ஆஸ்திரலேசியா

ஆஸ்திரலேசியா (Australasia) என்பது ஓசியானியாவில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினி, மற்றும் இவற்றுக்கு அருகே பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுகளையும் உள்ளடக்கியது. ஆஸ்திரலேசியா என்ற சொல்லை 1756 ஆம் ஆண்டில் சார்ல்ஸ் டி புரொசஸ் என்பவர் தனது Histoire des navigations aux terres australes என்ற புத்தகத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். (1756). இலத்தீன் மொழியில் "ஆசியாவின் தெற்குப் பகுதி" என இது பொருள்படும்.

உலக வரைபடத்தில் ஆஸ்திரலேசியா
ஓசியானியாவின் பகுதிகள். நியூசிலாந்து ஆஸ்திரலேசியா, பொலினேசியா ஆகிய இரண்டினதும் பகுதியாகக் கருதப்படுகிறது. மெலனேசியாவின் பல பகுதிகள் ஆஸ்திரலேசொஇயாவின் பகுதிகளாகக் கருதப்படுகிறது.
1908-1912 இல் ஆஸ்திரலேசியாவின் ஒலிம்பிக் சின்னம்

முன்னர் ஆஸ்திரலேசியா என்பது ஆஸ்திரேலியா/நியூசிலாந்து கூட்டு விளையாட்டு அணிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. 1905 முதல் 1915 வரையான காலப்பகுதியில் டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டிகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளின் சிறப்பு வீரர்கள் கூட்டாகப் பங்குபற்றி 1907, 1908, 1909, 1911, 1914 போட்டிகளில் வெற்றி பெற்றனர். மேலும் 1908, 1912 இல் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் கூட்டாகப் பங்குபற்றினர். ஆஸ்திரலேசிய அணி 1911 ஆம் ஆண்டில் லண்டனில் நடந்த பேரரசின் விழாவிலும் பங்குபற்றியிருந்தது.[1][2][3]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆஸ்திரலேசியா&oldid=3768836" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை