ச்ச்சையில் ஐ.சி.சி ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்தபோதிலும், எதிரகாலத்தில் இது தொடர்பாக இருக்கமான முடிவுகள் எடுக்கப்பட்டன.[2]

முதல் ஒருநாள் போட்டிகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 1994 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் கலந்து கொண்ட -ஆசிய கோப்பையில் இந்த அணி தனது முதல் ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.[6] அதே ஆண்டு கென்யா மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான முத்தரப்பு தொடரில் இந்த அணி கடைசி இடத்தைப் பிடித்தனர், மேலும் 1995 இல் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் ஏ தரப்பினருக்கு எதிரான போட்டிகளில் கடைசி இடத்தைப் பிடித்தனர். அவர்கள் 1996 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடினார்கள் அங்கு அவர்கள் நெதர்லாந்துக்கு எதிரான ஒரு போட்டியைத் தவிர அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்தனர்.[1]

ஆட்ட வரலாறு

உலகக்கிண்ணம்

  • 1992 - பங்கு பற்றவில்லை
  • 1996 - முதல் சுற்று
  • 1999 முதல் 2007 - தகுதி பெறவில்லை

ஐசிசியின் கண்டங்களுகிடையிலான கிண்ணம்

  • 2004 - அரை இறுதிகள்
  • 2005 - அரை இறுதிகள்

ஐசிசி கேடயம்

  • 1990 - பங்கு பற்றவில்லை
  • 1994 - வெற்றி
  • 1997 - 10வது இடம்
  • 2001 - 5வது இடம்
  • 2005 - 6வது இடம்

ஆசியக் கிண்ணம்

  • 1990/91 - பங்கு பற்றவில்லை
  • 1995 - பங்கு பற்றவில்லை
  • 1997 - தகுதி பெறவில்லை
  • 2000 - தகுதி பெறவில்லை
  • 2004 - முதற் சுற்று
  • 2008 - முதற் சுற்று

ஏசிசி வெற்றிக் கேடயம்

  • 1996 - இரண்டாம் இடம்
  • 1998 - அரை இறுதிகள்
  • 2000-2006 - வெற்றி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

சான்றுகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை